• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அவசரம் வேண்டாம் : நிபுணர்கள் சொல்வது என்ன?

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அவசரம் வேண்டாம் : நிபுணர்கள் சொல்வது என்ன?

குழந்தைகளிடையே கொரோனா வைரஸின் நீண்டகால தாக்கம் குறித்து தெளிவாக அறிய முடியாததால், இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதாகவும் ஒரு சிலர் விளக்கமளித்துள்ளனர்.

  • Share this:
கொரோனா தடுப்பூசிகள் இன்னும் முழுமையான சோதனைகளை நிறைவு செய்யவல்லை. கொரோனாவின் தீவிரம் அதிகரித்ததால், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது கட்ட பரிசோதனையில் இருக்கும்போதே பெரியவர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு தடுப்பூசிகள் போட, பல்வேறு வழிகாட்டுதல்களின்படி உலக நாடுகள் நடைமுறைப்படுத்தின.

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் துரிதகதியில் தடுப்பூசி போடுவதை முடுக்கிவிட்டன. இந்நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி, இதுவரை தெளிவான முடிவுகளை பெரும்பாலான நாடுகள் எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான சோதனைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது குறித்து ஆய்வு நடத்திய இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்துமாறு பரிந்துரைத்தனர்.

அந்த வயதினருக்கு வைரஸின் பாதிப்பு மிக குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் நோயின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதைத் தொடங்கியுள்ளனர். பல ஐரோப்பிய நாடுகளும் வரும் நாட்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கும் இளம் வயதினருக்கு மட்டும் தடுப்பூசி போடலாம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.கோவிட் பாதிப்பு மற்றும் இறப்புகள் 16 வயதூக்கு உட்பட்டவர்களிடையே மிக அரிதாக இருப்பதால், இந்த முடிவை இங்கிலாந்து எடுத்துள்ளது. மேலும், உலகின் பெரும்பாலான நாடுகள் முதல் டோஸ் தடுப்பூசிகளை பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், வல்லரசு நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கினால், அவை தடுப்பூசி பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்திய நிபுணர்கள் சொல்வது என்ன?

தடுப்பூசி நிபுணர் மருத்துவர் ககன்தீப் காங் பேசும்போது, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா பல விடை தெரியாத கேள்விகளை ஆராய வேண்டும் என கூறியுள்ளார். செயலிழந்த வைரஸ் தடுப்பூசிகளை போடுகிறோமா? அல்லது எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளுக்காக காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குழந்தை உணவில் உலோகங்கள்: உங்கள் குழந்தைக்கு உணவளிக்கும் போது இதையெல்லாம் கவனித்து இருக்கிறீர்களா? 

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் (PHFI), டாக்டர் கே ஸ்ரீநாத் ரெட்டி பேசும்போது, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பில் குறைபாடு ஏற்படாதவரை தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார். அதேநேரத்தில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி, அவசர கால பயன்பாட்டுக்காக 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்துதற்கான அனுமதியை பெற்றுள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி முதல் கோவாக்சின் அவசரகால பயன்பாட்டுக்கு குழந்தைகளுக்கு செலுத்தலாம்.தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள், வைரஸ் பாதிப்பில் இருந்து குறுகிய காலம் மட்டுமே நிவாரணம் பெற முடியும் எனத் தெரிவித்துள்ள நிபுணர்கள், நீண்ட கால பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகளிடையே கொரோனா வைரஸின் நீண்டகால தாக்கம் குறித்து தெளிவாக அறிய முடியாததால், இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதாகவும் ஒரு சிலர் விளக்கமளித்துள்ளனர். ஏனென்றால், நோய் பரவலை குறைக்கவும்,
அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் இந்த அணுகுமுறை அவசியமானது என மருத்துவர்களில் சில கூறுகின்றனர்.

பேரக் குழந்தைகளுடன் விளையாட விரும்பும் தாத்தா,பாட்டியா நீங்கள்? உங்களுக்கான அட்வைஸ்..

ஐ.சி.எம்.ஆரில் பணியாற்றிய முன்னாள் மருத்துவ விஞ்ஞானி மருத்துவர் ராமன் கங்க்கேத்கர் பேசும்போது, குழந்தைகளில் கொரோனா வைரஸூக்குப் பிறகான பிந்தைய தாக்கம் என்ன என்பது குறித்து தெளிவாக அறிய முடியாததால், வல்லுநர்கள் கூட்டு முடிவை எடுப்பது சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். பகுத்தாய்ந்து இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதுபற்றி முடிவெடுப்பது சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: