ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? ஒரு ஆண்டுக்குள் எதிர்கொள்ளப்போகும் சவால்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? ஒரு ஆண்டுக்குள் எதிர்கொள்ளப்போகும் சவால்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

குழந்தை அழுகிறது என்றால் அது பசிக்காக மட்டுமே கிடையாது. குழந்தையின் ஒவ்வொரு அழுகைக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் அதை நீங்கள் போகப்போகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எல்லா குடும்பத்திலும் முதல் குழந்தை பிறப்பை மிகவும் ஸ்பெஷலாகக் கொண்டாடுவார்கள். குழந்தையின் ஒவ்வொரு அசைவும் வளர்ச்சியம் அதிகப்படியான சந்தோஷத்தை ஏற்படுத்தும். குழந்தை பிறந்தவுடனேயே குடும்பத்தில் இருக்கும் அனைவரின் வாழ்க்கையையும் மாறிவிடும். அதேநேரத்தில், குழந்தை எதற்காக அழுகிறது, ஏன் சரியாக சாப்பிட வில்லை, என்று சின்ன தும்மல் வந்தாலும் குடும்பமே பதறும்.

நீங்கள் எதற்காகவெல்லாம் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கிட்டத்தட்ட வரையறுக்க முடியாதது. இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகள் கூட இதை இதுபோல பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். முதல் குழந்தை பெறும் பெற்றோர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், எதுவெல்லாம் இயல்பு என்பதை இங்கே பார்க்கலாம்.

‘நான் எல்லாமே சரியாக செய்து விட்டேன்’ என்று இந்த நிமிடம் உங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று நீங்கள் நிம்மதியாக உணர்ந்தால், அடுத்த நிமிடம் நீங்கள் நினைத்தது எதுவுமே சரியில்லை எல்லாமே தவறு என்று மாறக்கூடும். இது மிக மிக இயல்பானது. உதாரணமாக உங்கள் குழந்தை சரியாக சாப்பிட்டுவிட்டது, என்று நிம்மதியாக உணரும் அடுத்து தருணத்தில் உங்கள் குழந்தை சாப்பிட்டதை வாந்தி எடுக்கலாம் அல்லது குழந்தை அழத் தோன்றலாம்.

குழந்தை பிறந்த பின்பு அனைத்து பெண்களுக்கும் உடல் பலவீனம் ஏற்படும் மற்றும் உடல் வடிவம் நிச்சயமாக மாறிவிடும். இது எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா பெண்களும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.

உலகில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர், இது குழந்தைக்கும் பொருந்தும். எனவே, உங்கள் குழந்தை மற்றவர்களைப்போல் ஏன் இல்லை என்பதைப் பற்றி கவலையே பட வேண்டாம்.

குழந்தை வளர்ப்பு பற்றி நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், எவ்வளவு தயாராக இருந்தாலும் முதல் ஆண்டு குழந்தையை வளர்ப்பது அவ்வளவு சுலபமானது கிடையாது.

நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் என்பது குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நீங்கள் பலமுறை சந்திக்கக்கூடும். ஒவ்வொருவர் கூறுவதையும் நீங்கள் மிகவும் சீரியஸாக பின்பற்றி குழந்தையின் மேல் திணிக்கக்கூடாது. உதாரணமாக உங்கள் குழந்தை ஒல்லியாக இருக்கிறார் அல்லது உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறார் அல்லது நீங்கள் உங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு பால் கொடுப்பதில்லை, இந்த உணவை குறைத்து அதற்கு பதிலாக வேறு ஒர உணவை கொடுங்கள் என்று எக்கச்சக்கமான பரிந்துரைகளை நீங்கள் குழந்தை வளர்க்கும் பொழுது கேட்க நேரிடும். எல்லாவற்றையும் பின்பற்றுவது முறையானது கிடையாது.

உங்கள் குழந்தைகள் உயரம் குறைவாக இருக்கிறார்களா? அவர்கள் வளர உதவும் பயிற்சிகள்!

நீண்ட நேரம் குழந்தை உடனே அமர்ந்திருப்பது அல்லது படுத்துக் கொண்டிருப்பது உங்களுக்கு அதிகப்படியான சோர்வையும் முதுகு வலியையும் ஏற்படுத்தும். நடப்பது அல்லது சின்ன சின்ன ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிகள் செய்வது உங்கள் உடலை ஹீல் செய்ய உதவும்.

எல்லா பெண்களுமே சூப்பர் விமன் தான். ஆனால் சில நேரங்களில் உதவி கேட்பது தவறு இல்லை. உங்கள் நண்பர்கள், உங்கள் பெற்றோர்கள் அல்லது உங்கள் அக்கம்பக்கத்தாரிடம் தேவைப்படும் போதெல்லாம் உதவி கேளுங்கள்

குழந்தை அழுகிறது என்றால் அது பசிக்காக மட்டுமே கிடையாது. குழந்தையின் ஒவ்வொரு அழுகைக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் அதை நீங்கள் போகப்போகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, Child Care, Parenting Tips