குழந்தை பராமரிப்பு என்பது ஆண் , பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதை உணர்த்த இதைவிட சிறந்த விஷயம் இருக்க முடியாது... ஆம் டெல்லி விமான நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையிலும் குழந்தைக்கு டயப்பர் மாற்றும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
குழந்தைகளை பராமரிப்பது, சுத்தம் செய்வது உள்ளிட்ட விஷயங்களை அம்மாக்கள் மட்டுமே செய்து வந்த நிலை மாறி இன்று ஆண்களும் அதில் சம பங்கு எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தையோடு தனியாக பயணிக்கும் அப்பாக்கள், தனி பெற்றோராக இருந்து குழந்தையை கவனிக்கும் ஆண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பயணங்களில் டயப்பர் மாற்ற இடம் இருக்காது. விமான நிலையங்களிலும் இது வரை பெண்கள் கழிப்பறை அருகே தான் டயப்பர் மாற்றும் இடங்கள் இருந்து வந்தன.
ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் ஆண்களின் கழிவறையிலும் டயப்பர் மாற்றும் நிலையங்களை அமைத்து வருகிறது. இதன் மூலம் பாலின ஸ்டீரியோடைப் உடைந்து, குழந்தை பராமரிப்பு என்பது இரண்டு பேருக்கும் பொதுவானது என்கிற பொறுப்பை உணர்த்துகிறது.
GMR இன்ஃப்ரா நடத்தும் டெல்லி சர்வதேச விமான நிலையம், குழந்தை பராமரிப்புக்கான பாலின-நடுநிலை டயப்பர் மாற்றும் நிலையத்தை உருவாகியுள்ளது. தானியங்கி நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளுடன் குழந்தையை படுக்க வைத்து டயப்பர் மாற்றும் வசதிகளை செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், ஆண்கள் கழிப்பறைகளில் டயப்பர் மாற்றும் அறைகள் 2014 முதல் செயல்பட்டு வருகின்றன.
உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்காத பிள்ளைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது..?
பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் டெர்மினல் ஆபரேஷன்ஸ் தலைவர் சம்ப்ரீத் எஸ்கே கூறுகையில், “எங்கள் நிறுவனம் பாலின சமத்துவ நடைமுறைகளை நிலைநிறுத்துவதில் எப்போதும் முனைப்பு கொண்டுள்ளது. பெங்களூர் விமான நிலையத்தில் உள்ள அனைத்து கழிவறைகளிலும் இந்த டயபர் மாற்றும் அறைகள் உள்ளன” என்றார்.
தங்கள் குழந்தைகளுடன் பயணிக்கும் பல தந்தைகள் இந்த முன்னெடுப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர். பயணத்தில் டயப்பர் மாற்ற தடுமாறும் சூழல் இதனால் குறைந்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ஆண்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றுவதில் இனி எந்த சிரமும் இருக்காது. இனி தந்தையாகப்போகும் ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்பில் தங்களுடைய பங்கெடுப்பையும் உணர்த்தும் விதமாக இந்த விஷயம் அமைந்துள்ளது.
டெல்லி , மும்பை , பெங்களூரு விமான நிலையங்களில் ஆண்கள் கழிவறையில் பிரத்தியேக டயப்பர் மாற்றும் நிலையங்களை நிறுவுவது மகிழ்ச்சிக்குறிய விஷயம் என்றாலும் இது முதல் படிதான். அதேசமயம் இதுபோன்ற முயற்சிகளை அரசாங்கமும், நிறூவனங்களும் முன்னெடுக்கும்போது மாற்றத்திற்கான தூரம் வெகுதொலைவில் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.