Home /News /lifestyle /

தாய்மார்களே உஷார்... குழந்தையை குப்புற படுக்க வைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..

தாய்மார்களே உஷார்... குழந்தையை குப்புற படுக்க வைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..

காட்சி படம்

காட்சி படம்

Parenting tips : குழந்தைகளை ஒரு போதும் குப்புறப்படுத்து தூங்க வைக்காதீர்கள்.அது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

தவமாய், தவமிருந்து ஒரு பிள்ளையை பெற்றெடுப்பதோடு தாயின் பாரம் குறைந்து விடுவதில்லை. அதற்குப் பிறகு தான் குழந்தையை கண்ணும், கருத்துமாக பொத்திப் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. நாம் என்னதான் மிகுந்த கவனத்தோடு பிள்ளைகளை வளர்த்தாலும் கூட, நம்மை அறியாமலேயே நாம் கவனிக்கத் தவறும் சில விஷயங்களால் குழந்தைகளுக்கு ஆபத்துகள் ஏற்படும்.

குறிப்பாக, பச்சிளம் குழந்தை எப்படி தூங்க வேண்டும் என்பதில் கூட நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு சத்தாக என்ன சாப்பிடக் கொடுக்கலாம், எது குழந்தையின் செரிமானத்திற்கு உகந்தது என்று நாம் பார்த்து, பார்த்து கொடுத்துக் கொண்டிருப்போம். ஆனால், தூக்கம் என்று வருகிறபோது குழந்தையை தாழாட்டி, சீராட்டி தூங்க வைப்பதோடு நம் கடமை முடிந்து விட்டதாகக் கருதிக் கொள்கிறோம்.

குழந்தை எப்படி தூங்க வேண்டும் ?

பொதுவாக பச்சிளம் குழந்தைகள் தங்கள் முதுகு கீழே இருக்குமாறு தூங்க வேண்டும். அப்படி தூங்கும்போது குழந்தை மூச்சு விட சௌகரியமாக இருக்கும். அத்துடன் குடித்த பால் எதுக்களிக்காமல் செரிமானம் அடையும். அதுவே குழந்தை பிறந்த 4 அல்லது 5 மாதங்கள் ஆகிவிட்டால், குழந்தை ஒருக்கணித்து தூங்குவதற்கு முற்படும். ஆனால், சரியாக திரும்ப முடியாத காரணத்தால் வயிறு கீழே அழுந்தும் வகையில் குப்புற படுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும்.



இப்படி குப்புற படுத்து தூங்குவதுதான் குழந்தைக்கு சௌகரியமானதாக இருக்கிறது, அப்போதுதான் அது நன்றாக தூங்குகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணம் மாபெரும் தவறு என்பதை உணருங்கள்.

குப்புறப்படுத்து தூங்குவது ஏன் ஆபத்தானது?

‘முதுகு கீழே இருக்கும் வகையில் பின்புறம் படுத்து தூங்குவதே சிறப்பு’’ என்ற மந்திரத்தை இரவு நேரங்களில் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு பாதுகாப்பானது. ஆனால், குழந்தை வயிறு அழுந்தும் வகையில் குப்புறப்படுத்து தூங்கினால், அவர்களுக்கு திடீர் உயிரிழப்பு ஏற்படக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத உயிரிழப்பு அல்லது மூச்சுத்திணறலால் ஏற்படும் உயிரிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

also read : பிரசவத்திற்கு பிறகு வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க கூடிய 5 சூப்பர் பயிற்சிகள் இதோ..

தூங்கும்போது குழந்தைகள் உயிரிழக்கும் விகிதம் இந்தியாவில் குறைவு என்றாலும், இந்த விஷயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் குழந்தை குப்புறப்படுத்து தூங்கினாலும், நீங்கள் அவ்வபோது கண் விழித்து பார்த்து, குழந்தையின் வயிறு அழுந்தாத வகையில் திருப்பிவிட வேண்டும்.



ஏன் முதுகு பக்கமாக தூங்க வேண்டும் ?

முதுகு கீழே இருக்குமாறு தூங்கும்போது குழந்தைக்கு மூச்சுக்காற்று இயல்பாக கிடைக்கிறது. குறிப்பாக, முதல் ஓராண்டுக்கு குழந்தை கட்டாயமாக இப்படித்தான் தூங்க வேண்டும்.

வயிறு அழுந்துமாறு எப்போது தூங்கலாம்?

ஒரு வயது அடைந்த பிறகு குழந்தை யாருடைய துணையும் இன்றி எழுந்து உட்காரவும், தலையை நிலையாக வைத்திருக்கவும் திறன் பெற்றதாக இருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் குப்புறப்படுத்து தூங்கும்போது போதுமான மூச்சு கிடைக்கவில்லை என்றால், தானாகவே குழந்தை சௌகரியமான பொசிஷனில் திரும்பி படுத்துவிடும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Parenting Tips

அடுத்த செய்தி