ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் மர்மமான தொற்று : அதிவேகமாக பரவுவதாக தகவல்

குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் மர்மமான தொற்று : அதிவேகமாக பரவுவதாக தகவல்

குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் மர்மமான தொற்று

குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் மர்மமான தொற்று

கண்கள் சிவந்து போவது, தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படும். இதற்கு அடினோவைரஸ்கள் காரணம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு சில நோய்த்தொற்று பாதிப்புகளை தவிர்க்கவே முடியாது. குறிப்பாக, வளரும் பிள்ளைகள் பல விதமான தொற்று பாதிப்புக்கு உள்ளாவர்கள். குறிப்பாக, ஹெப்படைடிஸ் எனப்படும் கல்லீரலை பாதிக்கும் நோயும் வளரும் பிள்ளைகளை பாதிக்கும். இந்த பாதிப்பு மிதமாக இருப்பது ஆபத்து இல்லை. ஆனால், தற்போது இங்கிலாந்தில் குழந்தைகளை பாதிக்கும் தொற்று தீவிரமான கல்லீரல் பாதிப்பாகக் காணப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகிறது என்ற அச்சுறுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளின் கல்லீரலில் அழற்சி ஏற்படுத்தும் நோய் :

மருத்துவர்கள் மாற்றம் சுகாதார நிபுணர்கள், கல்லீரலை மர்மமாகத் தாக்கும் இந்த நோயை முதலில் குழந்தைகளில் அடையாளம் கண்டுள்ளனர். ஜனவரி மாதம் முதல், இது வரை 74 குழந்தைகள் கல்லீரல் அழற்சியால் தீவிரமாக பாதிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு, வழக்கமாக கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ்களால் உண்டாகவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த பாதிப்புக்கு சுற்றுசூழல் காரணமா அல்லது கோவிட்-19 போன்ற வைரஸ்கள் காரணமா என்பது பற்றி விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த செவ்வாயன்று வெளியான ஒரு அறிக்கையில், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ஹெபாடிடிஸ் பாதிப்பு :

அலபாமாவில் 1 முதல் 6 வயது வரையுள்ள 9 குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு எற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் பேராசிரியரான கிரஹாம் குக் "பலவிதமான வைரஸ் தொற்றுகள் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு லேசான ஹெபடைடிஸ் பாதிப்பு மிகவும் பொதுவானது. ஆனால் தற்போது காணப்ப்படும்நோய் முற்றிலும் வேறாக இருக்கிறது" என்று கூறினார்.

பிள்ளைகளை அதிகம் திட்டுவதால் விபரீத முடிவுகளை எடுக்க தூண்டுகிறதா..? வல்லுநர் விளக்கம்

யுகேவில் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு, ஸ்பெஷல் கல்லீரல் சிகிச்சைஉயில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது மற்றும் சிலருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

பேராசிரியர் குக், இந்த பாதிப்புக்குக் காரணம் கோவிட்-19 வைரஸாக இருக்கிறது என்று நம்புகிறார். "ஹெபடைடிஸ் பாதிப்பு கோவிட் தொற்றின் விளைவாக இருந்தால், அதிக அளவில் கோவிட் -19 பரவி வருவதால், அது நாடு முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்" என்று அவர் கூறினார்.

வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகள் :

கண்கள் சிவந்து போவது, தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படும். இதற்கு அடினோவைரஸ்கள் காரணம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அலபாமாவில் கடுமையான ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 9 குழந்தைகளுக்கு அடினோவைரஸுக்கு பாசிடிவ் ரிசல்ட் வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடினோவைரஸ் இருந்தாலே குழந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுமென்று நினைக்கக் கூடாது. இங்கிலாந்தில் அடினோவைரஸ் தொற்று அதிகரித்திருந்தாலும்,அதற்கும் ஹெபாடைடிஸ் பாதிப்புக்கும் என்ன தொடர்பு என்பது இது வரை தெரியவில்லை. இதற்கு மரபணு ஆய்வு தேவை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

First published:

Tags: Kids Health, Liver Disease