”எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே’’ என்பது தொடக்க கால தமிழ் திரையுலகில் பிரபலமான பாடல் ஆகும். ஆம், ஒரு குழந்தையை நல்ல பண்பாளராகவும், நேர்மையானவராகவும் வளர்த்தெடுப்பதில் அவர்களது பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது.
குறிப்பாக, சின்னஞ்சிறு வயது முதலே பிள்ளைகளின் மனங்களில் நேர்மறையான சிந்தனைகளை நீங்கள் விதைத்து விட்டால், அது என்றைக்கும் மாறாது. உங்கள் பிள்ளைகள் மீது பலமான அன்பும், பாசமும் வைத்திருப்பீர்கள். அத்தகைய பிள்ளைகளை நேர்மறை சிந்தனையோடு வளர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
தினசரி பேச்சு கொடுக்க வேண்டும்
வளர் இளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளிடம் பெற்றோர் தினசரி நேரம் ஒதுக்கி பேச்சு கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது தங்களுடைய கஷ்டம், துன்பம், கவலை போன்ற விஷயங்களை பெற்றோரை நண்பராகக் கருதி பிள்ளைகள் பகிர்ந்து கொள்வார்கள். அதே சமயம், அவர்களாக முன்வந்து பேசட்டும் என காத்திருக்காமல் பெற்றோர் தான் முதலில் பேச தொடங்க வேண்டும்.
கருத்து சுதந்திரம்
உனக்கென்ன தெரியும், பேசாமல் இரு என்று பிள்ளைகளை அதட்டக் கூடாது. பிள்ளைகளின் கருத்துக்களையும் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் மனதில் உள்ள பிள்ளைகள் வெளிப்படுத்த வாய்ப்பு இருந்தால், உங்களிடம் எதையும் மறைக்க மாட்டார்கள்.
சுய கவனத்தை ஈர்க்க வேண்டும்
உடல் நலன் மற்றும் மன நலன் சார்ந்த விஷயங்களை பிள்ளைகள் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் வகையில் பெற்றோராகிய நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
வெற்றியை நோக்கி ஊக்குவித்தல்
உங்கள் குழந்தையிடம் தென்படும் தலைமைப் பண்புகளை பாராட்டத் தவறாதீர்கள். அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ, அந்த இலக்கை அடைவதற்கு ஊக்குவியுங்கள்.
குழந்தைகள் ஆக்கப்பூர்வமான வகையில் சமூக வலைதளங்களை பயன்படுத்த டிப்ஸ்...
போதிய இடமளிக்க வேண்டும்
பிள்ளைகளுக்கு என்று தனி சுதந்திரம் இருக்கிறது. அதை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க நாம் தவறக் கூடாது.
நல்லவர்களுடன் பழக விடுங்கள்
நேர்மறையான சிந்தனையோடு பிள்ளைகள் வளர வேண்டும் என்றால், அவர்களை சுற்றியிலும் இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஆகவே, நல்லவர்கள் மத்தியில் பிள்ளைகளை பழக விடுங்கள்.
உதாரணமாக இருக்க வேண்டும்
பெற்றோர் தான் ஒரு குழந்தைக்கு சிறந்த ரோல் மாடலாக இருக்க முடியும். பெற்றோரைப் பார்த்து தான் பிள்ளைகள் வளருகிறார்கள். நீங்கள் எதிர்மறை சிந்தனையோடு இருந்தால், அதே குணம் பிள்ளைகளிடமும் எதிரொலிக்கும்.
பெற்றோரின் வளர்ப்பு முறையை குறை சொல்வது குழந்தை மற்றும் பெற்றோரை எப்படி பாதிக்கும்..?
கருணையை போதிக்க வேண்டும்
அன்பு, கருணை போன்ற குணங்கள் குறித்து பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். சக பிள்ளைகளிடம் கோபம் கொள்ளாமல் நட்பு பாராட்ட வேண்டும் என்று அறிவுத்த வேண்டும்.
வெற்றிக் கதைகளை சொல்லுங்கள்
குழந்தைகளுக்கு எப்போதும் வெற்றிக் கதைகள் சொல்வதை வாடிக்கையாக க்டைப்பிடிக்கவும். குறிப்பாக, தடைகளையும், சவால்களையும் கடந்து வெற்றி பெற்றவர்களின் கதையை போதிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parenting Tips, Positive thinking