Home /News /lifestyle /

"இனி நோ ஷேரிங்" - பள்ளிகள் திறக்கும் நிலையில் கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்!

"இனி நோ ஷேரிங்" - பள்ளிகள் திறக்கும் நிலையில் கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்!

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

ஒவ்வொரு மணி நேரமும் குறைந்தது 20 வினாடிகளுக்கு உங்கள் குழந்தைகளின் கைகளை கழுவ வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். இதையடுத்து மிகமுக்கியமான ஒன்று முகக்கவசங்களை அணிவது.

18 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் கொரோனா வைரஸால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், அவர்களுக்கான தடுப்பூசி இன்னும் வெளிவராத காரணத்தினாலும், COVID-19 வைரஸின் பல மாறுபாடுகளுக்கு ஆளாகாமல் அவர்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இது தொடர்பாக ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், ஆஸ்டர் மெடிசிட்டி, குழந்தை நல மருத்துவர் ஆலோசகர் ஜீசன் சி உன்னியின் கூற்றுப்படி, "குழந்தைகள் பெரியவர்களைப் போலவே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று மற்றும் வைரஸ் பரவுதல் என்பது ஒரே மாதிரியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான குழந்தைகளுக்கு அறிகுறியற்ற அல்லது லேசான கொரோனா நோய்த்தொற்றுகள் இருந்தாலும், மற்றவர்களுக்கு அதிதீவிரமாக பரவுவதற்கான முக்கிய ஆதாரமாக குழந்தைகள் உள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுகள் தீவிரமாகவோ அல்லது குறைந்த தீவிரத்துடனோ பாதிக்கப்பட்ட இளம் குழந்தைகள் மற்றும் கொமொர்பிடிடிஸ் கொண்ட குழந்தைகள் பெரும்பாலும் 3-6 வாரங்களுக்குப் பிறகு, கடுமையான நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் இறப்புகளும் அடிக்கடி பதிவாகியுள்ளன. மேலும் பள்ளிகள் திறந்துள்ள இது போன்ற காலகட்டத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் பற்றி விரிவாக காண்போம். பல மாநிலங்கள் தற்போது பள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளை வகுப்பறைக்கு வரவழைத்துள்ளனர்.எனவே எல்லா நேரங்களிலும் கோவிட்-பொருத்தமான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடன் மீண்டும் இணைவதில் உற்சாகம் அதிகமாக இருக்கும்போது, ​​குழந்தைகள் தங்களால் முடிந்தவரை சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் நீங்கள் விரும்பினால், வீட்டிலேயே ஒரு வகுப்பறையை உருவகப்படுத்துங்கள். அவர்களின் உடன்பிறப்புகள் அல்லது பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களின் வகுப்பு தோழர்களாக இருங்கள்.

ஒமேகா-3 சத்து நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அனைத்து நெறிமுறைகளையும் அனைவரும் பின்பற்றவும். இதன் மூலம் உங்கள் குழந்தைகள் பள்ளி சென்ற பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்வார்கள். அதேபோல மதிய உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிற சமையல் பொருட்களை பகிர்ந்து கொள்ள கூடாது என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரமும் குறைந்தது 20 வினாடிகளுக்கு உங்கள் குழந்தைகளின் கைகளை கழுவ வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். இதையடுத்து மிகமுக்கியமான ஒன்று முகக்கவசங்களை அணிவது. உங்கள் குழந்தைகளுக்கு முகக்கவசங்களை எப்படி அணிய வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். எப்போதும் அவர்கள் முகக்கவசங்களை அணிவது முக்கியம். மேலும் ஒரு முகக்கவசத்தை இறுக்கமான ஆனால் வசதியான பொருத்தத்துடன் போட்டிருக்க வேண்டியதும் அவசியம்.கியோ லைஃப் உருவாக்கியதைப் போன்ற புதிய முகக்கவசங்கள், தனித்துவமான நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகளைப் பயன்படுத்துகின்றன.

இது கரிம சாற்றைப் பயன்படுத்துகிறது. இந்த கூறுகள், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் கலக்கப்பட்டு மேலும் மாஸ்க்கின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும்போது, ​​வைரஸ்களை மேற்பரப்பில் சிக்க வைத்து கொல்வதன் மூலம் SARS-CoV-2 க்கு எதிராக ஒரு பாதுகாப்பான கவசத்தை வழங்குகிறது. கொரோனா வைரஸ் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வை உலகளாவிய விஷயமாக மாற்றியுள்ளது.

நண்பர்களுடன் விளையாட, அல்லது குடும்பத்துடன், அல்லது பள்ளி அல்லது பயிற்சிக்காக வெளியே சென்றாலும், குழந்தைகள் தனிப்பட்ட சானிடைசர்களை எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களோ அல்லது நீங்களோ மற்ற மேற்பரப்புகளை அடிக்கடி தொட்டால் ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.மேலும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கிடைத்தவுடன், தயங்காமல் உங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை முன்பதிவு செய்வது மிக அவசியம். இதற்கிடையில், குடும்பத்தில் உள்ள அனைத்து பெரியவர்களும் தங்களுக்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது எப்போதுமே சிறந்தது. ஏனெனில் குழந்தைகள் அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் கூட, வைரஸின் கேரியர்களாக இருக்க முடியும். இது குழந்தைகளுக்கு அவர்களின் வழக்கமான காய்ச்சல் தடுப்பூசிகளையும் மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளையும் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதை வலுயுறுத்துகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Children, Covid-19, School

அடுத்த செய்தி