Home /News /lifestyle /

ஒமைக்ரான் அறிகுறிகள் குழந்தைகளிடம் எப்படி இருக்கும்..? தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கும் வருமா..?

ஒமைக்ரான் அறிகுறிகள் குழந்தைகளிடம் எப்படி இருக்கும்..? தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கும் வருமா..?

ஒமைக்ரான் அறிகுறிகள்

ஒமைக்ரான் அறிகுறிகள்

Omicron Symptoms : UK-வில் தடுப்பூசி போட்ட குழந்தைகளில் ஒமைக்ரான் அறிகுறிகளை லேசாகக் கண்டுள்ளது. நோய்த்தொற்றுக்குப் பிறகு, குழந்தைகள் பெரும்பாலும் சளி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.

டெல்டா மாறுபாட்டான கோவிட்-19 இன் இரண்டாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது ஒமைக்ரான் மாறுபாட்டிலும் அதே தரவுகளை  காணமுடிகிறது. புதிய மாறுபாட்டான ஒமைக்ரான் காரணமாக கோவிட்-19 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகள் மீண்டும் இதில் சிக்கியுள்ளனர்.

குழந்தைகள் தொற்று நோய்க்கு எளிதில் ஆட்படுகின்றனர். அதோடு தீவிர அறிகுறிகளையும் அனுபவிக்கின்றனர். இது குழந்தைக்கு ஏற்கனவே இருக்கும் பிற உடல்நலப் பிரச்சினைகளோடு தீவிர பாதிப்பை உண்டாக்குகின்றன. கடந்த வாரத்தில், இந்தியாவில் ஓமைக்ரான் மாறுபாடு வழக்குகள் அதிகரித்துள்ளன. எனவே, குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்த்தொற்றின் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

குழந்தைகளில் கோவிட்-19 அறிகுறிகள் :

Zoe கோவிட் ஆய்வு என்பது ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாடாகும். இது இங்கிலாந்தில் உள்ள மக்கள் எவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது. இந்த செயலி குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பயன்படுகிறது.

தரவுகளின்படி, சோர்வு என்பது குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகுறியாகும்.



குழந்தைகள் அனுபவிக்கும் மற்ற அறிகுறிகள் இங்கே:

  • சோர்வு

  • தலைவலி

  • தொண்டை வலி

  • மூக்கு ஒழுகுதல்

  • தும்மல்


தரவுகளின்படி, பெரியவர்களில் கொரோனா வைரஸின் அறிகுறிகள் குழந்தைகளிடமிருந்து வேறுபட்டவை. அவை...

  • மூக்கு ஒழுகுதல்

  • தலைவலி

  • சோர்வு

  • தும்மல்


பெரியவர்கள் மூக்கு ஒழுகுதலை முதல் அறிகுறியாக அனுபவிக்கின்றனர். பிறகு தலைவலி, சோர்வு மற்றும் தும்மல் வரும்.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் முதுகுவலி : குணமடைந்த பின்பும் தொடர்வதாக வல்லுநர்கள் விளக்கம்...

குழந்தைகளிடையே தெரியும் கோவிட்-19 - இன் அரிய அறிகுறிகள் என்ன?

ஒமைக்ரான் சுவாச அமைப்பு மற்றும் உடலில் உள்ள பிற உறுப்புகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி பாதிக்கப்படும்போது குழந்தைகள் அனுபவிக்கும் அரிதான அறிகுறிகள்

  • வயிற்றுப்போக்கு

  • சரும தடிப்புகள்


தரவுகளின்படி, சில சந்தர்ப்பங்களில் காற்றுப்பாதை தொற்று இருமல் போன்ற கடுமையான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இந்த சத்தம் காது கொடுத்து கேட்க முடியாதபடி இருக்கும்.



தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் அனுபவிக்கும் அறிகுறிகள் என்ன..?

15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் செயல்முறையை இந்தியா சமீப நாட்களுக்கு முன்புதான் தொடங்கியுள்ளது. அப்படி UK-வில் தடுப்பூசி போட்ட குழந்தைகளில் ஒமைக்ரான் அறிகுறிகளை லேசாகக் கண்டுள்ளது.
நோய்த்தொற்றுக்குப் பிறகு, குழந்தைகள் பெரும்பாலும் சளி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இவை பெரிய தீவிர அறிகுறிகளுக்கு வழிவகுக்காது. நிபுணர்களின் கூற்றுப்படி, தடுப்பூசி மூலம் கொரோனாவைத் தடுக்க முடியாது. ஆனால் தீவிரத்தை குறைக்க முடியும்.

வைட்டமின் டி குறைபாடு புற்றுநோயை உண்டாக்குமா.? ஆய்வுகள் என்ன சொல்கின்றன..

உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான உதவிக்குறிப்புகள் :

  • உங்கள் குழந்தைகள் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவராக இருந்தால், அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடுவது அவசியம். தடுப்பூசி அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கிறது மற்றும் கடுமையான தொற்று அபாயத்தை குறைக்கிறது.

  • முகமூடிகளை அணிவது, சரியான சுகாதாரத்தைப் பின்பற்றுவது மற்றும் அவசியமாகும் வரை வெளியே செல்லாமல் இருப்பது போன்ற தேவையான அனைத்து கோவிட்-19 விதிமுறைகளையும் உங்கள் குழந்தை பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus Symptoms, Kids Care, Omicron Symptoms

அடுத்த செய்தி