முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சமீரா ரெட்டியின் இரு குழந்தைகளுக்கும் கொரோனா பாசிடிவ்..மனம் தளரவில்லை - அம்மாக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் பதிவு..!

சமீரா ரெட்டியின் இரு குழந்தைகளுக்கும் கொரோனா பாசிடிவ்..மனம் தளரவில்லை - அம்மாக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் பதிவு..!

சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி

அச்சமின்றி புத்திசாலித்தனமாக இருக்க வேண்டிய நேரம் இது. கொரோனா பாசிட்டிவ் என்ற போதிலும் நாங்கள் எதிர்மறையாக எதையும் யோசிக்கவில்லை. உற்சாகமாக இருக்கிறோம். தொடர்ந்து இருப்போம்.

  • Last Updated :

கொரோனா தொற்றின் முதல் அலையை விட, இரண்டாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை சமீரா ரெட்டி, அவரது கணவர் மற்றும் இரு குழந்தைகள் என அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் சமீராவின் குழந்தைகளான 5 வயது ஹன்ஸ் மற்றும் 2 வயது நைரா ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சமீராவிற்கும், அவரது கணவர் அக்ஷய் வர்தேவுக்கும் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து தங்களை குடும்பத்தோடு தனிமைப்படுத்தி கொண்டனர்.

மருத்துவர்கள் அறிவுரையின்படி தொற்றிலிருந்து மீள முறையான வழிமுறைகளை பின்பற்றி வருவதாக சமீரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய இன்ஸ்டா பதிவில் "முதலில் பீதி அடையாமல் இருப்பது கடினம் என்றாலும், தேவையான வலிமையை ஏற்படுத்தி கொண்டு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். தனது குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அந்த பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீரா வெளியிட்டுள்ள பதிவில், எனது குழந்தைகள் ஹன்ஸ் மற்றும் நைரா பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். எனவே அவர்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களை இங்கே தெரிவிக்கிறேன் .

கடந்த வாரம் குழந்தை ஹன்ஸுக்கு அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சில வயிறு உபாதைகள் மற்றும் கடும் சோர்வு இருந்தது. இந்த கோளாறுகள் 4 நாட்கள் வரை நீடித்தது. தொற்று தீவிரமாகியுள்ள இந்த நேரத்தில் இதை எங்களால் லேசாக கடந்து செல்ல முடியவில்லை. எனவே ஹன்ஸை பரிசோதித்தோம். பார்த்தால் கோவிட் பாசிட்டிவ் என்ற முடிவு வந்தது. இதை கேட்டதுமே நான் முழு பீதியை உணர்ந்தேன் என்பதை இங்கே ஒப்பு கொள்கிறேன்.

குழந்தைகளை எளிதில் தாக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் - கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?

இந்த சூழலை கையாள எவ்வளவு தயாராக இருந்தாலும் முழுமையாக தயாராகவில்லை என்பதாகவே உள்ளுக்குள் இருக்கும். ஹன்ஸை தொடர்ந்து குழந்தை நைராவிற்கும் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் குளிர் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்த பாராசிட்டமால் கொடுத்தேன். இரண்டாவது அலை பல குழந்தைகளை பாதிக்கிறது என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமான விஷயம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டுள்ளது என மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
 
View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)வைட்டமின் சி, மல்டிவைட்டமின், ஒரு புரோபயாடிக் மற்றும் ஜின்க்(zinc) உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு தேவையான வசதி எல்லாவற்றையும் நான் செய்துள்ளேன். எனவே தொடரில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இருவரும் மிகுந்த உற்சாகமாக உள்ளனர் என்றும் சமீரா குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "தொற்றால் பாதிக்கப்பட்ட பின் ஒரு சில நாட்களில் உங்கள் குழந்தைகள் அறிகுறியற்றவர்களாக இருந்தாலும், தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய கட்டாயம் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். அப்போது தான் மேலும் சிலருக்கு தொற்று பரவாது என்பதை நினைவில் கொள்வது அவசியம்", என குறிப்பிட்டுள்ளார்.

தொற்றிலிருந்து மேலும் முயற்சியாக மருந்துகள், நீராவியை உள்ளிழுத்தல், நீரில் உப்பு போட்டுவாய் கொப்பளித்தல், சுவாச பயிற்சிகள், பிராணயாமா மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்து வருகிறோம். மேலும் எங்கள் மருத்துவரின் பரிந்துரைகளை விடா முயற்சியுடன் பின்பற்றுகிறோம். அச்சமின்றி புத்திசாலித்தனமாக இருக்க வேண்டிய நேரம் இது. கொரோனா பாசிட்டிவ் என்ற போதிலும் நாங்கள் எதிர்மறையாக எதையும் யோசிக்கவில்லை. உற்சாகமாக இருக்கிறோம். தொடர்ந்து இருப்போம். உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க எச்சரிக்கையாக இருங்கள் என்று தனது நீண்ட பதிவில் சமீரா கூறியுள்ளார்.

First published:

Tags: Covid-19, Nutrition, Sameera Reddy