ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டில் அலுவலகப் பணி.. தொல்லை செய்யும் பிள்ளைகளை இந்த 'ஆக்டிவிட்டீஸ்' செய்யச் சொல்லுங்க..!

வீட்டில் அலுவலகப் பணி.. தொல்லை செய்யும் பிள்ளைகளை இந்த 'ஆக்டிவிட்டீஸ்' செய்யச் சொல்லுங்க..!

ஆக்டிவிட்டீஸ்

ஆக்டிவிட்டீஸ்

உங்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வீட்டில் அலுவலகப் பணி செய்யும் பெற்றோர் குழந்தைகளை சமாளிக்கத் தெரியாமல் அவஸ்தை படுகிறீர்களா.. கவலையே வேண்டாம் இந்த ஆக்டிவிட்டீஸ் கொடுங்கள். உங்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

  ஓவியம் : உங்கள் குழந்தைகளிடம் ஓவியம் வரையும் பயிற்சி கொடுங்கள். சிறப்பாக செய்தால் பாராட்டி பரிசு கொடுங்கள். இது அவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.

  வாசிப்பு : மந்திரக் கதைகள், காமிக் புத்தகங்களை குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள்.

  ஆடியோ புத்தகம் : தற்போது ஆடியோவாக புத்தகத்தை அப்படியே வாசித்துக்காட்டும் ஆப்ஸ் வந்துவிட்டன. அவற்றை டவுன்லோட் செய்து கேட்க வையுங்கள்.

  கற்றல் விளையாட்டு : கணினியில் பயிற்சி செய்தல், கணக்கு கூட்டல் கழித்தல் விளையாட்டுகளை சொல்லிக்கொடுப்பது திறமையை அதிகரிக்கும்.

  தூங்க வைத்தல் : இதைவிட சிறப்பான வேலை இருக்க முடியாது. தூங்க வைத்துவிட்டால் அந்த நேரத்தில் டென்சன் இல்லாமல் வேலை செய்யலாம்.

  பொம்மைகள் : குழந்தைக்கு தேவையான, பிடித்த பொம்மைகளை வாங்கி போட்டால் உங்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

  கற்பனை : கதை எழுதுதல், பில்டிங் பிளாக்ஸ் என அவர்களின் கற்பனைத் திறன், கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்யும்.

  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Lockdown