ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளின் சமூக வளர்ச்சிக்கு உதவும் தாள இசை : ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்

குழந்தைகளின் சமூக வளர்ச்சிக்கு உதவும் தாள இசை : ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்

குழந்தைகள் இசையை ஏன் கேட்க வேண்டும்.?

குழந்தைகள் இசையை ஏன் கேட்க வேண்டும்.?

இதோடு குழந்தைப் பிறந்தவுடன் கருவில் கேட்கப்படும் இசை மற்றும் பாடல்கள் மீது அக்குழந்தைக்கு இயற்கையாகவே ஈர்ப்பு ஏற்படுகிறது. மேலும் குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு தாய்ப்பாடும் தாலாட்டும் குழந்தைக்கு இயற்கையாவே இசையின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

“இசை“ ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் துன்பத்திலும், இன்பத்திலும் பங்கேற்றும் நம்முடைய நண்பர்கள் போன்றது. என்னதான் மற்றவர்களிடம் பேசினாலும், சிறிது நேரம் தனிமையில் அமர்ந்துப் பிடித்த பாடகர்களின் இசையைக் கேட்டாலே போதும். மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் சட்டென்று பறந்தோடிவிடும். குறிப்பாக உலகெங்கிலும் பல்வேறு வகையான உடல் மற்றும் மனநலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இசையைப் பயன்படுத்துகின்றனர். பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவருக்கும் இசை மருந்தாக அமைகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் குழந்தைகளின் சமூக வளர்ச்சிக்கு தாள இசை உதவுகிறது என்றும், குழந்தைகளின் அறிவுத்திறனையும் மேம்படுத்த உதவுகிறது என்கின்றது சமீபத்திய ஆய்வுகள்.

சிறு வயதிலேயே கலாச்சார நிகழ்வுகளில் சில குழந்தைகள் அசாத்திய திறமையுடன் பாடுவதை நாம் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். எப்படி? இவர்களால் இப்படி முடிகிறது? என்று கூட சில நேரங்களில் யோசிப்போம். சில குழந்தைகளுக்கு மரபு ரீதியாகவே நல்ல குரல் திறன் இருக்கும். மேலும் கருவிலிருக்கும் போதே குழந்தை, தாயின் இதயத்துடிப்பையும், அவர் கேட்கும் இசையை கூர்ந்துக் கவனிக்கிறது. இதோடு குழந்தைப் பிறந்தவுடன் கருவில் கேட்கப்படும் இசை மற்றும் பாடல்கள் மீது அக்குழந்தைக்கு இயற்கையாகவே ஈர்ப்பு ஏற்படுகிறது. மேலும் குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு தாய் பாடும் தாலாட்டும் குழந்தைக்கு இயற்கையாவே இசையின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது.

இதோடு வயிற்றில் உள்ள ஒரு குழந்தைப் பெற்றோர்களின் குரல்களையும் இசையையும் வேறுபடுத்தி அறிய முடியும் என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தாள இசை குழந்தைகளின் சமூக வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது சமீபத்திய ஆய்வுகள். இது தொடர்பான நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், குழந்தைகளின் சமூக வளர்ச்சிக்கு இசை உணர்திறன் உதவும் என்று கண்டறிப்பட்டுள்ளது. 112 குழந்தைகளை உள்ளடக்கிய இந்த ஆராய்ச்சி, குழந்தைகளின் இசைத் திறனை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் ஆரம்ப கால சமூக உணர்ச்சியின் வளர்ச்சியில் இசையை உருவாக்குகிறது.

Also Read : கேரட் முதல் தக்காளி வரை... குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் 5 ஜூஸ் வகைகள்

எனவே குழந்தைகளின் இசை வளர்ச்சியை சிறு வயதில் இருந்தே தொடங்கப்பட வேண்டும் என்றும் வயதுக்கு ஏற்ப இதைத் தொகுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு. இவ்வாறு தாள இசையுடன் கூடிய பாடல்களும், விளையாட்டுகளும் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உடல் வளர்ச்சியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு சிறு வயதில் இருந்தே குழந்தைகளிடம் இசையைப் பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தால் குழந்தைகள் மிகவும் தெளிவான மற்றும் புரிந்துக் கொள்ளக்கூடிய இசை நிகழ்வுகளைக் கேட்க முடியும். இனி உங்களது குழந்தைகளும் சமூகத்தில் தனித்துத் தெரிய வேண்டும் என்றால் தாள இசையைக் கேட்க கற்றுக்கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Baby Care, Music, Newborn baby