முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சூப்பர் ஐடியா… சிகிச்சை பெறும் குழந்தைகள் விரைந்து குணமாக இதை செய்யுங்கள்!

ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சூப்பர் ஐடியா… சிகிச்சை பெறும் குழந்தைகள் விரைந்து குணமாக இதை செய்யுங்கள்!

40 பேர் வீதம் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்ட குழந்தைகளில், ஒரு குழுவுக்கு நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் கதை சொல்வதும், மற்றொரு குழுவுக்கு புதிர் கணக்குகளையும் பயிற்சி அளித்துள்ளனர்.

40 பேர் வீதம் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்ட குழந்தைகளில், ஒரு குழுவுக்கு நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் கதை சொல்வதும், மற்றொரு குழுவுக்கு புதிர் கணக்குகளையும் பயிற்சி அளித்துள்ளனர்.

40 பேர் வீதம் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்ட குழந்தைகளில், ஒரு குழுவுக்கு நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் கதை சொல்வதும், மற்றொரு குழுவுக்கு புதிர் கணக்குகளையும் பயிற்சி அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது, அவர்களுக்கு மன அழுத்தமும், வலியும் குறைந்து வேகமாக குணமாவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் இருக்கும் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் இதழில் IDOR அமைப்பு மற்றும் Federal University of ABC ஆகியவை இணைந்து நடத்திய 'கதை சொல்லி' குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு வெளியிட்டுள்ளது. கில்ஹெர்ம் புரோகிங்டன், ஜான் மோல் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தினர். இது குறித்து பேசிய ஆய்வாளர் கில்ஹெர்ம் புரோகிங்டன், கதை சொல்வது என்பது காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. மதம், அறிஞர்கள், வரலாறு, சமூக அமைப்பு, அந்தஸ்து என பல்வேறு நிலைகளிலும் பரந்து விரிந்திருக்கும் கதைசொல்லி முறை, ஆபத்து மற்றும் வலிகள் நிறைந்த மருத்துவமனை சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிய விரும்பியதாக கூறியுள்ளார்.

உணர்ச்சிகளை தூண்டி அதற்கு உயிர்கொடுக்கும் கற்பனை உலகத்தில் இருக்கும்போது, வலி மற்றும் மோசமான சூழல் இருக்கும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வருவதற்கு கதைசொல்லி முறை உதவியாக இருக்கும் என தாங்கள் நினைத்ததாக கூறினார். நிகழ்காலத்தில் சினிமா மிகச்சிறந்த கதைசொல்லி கருவியாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ள புரோகிங்டன், கதைகளும், கற்பனை கதாப்பாத்திரங்களும் கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்று, கேட்கும் கதைகளுக்கு ஏற்ப அக்கதாப்பாத்திரங்கள் தகவமைத்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் கதைசொல்லியில் இருப்பதாக விளக்கியுள்ளார்.

இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

கதைகள் மூலம் குழந்தைகளின் எண்ணங்களை மடைமாற்றம் செய்ய முடியும் என்றும், மன அழுத்தம் மற்றும் வலிகளால் வேதனைபடுபவர்களை மகிழ்ச்சிப்படுத்த கதை சொல்லி முறை உதவியாக இருப்பதாக ஆய்வாளர் ஜான் மோல் தெரிவித்துள்ளார். கதை சொல்லி மூலம் கிடைக்கும் நன்மைகளை அறிவியல் பூர்வமாக விளக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 81 குழந்தைகளிடம் இந்த சோதனையை அவர்கள் நடத்தினர். பிரேசில், சா பாலோ (Sao Paulo) நகரில் உள்ள ஜபாகுவாரா (Jabaquara Hospital) மருத்துவமனையில் நுரையீரல், ஆஸ்துமா, நிமோனியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இந்த சோதனையை ஆய்வாளர்கள் நடத்தினர்.

40 பேர் வீதம் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்ட குழந்தைகளில், ஒரு குழுவுக்கு நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் கதை சொல்வதும், மற்றொரு குழுவுக்கு புதிர் கணக்குகளையும் பயிற்சி அளித்துள்ளனர். பயிற்சிக்கு முன்பாக மன அழுத்தத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் கார்டிசோல் (cortisol) மற்றும் ஆக்சிடோசின் (oxytocin) ஹார்மோன்களின் நிலையை ஆய்வுக்குட்படுத்திக்கொண்டனர். இந்த சோதனைகளில் மன அழுத்தத்துக்கு காரணமாக கார்டிசோல் ஹார்மோனின் சுரப்பு குறைவாகவும், ஆக்சிடோசின் அளவு அதிகரித்ததையும் கண்டுபிடித்த ஆய்வாளர்கள், கதை சொல்லி பயிற்சியில் பங்கேற்ற குழந்தைகள் இருமடங்கு மகிழ்ச்சியை உணர்ந்ததையும் அறிந்து கொண்டனர்.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவது ஏன்? அதன் நோக்கம் என்ன? முதன்மை மருத்துவர் பகிரும் தகவல்கள்- பகுதி 2

வழக்கமான சுற்றுப்புறச் சூழல் இல்லாமல் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கிடைத்த இந்த தரவுகள், மன அழுத்தம் மற்றும் வலியை போக்குவதில் கதை சொல்லி முறை முக்கிய பங்கு வகித்ததை ஆய்வாளர்கள் உணர்ந்தனர். நேர்மறை எண்ணங்கள் மற்றும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு கதை சொல்லி பயிற்சி மிக முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த ஆய்வாளர்கள், மிகக் குறைந்த செலவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை இந்த ஆய்வின் மூலம் உணர்ந்ததாக கூறியுள்ளனர். கதைகள் நேர்மறையானதாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்தால், அதன் மீது குழந்தைகள் நம்பிக்கை கொள்வதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய முன்னேற்றத்தையும் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Child Care, Parenting