20 ஆண்டுகளுக்கு முன்பு மகள்களுக்காக வாங்கிய ஹாரி பாட்டர் புத்தகத்தின் விலை இப்போது ரூ.30 லட்சம்!

20 ஆண்டுகளுக்கு முன்பு மகள்களுக்காக வாங்கிய ஹாரி பாட்டர் புத்தகத்தின் விலை இப்போது ரூ.30 லட்சம்!

ஹாரி பாட்டர் புத்தகம்

இந்த புத்தகம் புத்தகம் 1997-ம் ஆண்டில் முதல் முதலாக அச்சிடப்பட்ட தொகுப்பில் இருந்து பெறப்பட்டதாகும்.

  • Share this:
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன் என்ற ஹார்ட்பேக் நகலை தனது குழந்தைகளுக்காக ஒரு யூரோ டாலர்களுக்கு வாங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பின்படி 100 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்த புத்தகம் 1997-ம் ஆண்டில் முதல் முதலாக அச்சிடப்பட்ட தொகுப்பில் இருந்து பெறப்பட்டதாகும். இந்த நிலையில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, கடந்த 2005-ம் ஆண்டு உயிரிழந்தார்.

அப்போது அவருக்கு வயது 44. மேலும் அவருக்கு 4 மகள்கள் இருந்தனர். ஆசிரியை தனது நான்கு மகள்களுக்காகவும் விட்டுச்சென்ற பொருட்கள் குறித்து ஆராய்ந்தபோது தான், சிறு வயதில் தங்களுக்காக வாங்கி வந்த ஹாரி பாட்டர் புத்தகம் மகள்களின் கண்ணில் பட்டது. உலக அளவில் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதையை பற்றிய புத்தகத்தை வாசிக்கும் போது குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள் என்ற நோக்கத்தில் அந்த புத்தகத்தை ஆசிரியை வாங்கியுள்ளார். ஆனால் 20 வருடத்திற்கு முன்பு வாங்கிய இந்த புத்தகம் ஒரு அரிய முதல் பதிப்பு என்று ஆசிரியையின் மகள்கள் விரைவில் கண்டுபிடித்தனர். வெறும் ரூ.100க்கு வாங்கிய புத்தகத்தின் மதிப்பு இப்போது 30,000 டாலர் அதாவது 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த புத்தகம் ஒரு அல்டிமேட் பாட்டர் ரசிகர்கள் சேகரிக்கும் பொருள்களில் ஒன்று என விவரிக்கப்படுகிறது. அதிலும் வெறும் 500 பிரதிகள் மட்டுமே இதுவரை அச்சிடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய புத்தகத்திற்கு அதிக டிமாண்ட் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு நல்ல நிலைமையில் இருந்த இதேபோன்ற புத்தகம் சுமார் 68,000 யூரோ டாலர்களுக்கு அதாவது ரூ.68 லட்சத்திற்கு விலை போனதாகவும் கூறப்படுகிறது. மேலும் 4 மகள்களிடம் இருக்கும் புத்தகத்தை பற்றி பேசிய பர்டன்-ஆன்-ட்ரெண்டின் சபை ஊழியர் ஒருவர், "பல ஆண்டுகளாக ஒரு அலமாரியில் தூசி சேகரித்து வைத்திருந்த இந்த புத்தகம், ஹாரி பாட்டரின் முதல் பதிப்பாகும்" என்று பர்மிங்காம் மெயில் பத்திரிகைக்கு தெளிவுபடுத்தினார். தனது குழந்தைகளுக்காக ஆசிரியை வாங்கிய புத்தகம் இப்போது அவரது மகள்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தந்துள்ளது.

மறைந்த பள்ளி ஆசிரியை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். அவரது குழந்தைகளும் தன்னை போலவே புத்தகங்கள் படிப்பதில் ஈடுபட வேண்டும் என்று ஆசைப்பட்டவர், இதற்காக வீட்டில் நிறைய குழந்தைகள் படிக்கும் கதை புத்தகங்களை வாங்குவாராம். அப்படி வாங்கியது தான் இந்த ஹாரி பாட்டர் புத்தகமும். புத்தகம் படிப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை தனது குழந்தைகளும் அனுபவிக்க வேண்டும் என்பதை அவர் விரும்பியுள்ளார். மேலும் பர்மிங்காம் மெயில் வெளியிட்ட அறிக்கையின்படி, அரிய ஹாரி பாட்டர் புத்தகம் ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள ஹான்சன்ஸ் ஏலதாரர்களின் ஹாமர் நிறுவனத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் நான்கு சகோதரிகளுக்கும் பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஹான்சன்ஸ் ஏலதாரர்களின் உரிமையாளர் சார்லஸ் ஹான்சன் கூறியதாவது, "ஒரு தாயின் அன்பு என்றென்றும் நீடிக்கும். மேலும் அவரது மகள்களுக்கான இந்த எதிர்பாராத பரிசு சொர்க்கத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது" என்று கூறினார். இறந்த பெண்ணின் 31 வயதான மூத்த மகள் இது குறித்து பர்மிங்காம் மெயில் செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டதாவது, இந்த புத்தகம் எங்களது தாய் இறந்ததிலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக அலமாரியில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. யாரும் பெரிதாக கண்டுகொள்ளாததால் புத்தகம் அதிக அளவில் தூசிகளைக் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏலத்திற்குப் பிறகு பெறப்படும் பணத்தை தாயின் மரபுபடி நான்கு மகள்களுக்கு சமமாக பிரித்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: