ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பாலியல் தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள் உளவியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள்... ஷாக் ரிப்போர்ட்

பாலியல் தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள் உளவியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள்... ஷாக் ரிப்போர்ட்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மோசமான குழந்தை பருவத்தை அனுபவித்த நபர்களுக்கு மன நோய்கள், மனநிலைக் கோளாறுகள், மனச்சோர்வு, PTSD, ஸ்கிசோஃப்ரினியா, மன பதற்றம் உள்ளிட்ட 13 வகையான மனநல பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

4 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் அல்லது சிறுமிகள் கூட பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. தனக்கு நடக்கும் கொடுமை என்னவென்ற அறியாத வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள், பெரியவர்கள் ஆன பிறகும் உடல் மற்றும் மன ரீதியிலான பிரச்சனைகளுக்கு ஆளாவதாக அதிர்ச்சிக்கரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டிஆர்ஐ மற்றும் நெவாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவின் ‘ஹெல்தி நெவாடா’ என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தியுள்ளனர். ரெனா பகுதியில் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தரவுகளின் முடிவுகள், அக்டோபர் 6 ஆம் தேதி ஃபிரான்டியர்ஸ் இன் சைக்கியாட்ரி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான அமெரிக்கர்கள், குறைந்த பட்சம் 67 சதவீதம் பேர் குழந்தை பருவத்தில் குறைந்தது ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வையாவது சந்தித்ததாக தெரிவிக்கின்றனர்.ஆய்வில் பங்கேற்ற நபர்கள்  18 வயதுக்கு முன்பு அவர்கள் வசித்த சமூக சூழ்நிலை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதன் மூலம் உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாக காயப்படுதல், புறக்கணிப்பு, துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம், போதைப் பொருளுக்கு அடிமையான பெற்றோரின் துன்புறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றை அனுபவிக்கும் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு என்ன மாதிரியான உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.22

Read More : குழந்தைகளின் தலையில் அடிபட்டால் நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன..? உடனே செய்ய வேண்டியவை..!

 டிஆர்ஐயில் உள்ள மரபணு மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளரும் ஆய்வின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவருமான ராபர்ட் ரீட் கூறுகையில், ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 66 சதவீதம் பேர் ஒரு வகையான அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கால் பகுதியினர், அதாவது 24 சதவீதம் பேர் நான்கு முறைக்கும் மேல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க அமெரிக்க மற்றும் லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள், ஐரோப்பிய வம்சாவளியைக் காட்டிலும் அதிகமான அதிர்ச்சிகரமான அனுபவங்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறைந்த வருவாயைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை பருவத்தைக் கொண்டவர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

மோசமான குழந்தை பருவத்தை அனுபவித்த நபர்களுக்கு மன நோய்கள், மனநிலைக் கோளாறுகள், மனச்சோர்வு, PTSD, ஸ்கிசோஃப்ரினியா, மன பதற்றம் உள்ளிட்ட 13 வகையான மனநல பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில் பாலியல் அல்லது பிற வகையான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நபர்களுக்கு, பேரதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் எனப்படும் post-traumatic stress disorder -க்கான வாய்ப்பு 47 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. PTSD-யால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வு மூலம் குழந்தை பருவத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் போன்ற துஷ்பிரயோகங்கள் எவ்வாறு எதிர்காலத்தை பாதிக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ‘ஹெல்தி நெவாடா’ திட்டம் மூலமாக ஆரோக்கியமான குழந்தை பருவ சமூகச் சூழல்கள் மற்றும் தனிநபரின் வாழ்நாள் முழுவதும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Child Abuse, Parenting