கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனா நம் அனைவரையும் பலவிதங்களில் பாதித்துள்ளது. எல்லாருடைய வாழ்க்கை முறையுமே மாறிப்போனாலும் குழந்தைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலம் வீட்டிலேயே அடைந்து இருப்பது, பொழுதுபோக்கின்மை, ஆன்லைன் கல்வி, வெளியில் செல்ல முடியாத நிலை, நண்பர்களுடன் விளையாடுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக தீவிரமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பெற்றோருக்குமே வீட்டிலிருந்தபடியே வேலையைப் பார்த்துக் கொண்டும், குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு, வேலையும் செய்து கொண்டு கடினமான ஆண்டாக தான் இருந்திருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில், குழந்தைகளை பாதிக்காமல் இருக்க, ஏற்கனவே உள்ள பாதிப்பில் இருந்து மீட்க எவை எல்லாம் செய்யலாம் மற்றும் செய்யக் கூடாது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
குழந்தைகளை பாதிக்கும் சம்பவங்களைப் பற்றி பேசுங்கள் :
குழந்தைகளை பாதிக்கும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை பற்றி அவர்களுடன் வெளிப்படையாக உரையாட வேண்டும். தனிமையில் இருப்பது மற்றும் இளம் வயதிலேயே மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு குழந்தைகளை பாதித்துள்ளது.
யாருடனும் பழக முடியாத காரணத்தால், குழந்தைகளுக்கு மன அழுத்தம் நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். எனவே அவர்களுடன் உரையாடி, தேவைப்படும் ஆதரவை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி வெளிப்புறங்களில் அவர்களை மற்ற நண்பர்களோடும் உறவினர்களோடும், உங்கள் சமூக வட்டத்தில் பழகவும், அவர்கள் நட்பை வளர்க்கவும் உதவ வேண்டும்.
டிக்டாக் மற்றும் வீடியோக்கள் வழியே கற்றுக்கொடுங்கள் :
கடந்த 2 ஆண்டு காலமாக குழந்தைகளுக்கு ஓரளவுக்கு பொழுதுபோக்காக இருந்தது இணையம் மட்டுமே. இணையப் பாதுகாப்பை கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமைகளில் ஒன்று. அதே நேரத்தில் இயல்பான வாழ்க்கை என்ன என்பதை பற்றியும் இணையம் வழியாகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தெரிவிக்கலாம்.
பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் அது குழந்தைகளையும் பாதிக்குமா? ஆய்வு தரும் விளக்கம்
உதாரணமாக உடல்நலக் குறைபாடு அல்லது வேறு ஏதேனும் குறைபாடு உடன் பிறந்த குழந்தைகளைப் பற்றிய வீடியோக்கள், தத்து எடுக்கப்படும் குழந்தைகளை வளர்ப்பது என்று குழந்தைகள் கற்றுக் கொள்ளக் கூடிய பல்வேறு விஷயங்கள் சமூக வலைத்தளங்களை கொட்டிக் கிடக்கிறது. அத்தகைய வீடியோக்களை குழந்தைகளுக்கு காட்டி அவர்கள் தெரிந்து கொள்வதோடு சமூக வலைத்தளங்கள் என்றாலே போலியான ஒரு வாழ்க்கையை தான் பிரதிபலிக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் இருந்து வெளியேற்ற வேண்டும்.
பொருட்களை வாங்கி கொடுப்பதைவிட அனுபவங்களை வழங்குங்கள் :
எல்லா வயதினருமே, தனக்கு பிடித்த பொருளை யாரேனும் பரிசாகக் கொடுக்கும் போது மகிழ்ச்சியாக உணர்வார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது தவறான பழக்கம். பணம் மற்றும் பொருள் சார்ந்த விஷயங்களின் மீது அவர்களின் கவனம் செல்லக்கூடாது. எனவே பொருட்களையும் பொம்மைகளையும் பரிசுகளையும் வாங்கி குடிப்பதை விட அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்கலாம்.
பாலினம் சமத்துவம் :
பாலின வேறுபாடு கிடையாது என்று பெரியவர்கள் பேசி வந்தாலும், நடைமுறையில் இல்லை. எனவே அடுத்த தலைமுறைகள் இடையே பாலின வேறுபாடு இருக்கக்கூடாது, எல்லா பாலினம் சார்ந்தவர்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு தான் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கு, இளம் வயதிலேயே அவர்களுக்கு அதைப் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.
பிங்க் நிறம் என்றால் பெண்களுக்கு, நீல நிறம் என்றால் ஆண்களுக்கு, பெண்கள் தான் அழுவார்கள், ஆண்கள் அழக்கூடாது, ஆண்கள், முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் ஆண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது என்று இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை களைவது, அவர்களுக்கு பாலின சமத்துவத்தை உண்டாக்கும்.
குழந்தைகளிடம் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய 7 மோசமான அறிவுரை பழக்கங்கள்
குழந்தைகள் கூறுவதை கேட்காமல் இருப்பது :
குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே சிந்தித்துக் கொண்டும், புதிதாக யோசனைகள் தோன்றிக் கொண்டேயும்தான் இருக்கும். எனவே குழந்தைகள் உங்களிடம் பல்வேறு கேள்வியுடன் வருவார்கள். அவர்கள் பேசும் போதும், ஏதேனும் கேட்கும் போதும் நீங்கள் அலட்சியமாக நினைக்காமல்,தெரிந்தவரை உங்களுடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர வேண்டும். குழந்தைகள் மீது உங்கள் கவனத்தை நீங்கள் செலுத்தவில்லை என்றால், நீங்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்து தன்னம்பிக்கையை இழக்க நேரிடலாம்.
விர்ச்சுவல் ஆதரவு :
இதுநாள்வரை டெக்னாலஜியின் உதவியுடன் குழந்தையுடன் பேசுவது, பழகுவது மற்றும் பொழுதுபோக்கு எல்லாமே விர்சுவல் சப்போர்ட்டாக, ஆப்ஸ் வழியே வீடியோக்கள் வழியே பகிரப்பட்டு வந்தது. ஆனால், இனி இந்த விர்ச்சுவல் உறவு மற்றும் ஆதரவு வழியாக குழந்தையுடன் கனெக்ட் செய்வதை தவிர்த்து, நேரடியாக குழந்தையுடன் பழகி அழகான உறவையும் பிணைப்பையும் வளர்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kids Care, New Year, New Year 2022, New Year Celebration, Parenting Tips