குழந்தைகளை வளர்ப்பது என்பது எப்போதுமே சவாலானது தான். குழந்தை பிறந்த நொடி முதல் பெற்றோர்கள் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இளம் குழந்தைகளை கையாள்வது, வளர்ப்பது என்பதில் அவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுப்பது, அவர்களை முழுக்க முழுக்க கவனித்துக் கொள்வது உள்ளிட்ட குறிப்பிட்ட சவால்கள் ஏற்படுகிறது.
அதே போல, வளர்ந்து வரும் டீனேஜ் பிள்ளைகள் என்று வரும் போது, பெற்றோர்களுக்கு வேறு விதமான சவால்களை முன் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், இரண்டு குழந்தைகள் இருப்பவர்களுக்கும் வெவ்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
குழந்தையை இப்படி எல்லாம் தான் வளர்க்க வேண்டும். இப்படியெல்லாம் வளர்க்கக் கூடாது என்று அனைவருக்கும் பொருந்தக்கூடிய விதிகள் எதுவுமே கிடையாது. இளம் குழந்தைகளை வளர்ப்பது கடினம், குழந்தைகள் வளர வளர எல்லாமே எளிதாக விடும் என்று நினைக்கும் சூழல் எல்லாருக்கும் பொருந்தாது. இளம் குழந்தைகள் வளர்ப்பு அதிக சவால் நிறைந்ததா அல்லது டீனேஜர்களை வளர்ப்பது அதிக சவால்கள் நிறைந்ததா என்று இங்கே பார்க்கலாம்.
குழந்தை வளர்ப்பு அனுபவம் வெவ்வேறாக இருக்கும் :
ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது தனிப்பட்ட அனுபவங்களைத் தான் வழங்குகிறது. சின்ன குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிலருக்கு எளிதாக இருக்கும். ஆனால் சிலருக்கு மோசமான அனுபவமாக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது. உங்கள் வீட்டில் கேட்டாலும் கூட வெவ்வேறு பதில்தான் வரும். இதையே ஆய்வாளர்களும் கண்டறிந்துள்ளனர். குழந்தைகள் வளர்ப்பில் எத்தகைய சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இளம் பிள்ளைகளை வளர்ப்பது சவாலா?
இளம் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களுக்கு தேவையான உணவுகளை கவனமாக சமைக்க வேண்டும், அவர்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும், ஆடைகள் அணிவிக்க வேண்டும் என்று அவர்கள் அவர்களுடன் கணிசமான நேரத்தை செலவழிக்கவும், அவர்கள் மீது கவனமாக இருக்கவும் வழங்க வேண்டியிருக்கும். குழந்தைகளை தனியே விடுவதும் பிரச்சினைகளாகவே இருக்கிறது.
குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களை தேர்வு செய்ய எப்படி சொல்லி தருவது..?
பெரும்பாலான தாய்மார்களுக்கு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய உடனே இந்தச் சுமை குறைந்து விடும். ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு செல்லும் குழந்தைகள் கொண்ட பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சுமை குறைந்தது போல உணர்கிறார்கள்.
டீனேஜர்களை வளர்ப்பது சவாலா?
டீனேஜர்களை வளர்ப்பது என்பது சிறு குழந்தைகளை வளர்ப்பதை விட ஓரளவுக்கு சவால்கள் குறைவானது என்று தான் கூறலாம். ஆனால் ஒவ்வொரு பெற்றோருக்கும் இது வேறுபடும்.
இளம் குழந்தைகளுக்கு புரிய வைத்து, அவர்களுடைய தேவையை நிறைவேற்றுவதற்கு ஒருவகையான கவனம் தேவைப்படும். அதே போல, டீனேஜர்கள் மீது, அவர்கள் பழக்கவழக்கங்கள் மீது கண்காணிப்பு இருந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். டீனேஜர்கள் எப்போதுமே பெற்றோர் தன்னோடு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வைக்க மாட்டார்கள். தனித்துவமாக சுதந்திரமாக செயல்படுவார்கள். அதுமட்டுமின்றி அவர்களுடன் நீங்கள் நேரடியாக உரையாடலாம். அவர்களுடையப் பிரச்சினைகளை எளிதாக புரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு என்ன தேவை என்பதை எளிதாகக் கண்டறிந்து சரி செய்யலாம்.
இளம் பிள்ளைகள் வளர்ப்பதில் கிடைக்கும் அதிக மகிழ்ச்சியும் பிணைப்பும் :
டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது என்பதுடன் ஒப்பிடும்போது 5 வயதுக்கு குறைவான குழந்தைகளை வளர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், நிறைவும், குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான உறவும் மிகவும் அழகாக மாறி, பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. என்ன சவாலாக இருந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய பெற்றோர்கள் தயாராக இருக்கிறார்கள். அது பெரிய அளவு மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை ஏற்படுத்துவது இல்லை.
குழந்தைகளிடம் இந்த சொற்களை பயன்படுத்தவே செய்யாதீங்க! பெற்றோருக்கான கைட்லைன்
இளம் குழந்தைகளுக்கு ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து கவனமாக செய்யவேண்டும், முழுவதுமாக அவர்களின் பார்வையை விட்டு விலகக்கூடாது, தனியே விடக்கூடாது என்று உடல்ரீதியான உழைப்பும கவனமும் அதிகமாக தேவைப்படும் போதும், பெற்றோர்கள் நிறைவாக உணர்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kids Care, Parenting Tips, Teenage parenting