முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Monsoon Disease : மலேரியா முதல் காலரா வரை... மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 நோய்கள்!

Monsoon Disease : மலேரியா முதல் காலரா வரை... மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 நோய்கள்!

மழைக்கால நோய்கள்

மழைக்கால நோய்கள்

கிருமிகள் மற்றும் வைரஸ்கள் குழந்தைகளை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மழை காலத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் இடைவிடாத பெய்யும் மழையை வெளியே சென்று ரசிப்பது, தெருவில் விற்பனை செய்யப்படும் உணவை சாப்பிடுவது மற்றும் குட்டைகளில் விளையாடுவது என குழந்தைகள் குதூகலமாக இருப்பார்கள். இருப்பினும், இவை கிருமிகள் மற்றும் வைரஸ்கள் குழந்தைகளை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மழை காலத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

மழைக்கால நோய்கள் எளிதில் தொற்றும் அபாயத்தை ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நினைத்து கவலை கொள்கிறார்கள். மேலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் காலரா போன்ற பிற நோய்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி சில நேரங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.

கொசுக்களிலிருந்து பாதுகாப்பு மழைக்கால நோய்கள் வராமல் தவிர்ப்பதற்கான ஒரு முக்கிய வழியாகும். மேலும் மழைக்காலங்களில் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிடுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நோய்களில் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்வோம்.,

மலேரியா

மலேரியா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொசுவின் மூலம் பரவும் தொற்று நோயாகும். மழைக்காலத்தில் இடைவிடாது பெய்யும் மழையால் பல்வேறு பகுதிகளில் குட்டைகளாக நீர் தேங்கும் நிலை உருவாகக்கூடும், இவை கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுகிறது. நோயை பரப்புவதில் பெண் கொசுவான அனோபிலிஸ் முக்கிய பங்காற்றுகிறது. இது பாதிப்புள்ள நபரை கடித்த பின்னர் மற்றொருவரை கடிப்பதால் தொற்று பரவுகிறது. இதனால் மழைக்காலங்களில் உங்கள் குட்டைகளில் விளையாடுவதை தடுக்க வேண்டும். கொசுக்கள் கடிக்காமல் பாதுகாப்பதும், உடலை மறைக்கும் ஆடைகளை அணிவதும், கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதும் மலேரியா நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான வழியாகும்.

கொரோனாவில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஆயுஷ் அமைச்சகம்!

காலரா

காலரா கொசுக்களால் பரவும் நோயாக இல்லாவிட்டாலும், விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பாக்டீரியாவினால் உண்டாகும் சிறுகுடலில் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும். இந்த பாக்டீரியா பொதுவாக அழுக்கு அல்லது அசுத்தமான நீரில் செழித்து வளர்கிறது, அத்துடன் அவற்றில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களிலும் கலந்து விடுகிறது. விபிரியோ காலரே பாக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந்நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

டைபாய்டு

அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரில் உள்ள பாக்டீரியாவின் மூலம் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல், ஜீரண பாதையை பாதித்த பின், ரத்த ஓட்டத்திலும் கலக்கிறது. இந்த காய்ச்சல் ஸ்டைப்டிக் என்ற பாக்டீரியத்தால் ஏற்படுகிறது. சுகாதாரமற்ற நிலை, பாதுகாப்பற்ற குடிநீர், அசுத்தமான உணவு உள்ளிட்டவைகளே, டைபாய்டு காய்ச்சல் ஏற்படுத்துவதற்கான முக்கியமான காரணிகள் ஆகும். காய்ச்சல், வயிற்று வலி மற்றும் கடுமையான தலைவலி ஆகியவை நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும். இந்த நோய் ஏற்பட்டால் அந்த நபரை தனிமைப்படுத்தி வைத்திருப்பது அவசியம்.

டெங்கு

டெங்கு ஒரு ஆபத்தான பருவகால நோயாகும். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். டெங்கு வைரஸை சுமக்கும் கொசு ஒரு நபரைக் கடித்தவுடன், அது நேரடியாக இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி தட்டணுக்களை குறைகிறது. மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி, நிணநீர் கணுக்களின் வீக்கம், பலவீனம், தலைவலி, காய்ச்சல் மற்றும் இரத்தக்கசிவுக்கு வழிவகுக்கும். இது ஆபத்தானது என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைரஸ் காய்ச்சல் :

வைரஸ் காய்ச்சல் ஆண்டின் எந்த நேரத்திலும் மனிதர்களுக்கு வரலாம். பருவமழையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிவேகமாக அதிகரிக்கும். இது குறிப்பாக வானிலை மாற்றங்கள் இருக்கும்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடுமையான காய்ச்சல், தும்மல், பலவீனம் மற்றும் தொண்டை புண் ஆகியவை இந்த காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். வைரஸ் காய்ச்சளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும்.

First published:

Tags: Disease, Kids Care, Monsoon rain