Home /News /lifestyle /

கர்ப்ப காலத்தை சிறந்ததாக மாற்றும் வழிகள் இவைதான்.. முன்னுதாரணமான விஷயங்களை செய்துகாட்டிய கரீனா கபூர்..

கர்ப்ப காலத்தை சிறந்ததாக மாற்றும் வழிகள் இவைதான்.. முன்னுதாரணமான விஷயங்களை செய்துகாட்டிய கரீனா கபூர்..

கரீனா கபூர்

கரீனா கபூர்

இரண்டு கர்ப்ப காலங்களிலும் ஒரு டிரெண்ட் செட்டராக இருப்பது மட்டுமல்லாமல், அவரது ஆரோக்கியமான கர்ப்பகால சிறப்பாக இருக்க அவர் பின்பற்றிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் காரணமாக இருந்தது

சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி சைஃபும் கரீனாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் அலிகான் என்ற மகன் பிறந்தார். இந்த நிலையில், மீண்டும் கருத்தரித்த கரீனா கபூர் தான் நடித்து வந்த படங்களின் பணிகளை முடித்துவிட்டு, ஓய்வெடுக்கத் தொடங்கினார். அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்.20-ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு நேற்று அதிகாலை ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கரீனா கபூருடன் குழந்தை இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கர்ப்பகாலத்தில் கரீனாவின் லைப் ஸ்டைல் ரசிகர்கள் பலரையும் ஊக்குவித்தது. அப்படி அவரது கர்ப்பகால வாழ்க்கை முறையை பற்றி தெரிவித்து கொள்வோம்.சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவம்:

கர்ப்பகாலத்தில் கரீனா அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் யோகா போன்ற சிறந்த வாழ்க்கைமுறை விஷயங்களை கையில் எடுத்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு பெற்றோர் ரீதியான யோகாவின் நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்தார். அவரது இரண்டு கர்ப்ப காலங்களிலும் ஒரு டிரெண்ட் செட்டராக இருப்பது மட்டுமல்லாமல், அவரது ஆரோக்கியமான கர்ப்ப கால மாஜிக் அவர் பின்பற்றிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் தான் இருந்தது என்பதை தெளிவாக காண்பித்தார்.

கர்ப்பிணிகளின் இந்த 5 பழக்க வழக்கங்கள் கரு வளர்ச்சியை பாதிக்கும்..!

கரீனாவின் உணவுமுறை:

எந்தவொரு கர்ப்பிணிப் பெண்களிடமும் கேளுங்கள், அவர்கள் அனுபவிக்கும் வெவ்வேறு பசிகளின் ஒரு பெரிய பட்டியலையே தருவார்கள். இனிப்பு, புளிப்பு, காரம் என பல வித்தியாசமான சுவை கொண்ட உணவுகளை ருசிக்க ஆசைப்படுவார்கள். அதிலிருந்து தப்பிக்க வழி இல்லை. அப்படியானால் உங்கள் ஏக்கங்களை கட்டுக்குள் வைத்திருக்க ஒரே வழி? கரீனா போல் ஆரோக்கியமான பழக்கங்களில் ஈடுபடுங்கள்.

கரீனா தனது இரண்டாவது கர்ப்பத்தில் மாறுபட்ட பசிக்கு ஆளாகியிருப்பது அவரது சமூக ஊடக பதிவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்காக அவர் ஜங்க் உணவுகளை சாப்பிடவில்லை. எனவே நடிகையைப் போலவே, அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ஒரு சீரான உணவைப் பின்பற்றுவது தான். ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை உங்களால் முடிந்தவரை சாப்பிடுவது சிறந்தது.கர்ப்பகாலத்தில் வேலைக்கு பூட்டுப்போட வேண்டும் என்ற அவசியமில்லை:

கரீனா தனது கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதம் வரை தனது தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார். கரீனா தனது விருப்பங்களுடன் விதிமுறைகளை மீறுவதாக பலர் கருதுகையில், தான் செய்வது முற்றிலும் சாதாரணமானது என்று நடிகை கருதுகிறார். சமீபத்தில் ஒரு செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "கர்ப்பிணிப் பெண்களால் ஏன் வேலை செய்ய முடியாது. ஏன் அவ்வாறு சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

நான் எனது கர்ப்பம் காலம் முழுவதும் வேலை செய்தேன், பிரசவத்திற்குப் பிறகும் தொடர்ந்து செய்வேன். மேலும் கர்ப்பத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். இது தவிர கரீனா தனது முதல் குழந்தையையும் மிகுந்த அக்கறையுடன் பார்த்து கொண்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் மூலமாக, கர்ப்பிணிகளுக்கு பல விதத்தில் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Kareena kapoor, Pregnancy care, Pregnancy diet

அடுத்த செய்தி