மொபைல் பயன்பாடு உங்கள் குழந்தைகளில் படைப்பாற்றல், பகுப்பாய்வு திறனுக்கு வழிவகுக்கும்: ஆய்வில் புதிய தகவல்!

மாதிரி படம்

விவரங்களுக்கு கவனம் செலுத்துபவர்கள் பகுப்பாய்வு சிந்தனையில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் இவர்கள் குறைவான படைப்பாற்றல் மற்றும் பலவீனமான சமூக திறன்களைக் கொண்டவர்களாக இருப்பர்.

  • Share this:
மொபைல் போன்களை அதிக நேரம் உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் என்பது நமக்கு தெரியும். இருப்பினும், இப்போதெல்லாம் பல குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாக உள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகளை சாப்பிட வைக்கும் போதும் தூங்க வைக்கும் போதும் மொபைல் போன்கள்கொடுப்பதை பெற்றோர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குழந்தைகள் சேட்டை செய்யும் போது அவர்களுக்கு மொபைல் என்ற ஒரு கருவியை கொடுத்து விட்டு அவர்களை அமைதிப்படுகின்றனர்.

ஆனால் இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறியவில்லை. டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு குழந்தைகள் தற்போதைய உலகை எவ்வாறு உணர்கின்றனர் என்பதில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது என ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள ஈட்வோஸ் லோராண்ட் பல்கலைக்கழகம் (ELTE) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டேப்லெட் அல்லது மொபைல் சாதனங்களை அடிக்கடி பயன்படுத்தும் குழந்தைகள் பெரும்பாலும் சில விஷயங்களை பார்க்கும் கண்ணோட்டத்தில் வேறுபடுகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் நுண்ணிய விவரங்களில் மட்டும் கவனம் செலுத்த நேரிடும் என்பதை இது குறிக்கிறது. உதாரணத்திற்கு ட்ரெக்கிங், சுற்றுலா என காடுகள் சூழ்ந்த பகுதிக்கு செல்லும் மக்கள் அவற்றை எப்படி பார்க்கிறார்கள் என்பதில் சில வித்தியாசங்கள் இருக்கிறது. அவர்கள் இயற்கையை ரசிக்கும் வண்ணம் முழு காடுகளையும் பார்க்கிறார்களா அல்லது அதில் குறிப்பிட்ட மரங்களை மட்டும் பார்க்கிறார்களா என்பதில் வித்தியாசம் இருக்கலாம்.அதேபோல ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளும் இந்த திறமையில் வேறுபடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் திரைகளில் தோன்றும் சிறு விவரங்களில் அதிக கவனம் செலுத்துவதை போல, முழு திரையிலும் காணப்படும் பெரிய விவரப்படங்களில் அதிக கவனத்தை செலுத்துவதில்லை என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. கம்ப்யூட்டர்ஸ் இன் ஹ்யூமன் பிஹேவியர் (journal Computers in Human Behavior) என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உலகளாவிய படத்தில் கவனம் செலுத்துவது தொடர்பில்லாத இடங்களின் தொகுப்பாக அல்லாமல், உலகை அர்த்தமுள்ள ஒத்திசைவான வடிவங்களில் உணர உதவுகிறது. அதில் உள்ள விவரங்களுக்கு மட்டுமே ஒருவர் கவனம் செலுத்த நினைத்தாலும் உலகளாவிய வடிவத்தை நாம் தானாகவே செயலகலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய மிகவும் அரிய வகை 6 விலங்குகள்!

ஆய்வின் நோக்கத்திற்காக, மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் சில குழந்தைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். அவர்களை குறுகிய நேரத்திற்கு டேப்லெட்டில் விளையாட வைத்துள்ளனர். இந்த சிறிய கேம்களில் குழந்தைகள் டீடெய்ல்ட்-போகஸ் செய்கிறார்களா என்பதை ஆராய்ந்தனர். ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த பிறகு, பலூன்-ஷூட்டிங் வீடியோ கேம் விளையாடும் போது அதன் தொடர்ச்சியான பணியில் டீடெய்ல்ட்-போகஸ் செலுத்தும் கவன பாணியைத் தூண்டுவதற்கு வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.இதற்கு மாறாக, டிஜிட்டல் அல்லாத விளையாட்டுடன் விளையாடிய குழந்தைகள் வழக்கமான உலகளாவிய கவனத்தைக் காட்டியதாக கூறியுள்ளனர். இதிலிருந்து குழந்தைகள் அந்த வயதில் பார்க்கும் விஷயங்கள் மற்றும் அனுபவங்கள் போன்றவற்றை அனுபவிப்பது மிகவும் முக்கியமானது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் காண்பித்தன. ஏனெனில் இந்த வயதில் மூளை மிகவும் பிளாஸ்டிக் தன்மை கொண்டது. எனவே, இத்தகைய பாரிய ஆரம்ப வெளிப்பாடு குறிப்பிடத்தக்க நீண்டகால விளைவை அவர்களில் ஏற்படுத்தக்கூடும். மொபைல் உபயோகிக்கும் குழந்தைகளில் உள்ள வித்தியாசமான கவன பாணி மோசமாக இல்லை என்றாலும் நிச்சயமாக வேறுபட்டது. அதனை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. இதனால் அவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படலாம். எனவே இந்த குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த சாதனைகளை வழங்குவதற்கான புதிய வழி தேவைப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொபைல் பயன்பாடு பகுப்பாய்வு சிந்தனையை அதிகரிக்கக்கூடும்:

ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியபடி, விவரங்களுக்கு கவனம் செலுத்துபவர்கள் பகுப்பாய்வு சிந்தனையில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் இவர்கள் குறைவான படைப்பாற்றல் மற்றும் பலவீனமான சமூக திறன்களைக் கொண்டவர்களாக இருப்பர். எனவே, இந்த மொபைல் சாதனத்தை பயன்படுத்தும் ட்ரெண்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் புதிய தலைமுறை குழந்தைகளிடையே அதிக விஞ்ஞான சிந்தனையாளர்களும், குறைந்த கலை அல்லது சமூகவாதிகளும் இருப்பார்கள். இது நாம் வாழும் உலகத்தை மாற்றிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

 
Published by:Sivaranjani E
First published: