Home /News /lifestyle /

Father's Day: தந்தைகளுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு பற்றித் தெரியுமா?

Father's Day: தந்தைகளுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு பற்றித் தெரியுமா?

தந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு

தந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு

மகப்பேறு என்றால் அது  பெண்களின் வலி. பெண்களின் பொறுப்பு. குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அம்மாவை சார்ந்தது. அதனால் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் வளரும் சமூகத்தில் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க ஆண்களும் தயாராகி வருகின்றனர். தாயோடு சேர்ந்து தந்தையும் குழந்தையைப்  பார்த்துக்கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது. காலை தாய், மாலை தந்தை என்ற ஷிப்ட் முறைகளையும் பார்க்க முடிகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் வேலையில் விடுப்பு எடுத்து குழந்தையைப் பார்த்துக்கொள்வது போல் ஆண்களுக்கு வசதி அதிகம் இருப்பதில்லை. ஆனால் இதை எல்லாம் 1970 களில் ஐரோப்பிய நாடுகள் யோசித்து மகப்பேறு விடுப்புகளை தந்தைகளுக்கும் கொடுக்கத் தொடங்கிவிட்டது . தற்போது பல்வேறு நாடுகளும் ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளித்து வருகின்றன.  உலக அளவில் தந்தைகளுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்புகளை பற்றி பார்ப்போம்.

இதையும் படிங்க : Father's Day 2022: உங்கள் அப்பாவை சந்தோஷப்படுத்த இந்த 5 விஷயங்களை செய்து பாருங்கள்!

ஐரோப்பிய நாடுகளில்  குழந்தையை பேணும் பொறுப்பு தாய், தந்தை என இருவரிடமும் அதிகம் காணப்படுகிறது. 1980, 1990 களிலேயே சுவீடன் , எஸ்டோனியா போன்ற நாடுகளில் தந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. 3 மாதங்கள் வரை கட்டாயம் பெற்றோர் இருவரும் 100% ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று இருந்தது. இப்போது அதோடு சேர்ந்து 480 நாட்கள் 80% சம்பளத்துடன் தாய் தந்தை இருவரும் பகிர்ந்து  விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.



லித்துவேனியா நாட்டில் 1 வருடம் 100% சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். 2 வருடங்கள்கூட எடுத்துக்கொள்ளலாம். அதற்கு 70% சம்பளம் கொடுக்கப்படும்.

ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளிலும் 1 வருடம் வரை பகிர்ந்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். முதல் 6 மாதங்களுக்கு 67% சம்பளமும் அடுத்த 6 மாதங்களுக்கு 50% சம்பளமும் வழங்கப்படுகிறது.

நார்வே நாட்டில் 15 வாரங்கள் வரை 100% சம்பளத்துடன் தந்தை தனது குழந்தையை வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளலாம். 19 வாரங்கள் வரை 80% சம்பளம் வழங்கப்படும்.

பிரான்ஸ் நாட்டில் 28 நாட்கள் வரை முழு சம்பளத்துடன் தந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.



2018 ஐ பொறுத்தமட்டில் OECD குழுமத்தில் உள்ள 41 நாடுகளில் 35 நாடுகள் தந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கியதாக அறிக்கை விடுத்தது.

2019 இல் கனடா இதில் ஒரு புரட்சியே செய்து விட்டது என்று சொல்லலாம். இருபால் பெற்றோருக்கு மட்டுமில்லாமல் ஒரே பாலின பெற்றோர்களுக்கும், தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள 5 வாரங்களுக்கு  55% ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது.

2020 இல் பின்லாந்து அதன் தரப்பில் ஒரு மைல்கல்லை நட்டது. தாய் தந்தை இருவருக்கும் 7 மாதங்கள் சமமான மகப்பேறு விடுப்பு என்று அறிவித்தது. சமமான விடுப்பு என்று அறிவித்த முதல் நாடு பின்லாந்து தான்.

இந்தியாவில் சில ஆண்டுகளாகத் தான் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது. 2 வாரங்கள் வரை தந்தை மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது

பொதுவாக தனியார் நிறுவனங்கள் இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்காது. லாபம் நோக்கி ஓடும் நிறுவனங்களுக்கு இந்த மாதிரியான விடுப்புகள் பயன் தராது என்று நம்பப்படுகிறது. ஆனால் இதிலும் விதி விலக்குகள் உள்ளன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்கள் ஆண் ஊழியர்களுக்கு 6 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்குகிறது.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ நிறுவனம் 26 வாரங்கள், அதாவது 6 மாதம் வரை விடுப்பு வழங்குகிறது.

 
Published by:Ilakkiya GP
First published:

Tags: Father's Day, Parenting

அடுத்த செய்தி