Food series : ஓடிடியில் குழந்தைகளுக்கான புதிய உணவு சீரிஸை தொடங்கும் மிச்சல் ஒபாமா...

Food series  : ஓடிடியில் குழந்தைகளுக்கான புதிய உணவு சீரிஸை தொடங்கும் மிச்சல் ஒபாமா...

மிச்சல் ஒபாமா

இந்நிகழ்ச்சி முற்றிலும் உணவைப் பற்றியது: உணவைக் கண்டுபிடிப்பது, சமைப்பது, அதை சாப்பிடுவது என பலவற்றை உள்ளடக்கியது.

  • Share this:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவை போலவே பலரால் விரும்பக்கூடிய ஒரு நபர் என்றால் அது ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா தான். கடின உழைப்பு, சமூகத்தை பற்றிய பொது நலம், நெறி சார்ந்த அனுகுமுறை, அமெரிக்காவை பற்றிய தொலைநோக்கு என மிச்சல் ஒபாமா அவ்வப்போது பல விஷயங்களை துணிச்சலுடனும் பலருக்கும் பயன் தரும் வகையிலும் பேசி வருபவர். மிச்சல் ஒபாமா ஒரு நல்ல பேச்சாளர் மட்டுமின்றி, நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவரும் கூட.

பன்முக திறன்களை கொண்டுள்ள ஆளுமைமிக்கவர் என்றால் அதில் மிச்சல் ஒபாமாவிற்கும் முக்கிய இடம் உள்ளது. ஆசிரியப்பணி, தோட்டக்கலை, பேச்சாளர், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பு, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை இவர் செய்து பலரையும் அசத்தியுள்ளார். அந்தவகையில் மாணவர்களை பற்றி பல விஷயங்களை இவர் பேசியிருந்தாலும் இப்போது குழந்தைகளுக்கான ஒரு உணவு நிகழ்ச்சியை தொடங்கப் போவதாக இண்டர்நெட்டில் அறிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி மிச்சல் இந்த நிகழ்ச்சியை வாஃபிள்ஸ் மற்றும் மோச்சி என்ற இரண்டு பொம்மைகளுடன் தொகுத்துவழங்கவுள்ளார். இன்ஸ்டாகிராமில் மிச்சல் தனது "இரண்டு புதிய நண்பர்களுடன்" இதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுகையில், “இந்நிகழ்ச்சி முற்றிலும் உணவைப் பற்றியது: உணவைக் கண்டுபிடிப்பது, சமைப்பது, அதை சாப்பிடுவது என பலவற்றை உள்ளடக்கியது. புதிய உணவுப் பொருட்களை ஆராய்வதற்கும் புதிய சமையல் குறிப்புகளை முயற்சிப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள அதிசயங்களுடன் இவை இரண்டும் நம்மை அழைத்துச் செல்லும்.” என மிச்சல் கூறினார்.



 




View this post on Instagram





 

A post shared by Michelle Obama (@michelleobama)






மேலும் மிச்சல், "குழந்தைகள் இதை விரும்புவார்கள், அதோடு கூட பெரியவர்களும் இதை கண்டிப்பாக ரசிப்பார்கள் ஏனெனில் நான் சில சமையல் குறிப்புகளையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தரப்போகிறேன்" என்றார். அமெரிக்காவின் அதிபராக இருந்தவரின் மனைவி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது உண்மையில் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

Slim body : சிலர் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் குண்டாக மாட்டார்கள்: ஏன் தெரியுமா..?

மேலும் இந்நிகழ்ச்சியைப் பற்றி மிச்சல் கூறுகையில், "குழந்தைகளின் ஆரோக்கியத்தை சப்போர்ட் செய்வது தான் என் தலையாய கடமை, இது போன்றதொரு இன்ட்ரெஸ்ட் எனக்கு வர காரணமாய் எது இருக்கலாம் என்று நான் யோசித்த போது இதே மாதிரியான ப்ரோக்ராம் அல்லது டிப்ஸ்கள் என் சொந்த மகள்கள் குழந்தைகளாக இருந்தபோது இருந்திருக்கலாம். அதனால்தான் நான் இது போன்றதொரு நிகழ்ச்சியை இப்பொழுது நடத்த திட்டமிட்டுள்ளேன் என்றார்.

கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்டி வைத்த நிலையில் அமெரிக்காவை தலைகீழாக புரட்டிப் போட்டது. இதுபோன்ற நேரத்தில் மக்கள் சாப்பிடுவதற்கு வெளியில் வராமல் தங்கள் வீட்டிலேயே உணவுகளை சமைத்து சாப்பிட மிச்சல் ஒபாமாவின் இந்த புரோகிராம் பலருக்கும் பலனளிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வாஃபிள்ஸ் + மோச்சி புரோகிராம் மார்ச் 16 அன்று நெட்ஃபிக்ஸ்-ல் வெளியாகவுள்ளது.

 

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: