ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் குழந்தை ஓவர் செல்லத்தால் கெட்டு போயிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..

உங்கள் குழந்தை ஓவர் செல்லத்தால் கெட்டு போயிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..

உங்கள் குழந்தை ஓவர் செல்லத்தால் கெட்டு பொயிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்

உங்கள் குழந்தை ஓவர் செல்லத்தால் கெட்டு பொயிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்

உங்கள் குழந்தை ஒரு விஷயத்தை அவர்கள் சிறப்பாக செய்தால் மட்டுமே அவர்களை புகழ்ந்து பேசுங்கள். சிறப்பாக செயல்படாத விஷயங்களில் ஊக்கப்படுத்துங்கள் மாறாக பாராட்டாதீர்கள்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தை வளர்ப்பு என்பது எளிய விஷயமல்ல. ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. பல பெற்றோர்கள் நிபந்தனையற்ற அன்புடன் தங்கள் குழந்தையை வளர்க்க நினைக்கிறார்கள். ஆனால் இதற்கான உண்மையான அர்த்தம் தங்கள் குழந்தைகளை எவ்வித கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளுமின்றி பெற்றோர்கள் முழுமையாக ஏற்று கொள்கிறார்கள்.

ஓவராக செல்லம் கொடுத்து கெடுக்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் மீது குற்றச்சாட்டு எழுகிறதல்லவா! அதற்கு இந்த நிபந்தனையற்ற அன்பு காரணமாகிறது. இந்த நிபந்தனையற்ற அன்பு ஒருகட்டத்தில் பெற்றோர்கள் மீதான பயத்தை குழந்தைகளிடம் இருந்து போக்கி விடுகிறது. குழந்தைகள் என்ன செய்தாலும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது அவர்களிடம் பிடிவாதம் மற்றும் ஆக்ரோஷ குணத்தை வளர்க்கிறது. முதலில் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளை பின்னாளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள்.

உங்களது குழந்தை நீங்கள் கொடுக்கும் செல்லத்தால் மோசமாக வளர்கிறது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கீழே:

வார்த்தைகளை புறக்கணிப்பது அல்லது உங்களை மதிக்காமல் இருப்பது...

நீங்கள் செய்ய சொல்லும் சில அடிப்படை விஷயங்களை கூட செய்ய உங்கள் குழந்தை அடிக்கடி மறுத்தால் அல்லது செய்ய விருப்பம் இல்லாமல் ஏதாவது சாக்கு போக்குக் கூறினால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு வற்புறுத்தினாலும் மீண்டும் மீண்டும் சாப்பிட மறுப்பது அல்லது உங்களது அறிவுறுத்தல்களை பின்பற்ற மறுப்பது நாளடைவில் அவர்களுக்குள் பிடிவாத நடத்தை வேரூன்ற வழிவகுக்கும்.

இல்லை என்ற நீங்கள் சொன்னால்...

அவர்கள் கேட்கும் விஷயங்களுக்கு இல்லை, முடியாது, நோ என்று நீங்கள் மறுப்பு தெரிவித்தால் அதனை அவர்களால் பொறுத்து கொள்ள முடியாது. அவர்கள் கேட்கும் விஷயங்களை நீங்கள் செய்து அல்லது வாங்கி தரா விட்டால் கத்தி கூச்சவிடுவது, அழுது ஆர்ப்பாட்டம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்து கொள்வார்கள்.

ஒருபோதும் திருப்தி அடையமாட்டார்கள்...

உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான குக்கீஸ், பிஸ்கட்ஸ் அல்லது சாக்லேட்ஸ் அதே போல விளையாட்டு சாமான்கள் என வகை வகையாக வாங்கி கொடுத்தாலும் போதாது இன்னும் வேண்டும் என்று கேட்டு கொண்டே இருப்பார்கள். கையில் இருப்பதை கொண்டு மகிழ்ச்சியடையாமல் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என லிஸ்ட் போட்டு கொண்டே இருப்பார்கள். அவர்கள் உங்களிடம் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறார்கள். அவற்றையும் பூர்த்தி செய்யாவிட்டால் விரக்தியடைவார்கள். தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யா விட்டால் கத்துவது, அழுவது மற்றும் அடிப்பது போன்ற ஆவேச நடத்தையை வெளிப்படுத்துவார்கள்.

சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்..

உங்கள் குழந்தையை நீங்கள் அதிகமாக பாராட்டினால் அவர்களுக்குள் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் (ஆதிக்க மனப்பான்மை) நடத்தை மோசமாகிவிடும். தாங்கள் சிறந்தவைகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று இந்த குழந்தைகள் நினைக்கிறார்கள்.

Also Read : டிஜிட்டல் தொழில் நுட்பங்களை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிப்பது ஆபத்தா..?

ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நடத்தை இருக்காது..

உங்கள் குழந்தை மோசமான நடத்தை கொண்டிருந்தால் விளையாடும் போது அவற்றை தெரிந்து கொள்ளலாம். விளையாட்டில் தோற்கும் போது அழுவது, கோபமுற்று பொருட்களை விசிறியடிப்பது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட்டால் அவர்களிடம் துளியும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நடத்தை இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளின் நடத்தையை மேம்படுத்த உதவும் டிப்ஸ்கள்:

ஒரு விஷயத்தை அவர்கள் சிறப்பாக செய்தால் மட்டுமே அவர்களை புகழ்ந்து பேசுங்கள். சிறப்பாக செயல்படாத விஷயங்களில் ஊக்கப்படுத்துங்கள் மாறாக பாராட்டாதீர்கள்.
நீங்கள் ஒப்பு கொண்டாலும் இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தை உங்களிடம் என்ன சொல்ல வருகிறது என்பதை கேளுங்கள்.
எப்போதும் வெற்றி பெற முடியாது என்பதை உங்கள் குழந்தை அறிந்து கொள்ள வேண்டும், தோல்விகளை ஏற்று கொள்ள ஏமாற்றத்தை சமாளிக்க கற்று கொடுங்கள்.
உடனடியாக எதுவும் நடக்காது, பல விஷயங்களை பெற பொறுமை மற்றும் நிதானம் முக்கியம் என்பதை வெளிப்படையாக கற்று கொடுங்கள்.
First published:

Tags: Child Care, Parenting, Parenting Tips