Home /News /lifestyle /

வீட்டில் தயாரிக்கப்படும் பேபி ஃபார்முலா உணவுகள் பாதுகாப்பானது அல்ல : விளக்கும் மருத்துவர்கள்..!

வீட்டில் தயாரிக்கப்படும் பேபி ஃபார்முலா உணவுகள் பாதுகாப்பானது அல்ல : விளக்கும் மருத்துவர்கள்..!

பேபி ஃபார்முலா உணவுகள்

பேபி ஃபார்முலா உணவுகள்

பேபி ஃபார்முலா தயாரிப்புகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக சோஷியல் மீடியாக்களில், "ஃபார்முலா பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பெற்றோரை தாங்களே அவற்றை உருவாக்கலாம்"என்ற தலைப்பில் பல ஃபார்முலா குறிப்புகள் மிக அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர ஒரு சில மாதங்கள் கழித்து மெல்ல மெல்ல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை கொடுக்க துவங்க வேண்டும். இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் 3 - 12 மாதங்களுக்கு இடையில் உள்ள குழந்தைகளுக்கு பேபி ஃபார்முலா எனப்படும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பு கொடுக்கப்படும் பழக்கம் அதிகரித்து உள்ளது.

இதனிடையே 2021-2022 உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியின் விளைவாகவும், பெரிய அளவிலான பேபி ஃபார்முலா தயாரிப்புகளை திரும்பப் பெறுவதன் விளைவாகவும், அமெரிக்காவில் பேபி ஃபார்முலா தயாரிப்புகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பிட்டபடி 12 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க , சந்தைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு உணவாகும்.

பேபி ஃபார்முலா தயாரிப்பு பொதுவாக பாட்டில்-ஃபீடிங் அல்லது பவுடரில் இருந்து கப்-ஃபீட் செய்யும் வகையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் பேபி ஃபார்முலா தயாரிப்புகள் குழந்தைகளுக்கான சிறப்பு உணவாக கருதப்படும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உணவு அல்லது மனித பாலுக்கு பகுதியளவு மாற்று என்று FFDCA (U.S. Federal Food, Drug, and Cosmetic Act) கூறுகிறது.



இதனிடையே பேபி ஃபார்முலா தயாரிப்புகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக சோஷியல் மீடியாக்களில், "ஃபார்முலா பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பெற்றோரை தாங்களே அவற்றை உருவாக்கலாம்"என்ற தலைப்பில் பல ஃபார்முலா குறிப்புகள் மிக அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

பாலுக்கு மாற்று அவசியமா..? நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்..!

அதாவது வீட்டிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பேபி ஃபார்முலாவை தயாரிக்கலாம் என்று சோஷியல் மீடியாக்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் குழந்தை மருத்துவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபார்முலாவை பயன்படுத்துவது ஆபத்தானது என்று எச்சரித்து உள்ளனர். வீட்டிலேயே தயாரிக்கப்படும் பேபி ஃபார்முலாக்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவுவதற்கான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாதிருக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

1960-ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருப ழைய ஃபார்முலா ரெசிபி, ஃபேஸ்புக்கில் லட்சக்கணக்கான முறை ஷேர் செய்யப்பட்டு உள்ளது. அந்த ரெசிபியில் நன்கு கொதிக்க வைக்கப்பட்ட பால், தண்ணீர் மற்றும் காரோ கார்ன் சிரப்பைக் கலந்து பேபி ஃபார்முலாவை தயாரிக்கலாம் என்று பெற்றோர்களுக்கு கூறுகிறது.



இது போன்ற உறுதிப்படுத்தப்படாத பேபி ஃபார்முலாக்கள் எளிதில் கெட்டு விடும் மற்றும் வளரும் குழந்தைகளுக்குத் தேவைப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி இருக்காது. இவை இரண்டுமே சிறிய குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தானவை என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். வீட்டில் தயாரிக்கப்படும் பேபி ஃபார்முலாக்களுக்கு எதிராக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் குழந்தைகளை பாசிடிவ் சிந்தனைகளுடன் வளர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை..!

"உங்கள் குழந்தையின் அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைகளை ஹோம்மேட் பேபி ஃபார்முலா பூர்த்தி செய்யாது, மேலும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மிகவும் ஆபத்தானது மற்றும் குழந்தையை நோயுற செய்யலாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பரவி வரும் ரெசிபியில் கூறப்படும் கரோ சிரப் பயனுள்ளதல்ல மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு ஆன்லைன் ரெசிபி மூன்று வாரங்களுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு ஆரஞ்சு சாற்றை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம் என கூறுகின்றன. ஆனால் ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தேநீர் அல்லது பழச்சாறு எதுவும் கொடுக்க வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby food

அடுத்த செய்தி