ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண் குழந்தைகளின் நம்பிக்கை ஊக்குவிக்க நாம் கேட்க வேண்டிய கேள்விகள்...

பெண் குழந்தைகளின் நம்பிக்கை ஊக்குவிக்க நாம் கேட்க வேண்டிய கேள்விகள்...

பெண் பிள்ளைகளை வளர்க்க டிப்ஸ்

பெண் பிள்ளைகளை வளர்க்க டிப்ஸ்

பெண் குழந்தையை திறனுள்ளவராக வளர்ப்பதில் தாய், தந்தை ஆகிய இருவருக்குமே பொறுப்புகள் உண்டு. எப்போதும், எது குறித்தும் உயர்வாக எண்ணும் சிந்தனையை குழந்தைகளிடம் வளர்த்திட வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

போட்டிகள் நிறைந்த உலகில் நம் பெண் குழந்தைகளை ஆளுமை மிகுந்தவர்களாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே நல்ல பண்புகளையும், அறிவையும் நாம் கற்பிக்கின்ற அதே வேளையில் அவர்களது நம்பிக்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஏன், எதற்கு, எப்படி என்ற சிந்தனைகளை பெண் குழந்தைகளின் மனதில் நாம் தூண்ட வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் அலசி, ஆராய்ந்து தெரிந்து கொள்ள குழந்தை முற்படுகின்றபோது துணிச்சல் மிகுந்த குழந்தையாக தாமாகவே வளரத் தொடங்கி விடும்.

இளம் சிறுமிகளிடம் இருக்க வேண்டிய நன்மதிப்பு :

பெண் குழந்தையை திறனுள்ளவராக வளர்ப்பதில் தாய், தந்தை ஆகிய இருவருக்குமே பொறுப்புகள் உண்டு. எப்போதும், எது குறித்தும் உயர்வாக எண்ணும் சிந்தனையை குழந்தைகளிடம் வளர்த்திட வேண்டும். இலக்குகள் எப்போதும் உயர்வாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் அறிவுறுத்துவதுடன், நாமும் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

பெண் குழந்தைகளிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம்...

எதை நினைத்து பெருமை கொள்கிறாய் :

உன்னை நினைத்து நீ பெருமை கொள்ளும் அளவுக்கு என்ன சாதனை செய்திருக்கிறாய் என்ற கேள்வியை நீங்கள் செல்வமகளிடம் முன்வைக்க வேண்டும். படிப்பு, விளையாட்டு என ஏதோ ஒன்றில் நாமும் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்தக் கேள்வி அவர்களுக்குள் தூண்டும். கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற திறன்களையும் வளர்க்கும்.

பிடிவாத குணமுடைய குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் செய்யும் 7 தவறுகள்..!

மற்றவர்களைவிட உன்னிடம் இருக்கும் சிறப்பு என்ன?

நிச்சயமாக குழந்தையை யோசிக்க வைக்கும் கேள்வி இது. மற்றவர்களிடம் என்ன திறமைகள் இருக்கின்றன, நம்மிடம் அதில் எது குறைகிறது என்று எடைபோட்டு உணர வைக்கும். அதே சமயம், இந்த கேள்வியே பிறர் மீது குழந்தைகள் பொறாமை கொள்வதற்கான காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

எப்போது மிகவும் தைரியமாக இருந்தாய் :

பெண் குழந்தைகள் இங்கே யாருக்கும் அஞ்சி வாழ வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இடர்களையும் கடந்து வரக் கூடிய தைரியத்தை பெண் குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டும். ஆக, இப்படியொரு கேள்வியை குழந்தையிடம் அடிக்கடி முன்வைக்க வேண்டும்.

எதை அதிகம் விரும்புகிறாய் :

இலக்கற்ற் பயணம் தோல்வியில் முடியும். ஆகவே, நம்முடைய பெண் குழந்தையிடமும் ஏதோ ஒன்று குறித்து மிகுந்த ஆவல் இருக்க வேண்டும். அதை நோக்கி பயணம் செய்ய குழந்தைகளுக்கு நாம் உந்துதலாக அமைய வேண்டும். குழந்தை சோர்வடையும் தருணங்களில் நாம் பக்கபலமாக இருப்பது அவசியமாகும்.

உங்கள் குழந்தை அதிக நேரம் தூங்கிக்கொண்டே இருந்தாலும் ஆபத்துதான்..! இந்த எச்சரிக்கைகளை கவனியுங்கள்...

மற்றவர்களுக்கு நீ கற்றுக் கொடுக்க நினைக்கிறாய் :

குழந்தைகளிடம் கேட்க வேண்டிய சிறப்பான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதை கேட்டவுடன் நம்மிடம் ஏதோ ஒன்று மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கிறது என்பதை குழந்தை உணரத் தொடங்கும். அது ஏதோ ஒரு திறனாக, நல்ல குணமாகக் கூட இருக்கலாம். சக தோழிகளுக்கும் அதை கற்றுக் கொடுக்க அறிவுறுத்துங்கள்.

உன்னை நீ எப்படி மேம்படுத்திக் கொள்வாய் :

இந்த கேள்வியை கேட்கும்போது உங்கள் குழந்தைகளிடம் பதில் இல்லை என்றாலும், எதை உங்கள் குழந்தை மேம்படுத்த வேண்டும் என்பதை நீங்களே சுட்டிக் காட்டலாம். ஏனென்றால், சிறு வயது குழந்தைகளுக்கு தன்னிடம் உள்ள குறைகளை அறியும் பக்குவம் இருக்காது. அதை புரிய வைப்பது பெற்றோரின் கடமை.

நீ பயந்தது உண்டா :

எப்போதாவது, எதற்காகவாது நீ அச்சம் கொண்டது உண்டா? என்ற கேள்வியை குழந்தையிடம் தவிர்க்காமல் கேளுங்கள். ஏனென்றால், சின்ன குழந்தைகள் அச்சத்தை வெளிப்படுத்த தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடும். பெற்றோரிடம் எது குறித்தும் பேசி, அதற்கு தீர்வு காணும் குணத்தை அவர்களிடம் வளர்க்க வேண்டும்.

சிறப்பான 5 வார்த்தைகள் :

உன்னை பற்றிய சட்டென்று சொல்ல வேண்டும் என்றால் எதை, எதை சொல்வாய் என குழந்தைகளிடம் கேட்க வேண்டும். ஒன்றிரண்டு தான் குழந்தைகளுக்கு சொல்ல தெரியும். அதற்கு மேல் அவர்களிடம் உள்ள சிறப்புகளை நீங்களே எடுத்து கூறுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: My Daughter, Parenting Tips