Home /News /lifestyle /

மழைக்கால நோய் தொற்று , கொசுக்கடியிலிருந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்

மழைக்கால நோய் தொற்று , கொசுக்கடியிலிருந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்

குழந்தை பராமரிப்பு

குழந்தை பராமரிப்பு

குழந்தை கை, கால் அனைத்தையும் மூடி மறைக்கும் அளவில், தளர்வான பருத்தி உடைகளை அணிவிக்க வேண்டும். மழைக்காலம் என்றாலும் சற்று கற்றோட்டம் தேவை. இறுக்கமான உடைகளை அணிவித்தால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படலாம்.

இத்தனை நாட்களாக வாட்டி வதைத்து வந்த கோடைகாலம் ஓய்ந்து, மழைக்காலம் தொடங்கியுள்ளது. நம் உடலுக்கு உஷ்ணத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது என்றாலும் கூட, மழைக்காலத்தில் பரவக் கூடிய டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல் காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள், நாம் பயன்படுத்தும் உடைகள் ஆகியவற்றில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சி ஏற்பட கூடும். இது மட்டுமல்லாமல் கொசுக் கடியில் இருந்தும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கே இந்த அளவு கவலைப்பட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2 வயதுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளை இந்த மழைக்காலத்தில் பராமரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.

முறையான உடைகள்

குழந்தை கை, கால் அனைத்தையும் மூடி மறைக்கும் அளவில், தளர்வான பருத்தி உடைகளை அணிவிக்க வேண்டும். மழைக்காலம் என்றாலும் சற்று கற்றோட்டம் தேவை. இறுக்கமான உடைகளை அணிவித்தால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படலாம்.



இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்தவும்

பெரும்பாலான கொசு விரட்டிகள் கொசுக்கள் நம்மை நோக்கி வராமல் தடுக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதில் உள்ள பொருள் என்ன என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் மூச்சுத்திணறல், உணர்வு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே, இயற்கையான இடுபொருள் கொண்ட கொசு விரட்டிகளை பயன்படுத்தவும்.

பிரசவத்துக்கு முன்னும் பின்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கொசுவலைகள்

குழந்தை தூங்கும் இடத்தை சுற்றியிலும் கொசு வலை கொண்டு கட்டிவிடுவதன் மூலமாக கொசு மற்றும் பிற பூச்சித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க முடியும். பைப்களில் தண்ணீர் கசிவு, தண்ணீர் தேங்குதல் போன்றவற்றையும் தடுக்க வேண்டும்.

கை சுகாதாரம்

குழந்தைகளின் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அழுக்கான பொருட்களை தொட்டுவிட்டு, அப்படியே வாயில் கை வைக்கும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். ஆகவே, கைகளுக்கு கையுறைகளை அணிவிக்கலாம் அல்லது அவ்வபோது வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம்.



பொம்மைகளை சுத்தமாக வைத்திருப்பது

வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதைப் போல, குழந்தைகள் கையாளும் பொம்மைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பேபி வைப்ஸ்

குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்கும்போது பேபி வைப்ஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். துணிகளை கிருமி நாசினி கொண்டு அலச வேண்டும்.

பிரசவம் முடிந்த பின்பு பெண்களுக்கு அதிகம் தேவைப்படும் ஊட்டச்சத்து இதுதான்..!

காய்ச்சல் அறிகுறிகள் குறித்து கவனம்

குழந்தைகளுக்கு காய்ச்சல், குமட்டல், வாந்தி, வாய் வறட்சி, சிறுநீர் குறைதல், அரிப்பு, வீக்கம் போன்ற அனைத்துப் பிரச்சனைகள் குறித்து கவனமாக கண்காணிக்க வேண்டும். இந்த பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, Baby food

அடுத்த செய்தி