சரியான நேரத்தில்  போடும்  தடுப்பூசி: குழந்தையின் நல்ல ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது

தடுப்பூசி போடும் பொழுது  முழுமையான பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதை  தெரிந்துகொள்ள  தொடர்ந்து படிக்கவும்.

சரியான நேரத்தில்  போடும்  தடுப்பூசி: குழந்தையின் நல்ல ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது
தடுப்பூசி
  • Share this:
'வரும் முன் காப்பதே நலம்'. இது ஒரு பழைய பழமொழி, ஆனால் பல விஷயங்களுக்கு உண்மையாக நிற்கிறது. குறிப்பாக உங்கள் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நல்ல ஆரோக்கியதிற்கான ஒரே மந்திரம் இதுதான் . தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, சமீபத்தில் பெற்றோரானவர்கள் அல்லது பெற்றோர்கள் ஆக காத்திருப்பவர்கள்,  என பலருக்கும் எப்போதும் நிறைய சந்தேகங்கள் உள்ளன; இது இயற்கையானது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால், எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் உங்கள் குழந்தை மருத்துவரை அணுக வேண்டும். அடுத்து, நம்பகமான  ஆதாரங்களிலிருந்து  கற்றுக்கொள்வது, உண்மையில் தடுப்பூசிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும்  சரியான நேரத்தில் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.

சரியான நேரத்தில் தடுப்பூசிகள் ஏன் முக்கியம்?


நீண்ட கால பாதுகாப்பிற்காக சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது (குழந்தை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையின்படி) சிறந்தது. உங்கள் பிள்ளைகளுக்கு  பல்வேறு நோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும், சிலநேரங்களில் இது உயிருக்கு ஆபத்தான நோய்களாக கூட மாறக்கூடும்.

பொதுவாக குழந்தைகளின்  உடலமைப்பு  முழுமையாக உருவாக்கப்படவில்லை, இது ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளுக்கு  நோய் தொற்று பெறும் அபாயம் ஏற்பட்டால் அவர்கள் மட்டும் அச்சுறுத்தப்படுவது இல்லை, அவர்கள் நோய் தொற்று பெற்றவுடன் மற்றவரிடமும் பரப்புவதற்கான வாய்ப்பும் உள்ளது. தடுப்பூசிகள் உங்கள் பிள்ளைக்கு உதவுவதோடு நோய்  பரவும் அபாயத்தையும் குறைக்கின்றது.

அவர்களுக்கு அம்மை அல்லது  கக்குவான் இருமல் / தொடர் இருமல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், எதுவும் தவறாக நடக்காமல் பார்த்துக் கொள்வது எப்போதும் நல்லது. தடுப்பூசிகளை நீங்கள் வாகனம் ஓட்டும்போது அணியும் சீட் பெல்ட் என்று நினைத்து கொள்ளுங்கள்.  தடுப்பூசிகள் முக்கியமாகும் அதை சரியான நேரத்தில் போடுவது மிகவும் முக்கியமானதாகும். சீட்  பெல்ட் போல தடுப்பூசிகள் ஒரே  வழியில் செயல்படுகின்றன.உங்கள் தடுப்பூசி அட்டையை சரிபார்த்து, ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் குழந்தை மருத்துவரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம் .

உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவணையில் COVID-19 - ஆல் மாற்றம் நிகழ்கிறதா?

இவை கடினமான காலங்கள், தற்போது பெற்றோரானவர்கள் அல்லது பெற்றோர்கள் ஆக காத்திருப்பவர்கள் உங்கள் குழந்தையின் உடல்நலம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போதைய காலங்களில் உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவணையை எவ்வாறு பராமரிப்பது என்பதில் பல சந்தேகங்கள் இருக்ககூடும், ஏனென்றால் இவை எல்லா வகையான ஆபத்துகளுக்கும் வழிவகுக்கும் என்றாலும்.

கவலைப்படாதீர்கள். WHO தடுப்பூசி ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளது, அதை உணர்ந்து அதன்படி நடக்கவேண்டும். நீங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வீட்டு அத்தியாவசியங்களைப் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

நீங்கள் வெளியே செல்லும்போது நீங்கள் பாதுகாப்பான   விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியை அடிக்கடி பயன்படுத்துவதை உறுதிசெய்யுங்கள், சம்பந்தப்பட்ட அனைவரும் முகமூடிகளை அணிந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வெளியில் இருக்கும்போது மேற்பரப்புகளுடன்  தொடர்பை தவிர்க்கவும், மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றவும்  இதன்மூலம் உங்கள் குழந்தையை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

பெற்றோராகயிருப்பது  ஒரு கடினமான பணி, மற்றும் பெற்றோராக உங்கள் குழந்தையின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை தாருங்கள். உங்களிடம் இருக்ககின்ற  அக்கறையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடுவது அந்த கவலைகளைத் தணித்து நீண்ட தூரம் கொண்டு செல்லும். எனவே உங்கள் குழந்தை மருத்துவருடன் தொடர்பு கொள்ளுங்கள், உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

Disclaimer: Information appearing in this material is for general awareness only. Nothing contained in this material constitutes medical advice. Please consult your physician for medical queries, if any, or any question or concern you may have regarding your condition. Issued in public interest by GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India. NP-IN-GVX-OGM-200070, DOP July 2020.

References:
https://www.cdc.gov/vaccines/parents/why-vaccinate/vaccine-decision.html
https://www.cdc.gov/vaccines/parents/visit/vaccination-during-COVID-19.html
https://www.who.int/immunization/news_guidance_immunization_services_during_COVID-19/en/

 
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading