Parenting | குழந்தை வளர்ப்பில் இதுவும் முக்கியம்… பெற்றோர் தவறாமல் செய்யுங்கள்..!

முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு, பிறகு அவர்களின் செயல்களை குறை சொல்ல வேண்டாம்.

முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு, பிறகு அவர்களின் செயல்களை குறை சொல்ல வேண்டாம்.

  • Share this:
தவறுகள் செய்வது மனிதர்களின் இயல்பு என்பதால், யாரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில தவறுகள் நடக்கும். அதுவும் பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைகளை கண்டித்த அதே தவறை செய்யும்போது, அவர்களின் பாடு சற்று திண்டாட்டம் தான். ஆனால், அந்த இடத்தில் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். நான் செய்வேன், நீ செய்யக்கூடாது என்று கூறினால், குழந்தைகளின் மனதில் அந்த வார்த்தைகள் வடுவாக பதிந்துவிடும். இதனை தவிர்க்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றால் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.

மன்னிப்பு அவசியம் ஏன்?

பேசும் விதமும், தன் தவறுகளை ஒப்புக்கொள்ளும் விதமும் ரிலேஷன்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பமானாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என யாராக இருந்தாலும் இந்த இரண்டு அணுகுமுறைகளை பொறுத்தே, உறவு முறை நீடிக்கும். தவறுகளை ஒப்புக்கொள்வதில் தவறும் இல்லை. அப்படி ஒப்புக்கொள்வதினால், உங்களுடைய மதிப்பு மரியாதை குறையப்போவதுமில்லை. மாறாக, மற்றவர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரவே செய்யும்.

உங்களின் செயல்பாடுகளில் இருந்து, உங்களின் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள், பின்பற்றும் பழக்க வழக்கங்கள் அவர்கள் பின்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் செய்த தவறுக்காக தங்களின் மனதில் இருந்து இயல்பாக மன்னிப்பு கேட்பார்கள். இதனை நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. மேலும், மன்னிப்பு என்பது இருவரின் உணர்ச்சிகளுக்கு கொடுக்கும் மதிப்பாகவும் அமையும்.

தவறுகளை ஒப்புக்கொள்ளுதல்:

தவறுகளை ஒப்புக்கொள்வதில் எந்தவித தயக்கமும் வேண்டாம். உங்கள் குழந்தைகள் முன்பாகவே தவறுகளை செய்ய நேர்ந்திருந்தாலும், அதனை மனதார ஒப்புக்கொள்ளுங்கள். தேவையில்லாமல், பொறுமை இழந்து செய்து விட்டதாக கூறுங்கள். அந்த இடத்தில் சரியான நிலையில் தாங்கள் இல்லை என்பதை எடுத்துக் கூறி மன்னிப்புக்கேளுங்கள். ஓவராக ரியாக் செய்துவிட்டதாக அவர்களிடம் கூறுங்கள்.

Must Read | ரிஸ்க்கை உண்டாக்கும் குழந்தைகள் மீது ஓவர் கேர்! பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை!

உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தல்:

நீங்கள் செய்த தவறால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் எண்ணங்களுக்கு, உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து பொறுமையாக கேளுங்கள். உங்களுக்கு பெரிதாக தோன்றாத விஷயங்கள் அவர்களுக்கு பெரியதாக இருக்கும். அதனை நினைத்து அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். நீங்கள் கேட்கும்போது அவர்கள் வாக்குவாதம் செய்தால் கூட அதனை பொருட்படுத்த வேண்டாம். ஒருவேளை நீங்கள் இதனை செய்யாவிட்டால், நீங்கள் அவர்களுக்கு மதிப்பளிக்கவில்லை என எண்ணிக்கொள்வார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குற்றம்சாட்ட வேண்டாம்:

முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு, பிறகு அவர்களின் செயல்களை குறை சொல்ல வேண்டாம். அவர்கள் உங்கள் பிள்ளைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவிடுங்கள். ஒருவேளை நீங்கள் குற்றம் சொன்னால், அதனை அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்புக்கு இந்த அணுகுமுறை சரியாக இருக்காது. மீண்டும் பிரச்சனைகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.
Published by:Archana R
First published: