கர்பகாலத்தில் ஆரோக்கியமாக இருக்க பல விஷயங்கள் வந்துவிட்டன. மாத்திரைகள் தொடங்கி உடற்பயிற்சி வரை ஆரோக்கிய வாழ்க்கை முறை மாற்றங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் கர்பகாலத்தில் பலரும் தற்போது நாடுவது யோகா. காரணம், யோகா செய்வதால் மன நலம் ஆரோக்கியமாக இருக்கும். அதேசமயம் குழந்தையும் சிசேரியன் இன்றி நல்ல முறையில் பெற்றெடுக்கலாம். அப்படி இரண்டாவது கர்பமாக இருக்கும் கரீனா கபூர் யோகா செய்வதன் நன்மைகள் என்ன.. என்னென்ன உணவு முறைகளை பின்பற்றுகிறார் என்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன பார்க்கலாம்.
கரீனா முதல் குழந்தையையும் ஆரோக்கியமான முறையில் பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தற்போது 4 வயதாகிறது. தற்போது இரண்டாவது குழந்தைக்கான முதல் ட்ரைமஸ்டரில் இருக்கிறார். தற்போதிலிருந்தே யோகா, டயட் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் “A little bit of yoga, a little bit of calm,” என்னும் கேப்ஷனுடன் சில யோகா போஸ்களை ஷேர் செய்திருந்தார்.
இதற்காக மட்டுமன்றி பொதுவாகவே கரீனா கபூர் யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். அவர் இப்படி கட்டுக்கோப்பான உடலைக் கொண்டிருக்க டயட் எதுவும் பின்பற்றுவதில்லை. 2018 ஆண்டு ஒரு நேர்காணலிலும் எனக்கு உணவு மிகவும் பிடிக்கும். எனவே டயட்டெல்லாம் பின்பற்றுவது கிடையாது என்று கூறியுள்ளார். தற்போது கரீனாவிற்கு பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுடா திவேகர்தான் டயட் பிளான்களை அளிக்கிறார்.
தற்போது கரீனாவிற்கு கார்ப்ஸ், ஃபேட், புரோட்டீன் கொண்ட சமநிலையான ஊட்டச்சத்து உணவுகளையே உட்கொண்டு வருகிறார். ருஜுடா ஒரு பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் கரீனா தற்போது காலை எழுந்ததும் ஊற வைத்த பாதாம் அல்லது வாழைப்பழம் உட்கொள்வார். அது உடனடி ஆற்றலை அளிக்கும். அடுத்ததாக அரிசி அல்லது கோதுமை உணவுகள் இருக்கும். மதியம் மற்றும் இரவு உணவுக்கு அரிசி உணவு, தயிர் , பப்பட் , ரொட்டி , காய்கறி, கீரை, பனீர் போன்ற உணவுகள் இருக்கும்.
இப்படி சம்நிலையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளுடன் யோகா பயிற்சி, உடலை எப்போதும் ஆக்டிவாக வைத்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.