Home /News /lifestyle /

NationalPollutionControlDay | குழந்தைகளை காற்று மாசுபாட்டில் இருந்து பாதுகாப்பது எப்படி? வீட்டுக்கு உள்ளும், வெளியிலும் செய்யவேண்டியவை என்ன?

NationalPollutionControlDay | குழந்தைகளை காற்று மாசுபாட்டில் இருந்து பாதுகாப்பது எப்படி? வீட்டுக்கு உள்ளும், வெளியிலும் செய்யவேண்டியவை என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

வெளியில் செல்லும்போது, மாஸ்க் அணிந்துகொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் கைகுட்டையையாவது மாஸ்காகப் பயன்படுத்தலாம்.

மாசுபாடு காரணமாக உருவாகும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டு 2016-ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களில் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 10,000 குழந்தைகள் இறந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 60,987 ஆகும்.

ஆபத்தான மோசமான காற்றின் தரம் பெரியவர்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்துமா, சிறியவர்களுக்கும் அதே அபாயங்களை உண்டு பண்ணும். இதுகுறித்த ஆராய்ச்சியின் படி, காற்று மாசுபாடு கடந்த ஆண்டு 1.16 லட்சம் குழந்தை இறப்புகளை ஏற்படுத்தியது, மேலும் குழந்தைகளை நீண்டகால சுகாதார பாதிப்புகளுக்கு காற்று மாசுபாடுகள் ஆளாக்குகிறது. காற்று மாசுபாடு கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பது, குழந்தையின் உடல் எடை குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக இறப்பவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள். உலகில் பெருமளவு மக்கள் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ‘மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்படையும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.

குழந்தைகளுக்கு ஆபத்தானது வெளிப்புற காற்று மட்டுமல்ல, உங்கள் வீட்டிலும் ஏராளமான மாசுபாடுகள் மறைந்திருக்கக்கூடும், இதனால் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, உங்கள் விலைமதிப்பற்ற குழந்தை பாதுகாப்பாக சுவாசிக்க நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.ஏர்-பியூரிபயர் :

உலகின் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, எல்லோரும் பாதுகாப்பான சூழலில் தங்குவது அவசியம். தூய்மையான காற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் சூழல் இப்போது இல்லை. காற்று மாசு மற்றும் காற்றில் பரவும் நோய்கள் பல ஆண்டுகளாக மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன, மேலும் ஒருவர் தங்கள் வீடுகளின் எல்லைக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இதற்கு ஏர்-பியூரிபயர் மெஷினை நீங்கள் கருத்தில் கொள்வது முக்கியம். ஒரு ஏர்-பியூரிபயர் உங்கள் வீட்டை நச்சுத்தன்மையிலிருந்து காக்க உதவுகிறது, அனைத்து வைரஸ்கள், தூசி மற்றும் வான்வழி நோய்களை இது நீக்குகிறது.

வெளிப்புற மாசை கட்டுப்படுத்துங்கள் :

ஒரு நபர் சுவாசக் கோளாறுகளை அனுபவிக்க வெளியில் உள்ள காற்றே போதுமானது. சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இதனால் அதிகம் பாதிப்புக்குளாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை முகமூடி அணிய ஊக்குவிக்க வேண்டும். முடிந்த வரை குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

வாகன மாசு:

உங்கள் வாகன புகை வெளியேற்றத்தை அவ்வப்போது பரிசோதித்து தேவைப்படுமாயின் சீர் செய்யலாம். வாகனத்தை நல்முறையில் பராமரித்தல் சீர்கேட்டைத் தவிர்க்கும். கூடுமானவரையில் பொது வாகனங்களில் பயணித்தல் எரிபொருள் தட்டுப்பாட்டையும் தூய்மைக் கேட்டினையும், சாலை நெரிசலையும் பெருமளவு மட்டுப்படுத்தும். இதை விட முக்கியம் உங்கள் குழந்தையை வாகனப்புகை அணுகாமல் பார்த்துக்கொள்ளலாம்.தொழிற்சாலை மாசு :

