ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Parenting in Pandemic : கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உங்கள் குழந்தையை பாதுகாப்பது எப்படி..? பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்கள்..!

Parenting in Pandemic : கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உங்கள் குழந்தையை பாதுகாப்பது எப்படி..? பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்கள்..!

கொரோனா வைரஸ் காலத்தில் சூழல்கள் உங்களை எதிர்மறையான விஷயங்களை நினைக்க வைக்கும். அப்படியான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களா? என்பதை உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள்.

கொரோனா வைரஸ் காலத்தில் சூழல்கள் உங்களை எதிர்மறையான விஷயங்களை நினைக்க வைக்கும். அப்படியான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களா? என்பதை உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள்.

கொரோனா வைரஸ் காலத்தில் சூழல்கள் உங்களை எதிர்மறையான விஷயங்களை நினைக்க வைக்கும். அப்படியான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களா? என்பதை உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சறுத்தலாக இருந்து வருகிறது. இதனால், பெற்றோர்களும், குழந்தைகளும் பீதியில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாதாரண நாட்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதைவிட கொரோனா போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் வேகமாக பரவும் காலத்தில் அவர்களை கூடுதலாக பாதுக்காக வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடத்தில் இருக்கிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லையென்றாலும், நம் வீட்டிற்குள் நுழையாமல் அதனை தடுக்க முடியும். கவலைப்படுவதை விடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் குழந்தைகளை வீட்டில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளியுலக தொடர்புகளில் இருந்து அவர்களை விலக்கி வீட்டிற்குள்ளேயே பாதுக்காக்க வேண்டியது அவசியமாகிறது. வளரும் குழந்தைகளுக்கு உலக நடப்புகள் தெரியாது, வைரஸின் தீவிரம் புரியாது என்பதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவர்களுக்கு மன ரீதியாகவும் உதவியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. வைரஸிடம் இருந்து பாதுகாக்கும் அதேவேளையில், எதிர்மறை எண்ணங்களை அவர்களை சூழாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாக இருப்பதுபோன்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.

உங்களின் கவலைகளை போக்கி குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான சில ஆலோசனைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1. தொற்று காலத்தில் கவலைகள் நம்மை சூழ்ந்து கொள்ளும். ஆனால், அதனை ஒருபோதும் நம்மை ஆளவிடக்கூடாது. கவலைகள் நம்மில் எழும்போது நம்முடைய புத்துணர்ச்சி குறைந்து, தேவையானவற்றில் கவனம் செலுத்துவதை திசைதிருப்பிவிடும். அதனால், கவலை கொள்ளாமல், விழிப்புடன் இருப்பது அவசியம்

2. வைரஸ் சூழ்ந்திருக்கும் காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் கவலைகள் இன்றி இருக்க வேண்டும். தொடர் மன அழுத்தம், மனக்கவலை உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். நேரத்துக்கு சாப்பிடுங்கள், ஆழ்ந்த தூக்கம், போதுமான அளவில் மட்டும் செய்தியை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

3. நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் உடற்பயிற்சியை குழந்தைகளையும் செய்ய ஊக்குவிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது மனகவலைகளில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள நேர்ந்தால், அப்போது யோகா, உடற்பயிற்சிகள் செய்ய முடியாது.

4. கொரோனா வைரஸ் காலத்தில் சூழல்கள் உங்களை எதிர்மறையான விஷயங்களை நினைக்க வைக்கும். அப்படியான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களா? என்பதை உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள். நீங்கள் சிந்திக்கும் அல்லது மற்றவர்களிடம் உரையாடுகையில் இறப்பு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு மற்றும் அவை சார்ந்து எழுகிற அச்சம் குறித்து பேசுகிறீர்களா? என்பதை கவனியுங்கள்.

கொரோனா பாதிப்பு என்பது உங்கள் கையில் இல்லை. அதனால் நீங்கள் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். மாறாக, உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது குறித்து கவனம் செலுத்துங்கள்.

5. குழந்தைகளுக்கு பாதுகாப்பின் அவசியம் குறித்து அதிகப்படியான வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டாம்.

நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? எப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்பதை குழந்தைகள் உன்னிப்பாக கவனித்து அதனை பின்பற்றுவார்கள் என்பதால், அவர்கள் செய்ய வேண்டும் என நினைப்பதை நீங்கள் பின்பற்றுங்கள். தேவையற்ற பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல், கவனமாக இருப்பதன் அவசியத்தையும், நம்பிக்கையான வார்த்தைகளையும் உரையாடலாக கூறுங்கள்.

சாதாரண காய்ச்சல், சளிக்கும் கொரோனா காய்ச்சல், சளிக்கும் என்ன வித்தியாசம்? தெரிந்துகொள்ளுங்கள்..!

6. குழந்தைகளுடன் மனம் விட்டு உரையாடுங்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், வெளியில் பரவும் வைரஸ் நம்மை தாக்காது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். தேவையற்ற பயம் குழந்தைகளின் எண்ணத்தை முடக்கிவிடும். சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு வைரஸ் குறித்த தகவலை தெரிவிக்கும் அதேநேரத்தில் பயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க,

1. வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் சில வேடிக்கையான விளையாட்டுகளை உருவாக்கி விளையாடுங்கள்.

2. வீட்டில் இருக்கும் அனைவரும் உணவு மற்றும் வைட்டமின் சியை சரியாக எடுத்துக்கொள்கிறார்களா? என்பதை கவனிக்க செய்யுங்கள்

3. சிரிப்பு பயிற்சி, டான்ஸ், குடும்ப உறுப்பினர்களுடன் சமைத்தல் போன்றவற்றை செய்யுங்கள்

4. வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்கிறோம் என்ற உணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள்.

First published:

Tags: Corona safety, Kids Care, Parenting