முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வர என்ன காரணம்..?

உங்கள் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வர என்ன காரணம்..?

குழந்தைக்கு வயிறு வலி

குழந்தைக்கு வயிறு வலி

வயிறு வலி ஏற்படும் சமயங்களில் குழந்தையால் அதை தாங்க இயலாது. தன்னை மீறி கண்ணீர் துளிகள் வந்துவிடும். அத்தகைய சூழலில் நாம் மருத்துவரை அணுகி குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பது வழக்கம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உடையவர்கள். குறிப்பாக அடிக்கடி வயிறு வலிப்பதாக சில குழந்தைகள் தெரிவிப்பார்கள். பள்ளிக்கு செல்லாமல் லீவு எடுக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது பிடிக்காத உணவை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவோ சில குழந்தைகள் வேண்டுமென்றே வயிறு வலி அடம் பிடிப்பது இயல்பான விஷயம் தான்.

ஆனால், வயிறு வலி ஏற்படும் சமயங்களில் குழந்தையால் அதை தாங்க இயலாது. தன்னை மீறி கண்ணீர் துளிகள் வந்துவிடும். அத்தகைய சூழலில் நாம் மருத்துவரை அணுகி குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பது வழக்கம்.

அதே சமயம், குழந்தையின் தவறான பழக்க, வழக்கங்கள்தான் பெரும்பாலான வயிறு வலிக்கு காரணம் என்பது உணர்ந்து, அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பெற்றோராகிய நாம் பின்பற்ற வேண்டும்.

சுத்தம் செய்யப்படாத கைகள்

குழந்தைகளுக்கு வயிறு வலி ஏற்படுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்று, கைகளை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதுதான். உங்கள் குழந்தை அடிக்கடி வாயில் விரல் வைக்கிறது என்றால், மிக கடுமையான பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வயிற்றுக்குள் அனுப்பி வைக்கிறது என்று அர்த்தம். ஆகவே, கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.

உணவு ஒவ்வாமை

ஏதேனும் வித்தியாசமான உணவுகள் காரணமாகத்தான் ஒவ்வாமை ஏற்பட வேண்டும் என்பதில்லை. சாதாரணமாக நாம் அன்றாடம் சாப்பிடும் சாதம், குழம்பு வகைகள் கூட குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆகவே, சமயலறை மீது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் புறக்கணிக்கக் கூடாத 9 ஆபத்து காரணிகள்..!

மலச்சிக்கல்

பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறியவர்களையும் பாதிக்கும் விஷயம் இது. உங்கள் குழந்தை மணிக்கணக்கில் கழிவறையில் அமர்ந்திருந்தால், அதற்கான சிகிச்சை அளிப்பது அவசியம். அத்துடன் நார்ச்சத்து உணவுகளை மிகுதியாக சேர்க்க வேண்டும்.

ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவது

மண், கல் போன்றவற்றை பொறுக்கி சாப்பிடுவது, சாக்பீஸ், பென்சில் போன்றவற்றை கடித்து உண்பது, சுவற்றில் நாக்கை வைப்பது என்று ஆரோக்கியமற்ற பழக்கங்கள் இருக்கும். அவற்றை கண்டறிந்து திருத்த வேண்டும்.

தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது

சில குழந்தைகள் பசியாற சாப்பிட்டாலும் கூட, பிடித்தமான ஸ்நாக்ஸ் வகைகளை கண்டுவிட்டால், அவற்றையும் ஒரு பிடி, பிடித்துவிடுவார்கள். இதனால் செரிமான கோளாறு மற்றும் வயிறு வலி வரும்.

குழந்தைகளிடம் பெற்றோர் இந்த விஷயங்களை செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்!

எப்படி இருக்கும் வலி?

குழந்தைகளுக்கு வயிறு வலி இடைவெளி விட்டு, விட்டு வரும். வயிற்றுப் பகுதி முழுவதுமாக வலித்தால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை காரணமாகும். சில சமயம், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் காரணமாகவும் வயிறு வலிக்கும்.

கடுமையான பாதிப்புகள்

அப்படெக்டிஸ், அல்சர் போன்ற பாதிப்புகளாலும் வயிறு வலி வரலாம். கவனமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பது அவசியம்.

First published:

Tags: Child Care, Stomach Pain