தொழிற்சாலைகளில் வடிப்பான்களையும், சுத்திகரிப்பு கலன்களையும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத போது சுற்றியுள்ள சமூகத்துக்கு பெரும் இன்னலை அது ஏற்படுத்திவிடும். கருவில் இருக்கும் சிசுக்களும் இதனால் பாதிக்கப்படும். அந்த அளவிற்கு இந்த தொழிற்சாலை மாசு மிகவும் மோசம்.பர்பியும்/பெயிண்ட்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்கவும்:

சில பர்பியும் மற்றும் பெயிண்ட்கள், PM 2.5ன் தடயங்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இவற்றை நம் அரவணைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் அவற்றை உள்ளிழுக்கும்போது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால், இந்த தயாரிப்புகளை அவர்கள் மேல் படாமல் வைத்திருங்கள். ரசாயனப் பொருள்களுக்குப் பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவதற்கு அனைவரையும் நீங்களே ஊக்கப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..

கதவு மற்றும் ஜன்னல்களை மூடியே வையுங்கள் :

சூரிய ஒளி குழந்தைக்கு நல்லது என்று பலரும் கூறுவர் அதில் எந்த சந்தேகமும் இல்லை சூரிய ஒளிக்காக நீங்கள் உங்கள் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்திருந்தால் நிச்சயம் அதன் வழியாக கிருமிகள், மாசுபடுத்திகள் போன்றவை துர்நாற்றத்துடன் சேர்ந்தோ அல்லது தூசுக்களுடன் சேர்ந்தோ உங்கள் குழந்தைகளை தாக்கும் அபாயம் உள்ளது. விட்டமின் D கிடைக்க குழந்தையை ஒரு சுத்தமான இயற்கை இடத்திற்கு காலையில் அழைத்துச் செல்வது முக்கியமானது. மாசு சேராத இடத்தை அடையாளம் கண்டு அங்கு குழந்தைக்கு தேவையான விட்டமின் D சத்தினை பெற வைக்கலாம். தேவையில்லாத நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.

காற்று மாசு குறித்த பொது குறிப்புகள்:-

* வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைதான் நம் உடலுக்கு மிகப்பெரிய எதிரி. நம் ஒவ்வொருவரும் முயன்றால் மட்டுமே இதனைக் கட்டுப்படுத்த முடியும். அவசரமில்லாத, சாதாரண சூழல்களில், பொது வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

* வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியாவில் வாகனங்கள் வெளியிடும் புகையால் 70 சதவீத காற்று மாசுபாடு ஏற்படுகிறது.* தனிநபர் வாகனங்கள் அதிகரிப்பதால் 2001-02ம் ஆண்டில் 75.7 சதவீதமாக இருந்த பொதுப் போக்குவரத்து பயன்பாடு 2030-31ம் ஆண்டில் 44.7 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

* வெளியில் செல்லும்போது, மாஸ்க் அணிந்துகொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் கைகுட்டையையாவது மாஸ்காகப் பயன்படுத்தலாம். ஹெல்மெட் அணிந்திருக்கும் சிலர், கடுமையான போக்குவரத்து நெரிசலிலும் மூக்கை மூடாமல் இருப்பார்கள். அவர்கள் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம்.

மாசு மற்றும் தொற்றுநோய் பாதிப்புகளுக்கிடையே உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முக்கியமான டிப்ஸ் இதோ..

* குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். டெல்லியின் மாசு கலந்த காற்றுக்கான முக்கியக் காரணம், அளவுக்கு மீறி அங்கு எரிக்கப்பட்ட குப்பைகள். இது உங்கள் குழந்தையை பாதிக்கும்.

காற்று மாசுபாட்டால் பலரையும் பாதிக்கும் பிரச்னை நுகர்வுத்திறன் பாதிப்பு. கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, நுகரவே முடியாமல் போகும் நிலைக்கு ஆளாக்கிவிடும். இது சிறு குழந்தைகளுக்கும் பொருந்தும். இந்தநிலை நீடித்தால் ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து புகைமண்டலங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அவ்வப்போது மருத்துவர்களை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காற்று மாசுபாட்டைப் போக்க, நம் எல்லோருக்குமே இயற்கையின் மீது அக்கறை அதிகரிப்பதுதான் நிரந்தர தீர்வு தரும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Air puriffier, New born baby

அடுத்த செய்தி