ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தை பிறப்புக்கு பின் பெண்களை போலவே ஆண்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது - ஆய்வில் தகவல்

குழந்தை பிறப்புக்கு பின் பெண்களை போலவே ஆண்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது - ஆய்வில் தகவல்

மன அழுத்தம்

மன அழுத்தம்

கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் மட்டுமே மன அழுத்தத்தை எதிர்கொள்வார்கள் என்று நாம் அறிந்திருப்போம். ஆனால், இந்த புதிய ஆராய்ச்சியானது ஆண்களும் தங்கள் குழந்தையின் பிறப்பைச் சுற்றியுள்ள காலகட்டத்தில் கடுமையான மனநிலை மாற்றங்களை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இன்றைய வாழ்க்கை சூழலில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. வேலை பளு, குடும்ப சிக்கல்கள், குழந்தை, சமூகம் என பல வித காரணிகளால் மன அழுத்தம் ஒரு பெரிய நோயாகவே மாறி வருகிறது. இதில் பாலின பாகுபாடு இல்லாமல் எல்லா தரப்பினருக்கும் பொதுவான ஒன்றாகவும் உள்ளது. பெண்கள் எந்த அளவிற்கு மன அழுத்தத்தை சந்தித்து, அதே போல ஆண்களும் மன அழுத்தத்தை சந்தித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எந்த அளவிற்கு மன அழுத்தம் இருக்குமோ, ஆண்களுக்கு இப்படியொரு பிரச்சனை உள்ளது என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் மட்டுமே மன அழுத்தத்தை எதிர்கொள்வார்கள் என்று நாம் அறிந்திருப்போம். ஆனால், இந்த புதிய ஆராய்ச்சியானது ஆண்களும் தங்கள் குழந்தையின் பிறப்பைச் சுற்றியுள்ள காலகட்டத்தில் கடுமையான மனநிலை மாற்றங்களை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களின் நிலை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்றும் இதில் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரெடிட் தளத்தின் பதிவுகளை குறிப்பிட்டு, தங்கள் குழந்தை பிறக்கும் போது ஆண்கள் போஸ்ட் செய்யும் பதிவுகளின் நடத்தைகள் மனச்சோர்வுக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஐந்து அப்பாக்களில் ஒருவர் பெரினாட்டல் காலத்தில், அவர்களின் குழந்தை பிறப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள நேரத்தில் கவலையை அனுபவிக்கின்றனர். பத்தில் ஒருவர் மன அழுத்தத்தையும் அனுபவிக்கிறார்கள் என்று இதில் கண்டறிந்து உள்ளனர்.

இருப்பினும், பெரினாட்டல் காலத்தில் தந்தையின் மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. எனவே, இது ஒரு ஆரோக்கியம் சார்ந்த பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது என்று டாக்டர் சாம் டீக் கூறியுள்ளார். இவர் சமூக மற்றும் ஆரம்பகால உணர்ச்சி வளர்ச்சிக்கான டீக்கின் மையத்தில் சமீபத்தில் ஒரு முதுகலை ஆராய்ச்சி ஊழியராக பணியில் இருந்துளளர். மேலும் இந்த ஆய்வு குறித்து சிலவற்றை விவரித்தனர். இது பற்றிய ஆராய்ச்சிகள் குறைவாகவே உள்ளது என்றும், அப்பாக்களாக மாறும் ஆண்களின் வேலை மற்றும் புதிய குடும்ப கடமைகளுக்கு இடையில் தனக்கான நேரத்தை தேட போராடுவதாகவும் கூறுகின்றனர்.

குழந்தையின்மை குறித்து மருத்துவரிடம் பேச ஆண்கள் தயங்குவதற்கு என்ன காரணம்..?

அப்பாக்கள் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் எந்த மாதிரியான ஆதரவை விரும்புகிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள, ரெடிட்டின் தந்தைமை மன்றங்களான r/Daddit மற்றும் r/PreDaddit இல் ஆயிரக்கணக்கான பதிவுகளை டீக் ஆய்வு செய்தார். இதில் பெரும்பாலான பயனர்கள் கர்ப்ப காலத்தில் ஆண்களுக்கான போராட்டங்கள், பட்ஜெட் மற்றும் தூக்கம் சார்ந்த பாதிப்புகள் போன்றவற்றை பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சமூக ஈடுபாட்டின் மீதான தாக்கம் மனச்சோர்வின் முக்கிய அறிகுறியாக உள்ளது என்றும் இந்த ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும், குடும்பச் சூழலில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது சமூகப் பிரச்சனைகள் போன்ற பொதுவான சவால்களைப் பற்றிய பதிவுகளுக்கு ரெடிட் தளத்தின் பயனர்கள் விரைவாகப் பதிலளிப்பதாகவும், மனநலப் பிரச்சினைகள் போன்ற தனிப்பட்ட பிரச்சனைகளை பகிரும்போது அதற்கு குறைவாகவே பதிலளிப்பதாகவும் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் இறுதியில் குழந்தை பிறப்புக்கு ஆண்களுக்கும் மன அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் உள்ளது என உறுதிப்படுத்தினார்.

First published:

Tags: Men Health, Post Pregnancy Depression