ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளிடையே வேகமாக பரவும் தட்டம்மை : கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

குழந்தைகளிடையே வேகமாக பரவும் தட்டம்மை : கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

தட்டம்மை

தட்டம்மை

Mayo Clinic கூறியுள்ளபடி ஒருமுறை தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் அந்த தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி வலுவாக வைத்திருக்கும். எனவே இரண்டாம் முறை இதே தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் தட்டம்மை பரவி வருகிறது. ரூபெல்லா என்றும் அழைக்கப்படும் தட்டம்மை வைரஸால் ஏற்படும் தொற்றாகும். ஒருவரிடமிருந்து பிறருக்கு எளிதில் பரவ கூடிய இது சிறு குழந்தைகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சிறு குழந்தைகளின் சுவாச மண்டலத்தை எளிதில் பாதித்து பின் உடல் முழுவதும் பரவும் இந்த தொற்று பாதிப்பு தற்போது மும்பை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது மற்றும் சில உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளது. தட்டம்மை பாதிப்பால் சமீபத்தில் அங்கு ஒரு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இந்த நோய் தடுக்க கூடிய ஒன்று என்பதும், முறையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் இந்த தொற்றை தடுக்க கணிசமாக உதவும் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள்:

நோயாளியின் தும்மல் மற்றும் இரும்பல் மூலம் காற்றில் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவுகிறது. குழந்தைகளுக்கு தட்டம்மை எளிதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதால் குறிப்பிட்ட ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். பொதுவாக தட்டம்மை நோயின் ஆரம்ப அறிகுறிகள் நோய்வாய்ப்பட்ட பிறகு, 7-14 நாட்களுக்குள் தோன்றும். மிகவும் பொதுவான அறிகுறிகளில் மூக்கு ஒழுகுவது (ரன்னி நோஸ்), வறட்டு இருமல், பிங்க் ஐ எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் (அரிப்புடன் கண் சிவத்தல்), காய்ச்சல் உள்ளிட்டவை அடங்கும். தட்டம்மை நோயுடன் தொடர்புடைய உடல் முழுவதும் தோன்ற கூடிய ரேஷஸ் முதல் அறிகுறிகள் வெளிப்பட்டதில் இருந்து 3 - 5 நாட்களுக்கு பின் தோன்றும்.

தடுப்பூசி முக்கியம்:

தடுப்பூசிகள் என்பவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க கூடியவை. தொற்று பரவாது என்று பாதுகாப்பு உத்தரவாதத்தை எந்த தடுப்பூசிகளும் அளிப்பதில்லை. ஆனால் தொற்று பாதிப்பால் ஏற்படும் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு அபாயத்தை கணிசமாக தடுக்கிறது. தட்டம்மையை பொறுத்த வரை அபாயத்திலிருந்து பாதுகாக்க MMR (measles, mumps, rubella) மற்றும் MMRV (measles, mumps, rubella, varicella) தடுப்பூசிகள் உள்ளன. பொதுவாக MMR தடுப்பூசி 2 டோஸ்களில் குழந்தைகளுக்கு போடப்படுகிறது. முதல் டோஸ் 12 - 15 மாதங்களுக்குள் மற்றும் இரண்டாவது டோஸ் 4 - 5 வயது வரை போடப்படுகிறது. MMRV தடுப்பூசி 2 மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. எனினும் பொதுவாக முதல் டோஸ் 12 மாதங்கள் - 15 மாதங்களுக்குள் மற்றும் இரண்டாவது டோஸ் 4 முதல் 6 வயதில் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது.

Also Read : கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

தட்டம்மை நோயால் மீண்டும் தொற்று ஏற்படுமா?

Mayo Clinic கூறியுள்ளபடி ஒருமுறை தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் அந்த தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி வலுவாக வைத்திருக்கும். எனவே இரண்டாம் முறை இதே தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை.

குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்:

தட்டம்மை காற்றின் மூலம் மிக எளிதில் பரவ கூடிய தொற்றாகும். தட்டம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தும்மல், இருமல் அல்லது பேசும் போது மற்றும் அவர்களுக்கு அருகிலுள்ள ஒருவர் அவருடன் ஒரே காற்றை சுவாசிக்கும் போது இந்த தொற்று பரவக்கூடும். நோய்த் தொற்றுள்ள குழந்தை பிற குழந்தைகளோடு நெருங்கி விளையாடும் போது எளிதாக ஒரு குழந்தையின் உடலுக்குள் சென்றுவிடும். எனவே உங்கள் குழந்தையை கூட்டமிகுந்த இடங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதன் மூலம் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக பழகுவதை தவிர்க்க முடியும்.

சுகாதாரம் பேணுங்கள்:

தட்டம்மைக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொற்று பாதிக்காமல் பாதுகாக்கும். கோவிட்-19, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றே இதுவும் பரவ கூடிய தொற்று என்பதால் முகக்கவசம் அணிவது, கை சுகாதாரத்தை பராமரிப்பது, கூட்டங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் உங்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வைக்கும்.

டாக்டரிடம் எப்போது அழைத்து செல்வது?

தட்டம்மை அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறியாவிட்டால் குருட்டுத்தன்மை, மூளை வீக்கம், கடும் வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு, காது தொற்றுஉள்ளிட்ட மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்பட கூடும். இது தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தவிர தட்டம்மை பொதுவாக நுரையீரலில் நிமோனியா போன்ற தொற்றை ஏற்படுத்தி மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலியையும் ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைகளிடம் ஆரம்ப அறிகுறிகளை கண்டவுடனே தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது.

First published:

Tags: Kids Care, Measles Symptoms