Home /News /lifestyle /

வயிற்று வலியால் குழந்தைகள் அழுகையை நிறுத்தவில்லையா..? சரி செய்வதற்கான வீட்டு வைத்தியம்

வயிற்று வலியால் குழந்தைகள் அழுகையை நிறுத்தவில்லையா..? சரி செய்வதற்கான வீட்டு வைத்தியம்

வயிற்று வலி

வயிற்று வலி

காய்ச்சல் ஏற்பட்டாலும், வயிற்றுவலி ஏற்பட்டாலும் குழந்தைகளின் அம்மாக்கள் தான் அவர்களுக்கு டாக்டராகிவிடுவார்கள். இப்படி பார்த்து பார்த்து புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது பல பெற்றோர்களுக்கு பெரும் சவாலாகத் தான் இருக்கும்.

குழந்தைகளின் இரப்பைக்குடலில் அசௌகரியமான சூழல் ஏற்படும் போது தான் அதிகப்படியான வயிற்றுவலி அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே முதலில் குழந்தைகளின் உணவு முறையை நீங்கள் மாற்றுவதோடு சிறிது நேரம் எந்த உணவும் அவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

குழந்தைகள் என்பது ஒவ்வொரு வீட்டிலும் துள்ளிக்குதிக்கும் ஆனந்தம் என்றே சொல்லலாம். ஆனால் அவர்களை வளர்த்தெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆம் 5 வயது வரை தனது உடலுக்கு என்ன செய்கிறது? என்ன பிரச்சனை என அவர்களுக்கு சொல்லவே தெரியாது. காய்ச்சல் ஏற்பட்டாலும், வயிற்றுவலி ஏற்பட்டாலும் குழந்தைகளின் அம்மாக்கள் தான் அவர்களுக்கு டாக்டராகிவிடுவார்கள்.

இப்படி பார்த்து பார்த்து புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது பல பெற்றோர்களுக்கு பெரும் சவாலாகத் தான் இருக்கும். எனவே குழந்தைகளை நீங்கள் பராமரிக்கும் போது பல விஷயங்களை முதலில் கவனத்தில் கொள்வது அவசியமான ஒன்று.



குறிப்பாக குழந்தை அழுகிறது என்றால், பசியின் காரணம் தான் என்பதை மட்டும் நினைத்துவிடக்கூடாது. பசியைத் தவிர உடல் வலி, காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பல பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படக்கூடும். எனவே என்ன? என்பதை முதலில் நீங்கள் தெரிந்துக்கொள்வது அவசியம். பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் வயிற்று வலியினால் தான் அதிகளவில் குழந்தைகள் அழுவதைப் பார்த்திருப்போம்.

எனவே சின்ன சின்ன வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்திக் குணப்படுத்த ஒவ்வொரு அம்மாக்களும் முயல்வார்கள். ஆனால் சில சமயங்களில் குழந்தைகளின் அழுகைக்கானக் காரணங்களை நாம் கண்டறிய முடியாது. எனவே இந்நேரத்தில் வயிற்றுவலியினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள், அறிகுறிகள் என்ன? என்பது பற்றியும், இதற்கான எளிய வீட்டு முறை வைத்தியம் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா.? இந்த உணவுகள் அதற்கு உதவும்.!

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியின் அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை நீங்கள் எளிதில் கண்டறிந்துவிடலாம். உங்களது குழந்தைகளின் அழுகை வழக்கத்தை விட வித்தியாசமாகவும் அதிக சத்ததத்துடன் இருக்கக்கூடும். குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கும்க போது அவர்களது வாய் சிவந்து மற்றும் வயிறு இறுக்கத்துடன் காணப்படும்.

குழந்தைகள் மலம் கழிக்கமுடியாமல் வயிறு ஊத்தத்துடன் காணப்படும். வயிற்றுவலி அல்லது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் குழந்தைகள் சாப்பிடவோ அல்லது தண்ணீர் கூட குடிக்காது.



வயிற்றுவலிக்கான காரணங்கள்:

சில நேரங்களில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் குழந்தைகளுக்கு இரைப்பை குடலில் அசௌகரியமான சூழலை ஏற்படுத்துகிறது. எனவே தான் வயிற்றுவலியால் குழந்தைகள் அதிகமாக அழுகிறார்கள்.

மேலும் உணவுப்பொருள்களின் ஒவ்வாமை மற்றும் அதிகப்படியான சாப்பிட்டு உணவுகளை ஜீரணம் செய்ய முடியாமல் இருந்தாலும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

பொதுவெளியில் குழந்தைக்கு டயப்பர் மாற்ற சிரமப்படும் ஆண்களுக்கு நற்செய்தி... என்ன தெரியுமா?

குழந்தைகளில் வயிற்றுவலியை சரிசெய்வதற்கான வீட்டுமுறை வைத்தியம்:

உங்களது குழந்தைக்கு வயிற்றுவலி ஏற்பட்டால் முதலில் குழந்தைகளின் உணவை மாற்ற முயற்சிக்கவும்.

குழந்தைகளுக்கு சிறிது நேரம் பால் கொடுக்க வேண்டாம். பின்னர் வயிற்றில் உள்ள அனைத்து உணவுகளும் சரியாக ஜீரணமாகும் வரை நேரம் கொடுக்க வேண்டும்.

சிறிதளவு பால் பெருங்காயத்தை தாய்ப்பால் அல்லது சூடான நீரில் கலந்துக்கொடுக்கலாம்.

இவற்றில் நிச்சயம் குழந்தைகளுக்கான வயிற்றுவலி பிரச்சனைகள் சரியாகிவிடும். இருந்த போதும் அதனை தொடர்ந்து வயிற்றுவலி அதிகமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, Stomach Pain

அடுத்த செய்தி