• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பது சரியா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?

குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பது சரியா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?

மாதிரி படம்

மாதிரி படம்

குழந்தைகளின் நடத்தையை தண்டனை கொடுத்து மாற்றிவிடலாம் என கூறுவது உதவாது என தெரிவிக்கின்றனர்.

  • Share this:
தவறுகளை குறைப்பதற்காகவும், வேண்டாத செயல்களை மீண்டும் செய்வதைத் தடுக்கவும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கண்டிப்பது வழக்கம். கூடவே சிறிய தண்டனைகளையும் கொடுப்பார்கள். ஆனால், பெற்றோர்கள் கொடுக்கும் தண்டனைகள் சரியானதா?, தண்டனைகளை சரியாக கண்ணோட்டத்தில் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்மறை தண்டனை என்றால் என்ன?

குழந்தைகளின் நடத்தையை மாற்றுவது குறித்து பெற்றோர்கள் யோசிக்கும்போது, தண்டனை மூலம் சரி செய்துவிடலாம் என நினைக்கின்றனர். ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் நடத்தையை தண்டனை கொடுத்து மாற்றிவிடலாம் என கூறுவது உதவாது என தெரிவிக்கின்றனர். இது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான உறவை சீர்குலைப்பதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலையும் மட்டுப்படுத்துகிறது என தெரிவிக்கின்றனர்.

மேலும், தண்டனைகள் மூலம் பெற்றோர்கள் கற்பிக்க நினைக்கும் விஷயங்களும் குழந்தைகளுக்கு முழுமையாக சென்று சேருவதில்லை என தெரிவிக்கின்றனர். தண்டனைகள் மூலம் ஒரு நிலையில் அவர்களை வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பும்போது, அது அவர்களின் எண்ண ஓட்டத்தை மட்டுப்படுத்துகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தண்டனைகளை பெற்றோர் ஏன் தவிர்க்க வேண்டும்?

ஒரு விஷயத்தை குழந்தைகள் செய்யக்கூடாது அல்லது ஒரு பொருளை எடுக்கக்கூடாது என்பதற்காக நீங்கள் தண்டிப்பது என்பது, அதன் விளைவுகளுக்கு உட்படத்தாக இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு நீங்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என புரியாது. அப்போது, குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லிக்கொடுக்க வேண்டும்.



இல்லையென்றால், அதனை மீண்டும் ஏதாவதொரு வழியில் செய்ய முயற்சிப்பார்கள். அப்படி, அவர்கள் முயற்சித்தார்கள் என்றால், உங்களின் கண்டிப்பும், நீங்கள் கொடுத்த தண்டனைக்கான நோக்கமும் நிறைவேறவில்லை என்பதுதான் எதார்த்தம். குழந்தைகளுக்கு ஏற்ற மொழியில் பெற்றோர்கள் நடந்து கொள்ளும்போது, அதற்கான பக்குவத்தை பெற்றுக்கொள்வார்கள்.

வெறுமனே தண்டனை மட்டும் அவர்களை திருத்திவிடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, குழந்தையின் ஸ்கிரீனிங் டைமிங்கை குறைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் செல்போன், டேப்லெட்டை எடுத்து வைப்பதை விடுத்து, அவர்களுக்கு பிடித்தமான பொம்மைகள் அல்லது மற்றதை எடுத்தீர்கள் என்றால் அவர்களின் கவனம் அதன்மீது சென்றுவிடும். இது அர்த்தமுள்ள விளைவுகளைக் கொடுக்கும். நேரடியாக செல்போன், டேப்லெட்டை எடுத்தீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்க பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்..!

குழந்தைகள் அனுபவித்து விளையாடும் பொம்மைகள் அல்லது நிகழ்வுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்க வேண்டாம். இது அவர்களுக்கு ஒருவிதமான மன அழுத்தத்தைக் கொடுத்துவிடும். குறிப்பாக, ஒரே ஒருமுறை மட்டும் கொண்டாடக்கூடிய பிறந்தநாள், பள்ளி ஆண்டுவிழா போன்ற விழாக்களில் அவர்களை கலந்து கொள்ளச் செய்வதை தவிர்க்க வேண்டாம். நீங்காத தாக்கத்தை மனதளவில் குழந்தைகளுக்குள் ஏற்படுத்திவிடும்.



தண்டனைகளை சரியாக கையாள்வது எப்படி?

அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து மாற்ற வேண்டும் என நீங்கள் விரும்பினால், தர்க்க ரீதியாக சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தண்டனை கொடுக்கிறேன் என்பதற்காக அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களை செய்யவிடாமல் தடுப்பது நல்லதல்ல. அதேநேரத்தில், கொரோனா காலமாக இருப்பதால் வீட்டிற்குள்ளேயே அவர்கள் இருக்க வேண்டும் என கூறும் உத்தரவை குழந்தைகள் மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு, வீட்டிற்குள்ளேயே அவர்களுக்கு தேவையானதை நீங்கள் முடிந்தளவுக்கு செய்து கொடுக்கலாம். சிந்தனை தெளிவு, புரிதல் ஆகியவற்றை பெற்றோராகிய நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கற்பிக்க வேண்டும். அவை எதார்த்தமாகவும், அவர்களும் உடன்படும் வகையில் உங்களின் கற்பித்தல் இருக்க வேண்டும்.

இல்லையென்றால், உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பிருக்காது. குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல. நீங்கள் கற்பிக்கும் ஒவ்வொரு விஷயமும், அவர்களின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கும். நீங்கள் நேர்மறையாக அணுகினீர்கள் என்றால், அவர்களின் செயல்பாடுகளும் நேர்மறையாக இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: