ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகள் வாயைத் திறந்துகொண்டே தூங்கினால் உடல் நலத்திற்கு ஆபத்தா..?

குழந்தைகள் வாயைத் திறந்துகொண்டே தூங்கினால் உடல் நலத்திற்கு ஆபத்தா..?

குழந்தை

குழந்தை

சுவாசப் பாதையில் ஏதேனும் அடைப்பு இருந்தால் மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து விட முடியாமல் வாய் வழியாக விடுவார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வீட்டில் குழந்தைகள் தூங்கும்போது வாய் வழியாக மூச்சுவிட்டு தூங்குவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவ்வாறு ஏன் தூங்குகிறார்கள் என்கிற காரணத்தை அறிந்ததுண்டா..?

  பொதுவாக குழந்தைகளின் சுவாசப் பாதையில் ஏதேனும் அடைப்பு இருந்தால் மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து விட முடியாமல் வாய் வழியாக விடுவார்கள்.

  இப்படி சளி, இறுமல், காய்ச்சல் நேரத்தில் சுவாசப் பாதை அடைபட்டு இவ்வாறு வாயை திறந்துகொண்டு தூங்குவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த சமயத்தில் பெரியவர்களே இந்த சிக்கலை சந்தித்திருப்பார்கள்.

  இப்படி எந்த பிரச்னையும் இல்லாமலும் குழந்தை வாயைத் திறந்தபடியே தூங்குகிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும்..?

  • அறையில் காற்றோட்டமில்லாமல் அடைத்தபடி இருந்தாலும் மூச்சுவிட முடியாமல் வாய் வழியாக விடலாம்.
  • குழந்தையின் சுவாசப்பாதையில் நாசியைப் பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் இப்படி நிகழலாம்.
  • ஸ்லீப் அப்னியா காரணங்களாலும் சுவாசம் தடைபடலாம். இதனால் மூச்சுத்திணறல், குறட்டை போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

  இப்படி தற்காலிகமாக அல்லாமல் எப்போதுமே வாயைத் திறந்தபடி தூங்கினால் மேலே குறிப்பிட்ட சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எனவே அதை சாதாரணமாக விடாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுங்கள்.

  மதியம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா..?

  ஏனெனில் மூக்கின் வழியாக மூச்சு விடும்போது உள்ளிழுக்கும் காற்று தூசிகளை நீக்கி சுத்தம் செய்தே உள்ளே செலுத்தும். வாய் வழியாக சுவாசிக்கும்போது தூசிகள், பாக்டீரியாக்கள் நேரடியாக உள்ளிழுக்கப்பட்டு சுவாசப்பாதையில் அடைப்பு உண்டாகலாம். எனவே அலட்சியம் காட்டாமல் கவனம் செலுத்துங்கள்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Child