ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவனித்துக் கொள்ள செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவனித்துக் கொள்ள செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவனித்துக் கொள்ள செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவனித்துக் கொள்ள செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

உங்கள் குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருக்கும்போதே, அதன் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொண்டாக வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு மனிதன் எப்போது முழுமையான குடும்பஸ்தன் ஆகிறான் தெரியுமா? இதுநாள் வரையிலும் தாய், தந்தைக்கு மகனாக வாழ்க்கையை நடத்தி வந்த ஒரு நபர், இப்போது திருமணம் ஆகி அவரும் குழந்தைக்கு தந்தையாக மாறும்போது முழு குடும்பஸ்தனாக மாறுகின்றார்.

ஏனென்றால், தன்னுடைய பெற்றோர் இதுநாள் வரை எந்த மனநிலையில் நம்மை கவனித்துக் கொண்டனர் என்பதை, ஒரு குழந்தைக்கு தகப்பானாகிய பிறகுதான் அவர் உணரத் தொடங்குவார். தந்தை என்பது வெறும் வார்த்தை அல்ல.

உங்கள் குழந்தைக்கான ஹீரோவாக, ஆலோசகராக, தலைவராக நீங்கள் தான் இருப்பீர்கள். சின்ன வயதில் உங்கள் தந்தை என்னவெல்லாம் சொன்னாரோ, அதெல்லாம் சரிதான் என்பதை இப்போது நீங்கள் உணர தொடங்குவீர்கள். அதே சமயம், நீங்கள் முரண்டு பிடித்ததைப் போலவே இப்போது உங்கள் பிள்ளை முரண்டு பிடிக்கத் தொடங்கும்.

குறிப்பாக உங்களுக்கு 40 வயது நெருங்கும்போது, நீங்கள் உங்களுடைய பெற்றோரின் தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம் குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமை உங்களோடு இருக்கும். ஆக, மிக கடினமான சூழலில் நீங்கள் வாழும் நிலையில், அதை திட்டமிட்டு எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்கு 10 வயதுக்கு குறைவாக இருக்கும்போதே, அதன் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொண்டாக வேண்டும்.

Also Read : மன அழுத்தம் வாழ்க்கையிலிருந்து விடு பட நினைக்கிறீர்களா..? மகிழ்ச்சிக்கான வழிகள் இதோ...

உயர் கல்விக்கான திட்டமிடல்

உங்கள் குழந்தையை 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சேர்க்கும்போது எவ்வளவு செலவு ஆகும், அடுத்த என்ன படிக்க வைக்கப் போகிறீர்கள், அதற்கு என்ன செலவு ஆகும் என்பதையெல்லாம் முன்கூட்டியே யூகித்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளை பாரம்பரியமிக்க தனியார் கல்வி நிறுவனத்தில் அல்லது வெளிநாட்டில் படிக்க வைக்க நினைத்தால், அதற்போது இப்போதே உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

திருமணம்

குழந்தையை படிக்க வைப்பதோடு நம் கடமை முடிந்து விடாது. என்னதான் படித்து முடித்ததும் அவர்கள் வேலைக்கு சென்றாலும், சேமிப்பு என்பது உடனடியாக இருக்காது. அத்தகைய தருணத்தில் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும். அது தங்கமாக இருக்கலாம் அல்லது வீட்டு மனையாக இருக்கலாம்.

Also Read : தாயின் உடல் பருமன் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்குமா..?

பெற்றோரை பராமரித்துக் கொள்வது எப்படி

குழந்தையின் எதிர்காலத்திற்காக அல்லும், பகலும் திட்டமிடும் நாம், நம்மை அப்படி போற்றி வளர்த்த பெற்றோரை மறந்துவிட முடியாது அல்லவா? ஆகவே, உங்கள் பெற்றோரின் தினசரி தேவைகள், மருத்துவ செலவுகள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளும் வகையில் சில நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

நிலையான வருமானம்

பெற்றோரின் செலவுகளை தனியாக கவனித்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு தனித்த வருமானம் ஒன்றை நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது வீடு அல்லது கடை வாடகையாக இருக்கலாம். அல்லது பிக்ஸட் டெபாசிட் போன்ற சேமிப்புத் திட்டங்களின் மூலமாக கிடைக்கும் வட்டியாக இருக்கலாம்.

மருத்துவ செலவுகளுக்கு…

பெற்றோரின் மருத்துவ செலவுகளை சமாளிக்கும் வகையில், அவர்களுக்கான பிரத்யேக மருத்துவ காப்பீட்டு திட்டங்களை நீங்கள் கையில் எடுக்கலாம். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தீவிர நோய்கள் மற்றும் நீண்டகால நோய்கள் தாக்கத் தொடங்கும். அதற்கு ஏற்றபடி நீங்கள் மருத்துவக் காப்பீட்டை தேர்வு செய்வது நல்லது.

இரண்டையும் சமாளிப்பது எப்படி

ஒரு தந்தையாக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்க வேண்டும் மற்றும் ஒரு மகனாக உங்கள் பெற்றோரையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இது மிகுந்த சவாலான கால கட்டம் தான். இதை எப்படி எதிர்கொள்வது என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும் அல்லது நிதி ஆலோசகர்களின் அறிவுரைப்படி செயல்படலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips