ஆறு வயதைக் கடக்கும் உங்கள் பிள்ளை பாலியல் சார்ந்த கேள்விகளை கேட்கிறார்களா..? இந்த வயதில் பாலியல் கல்வி சரியா..?

மாதிரி படம்

பாலியல் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வமே அவ்வாறு கேள்வி கேட்க வைக்கிறது. அதோட உடலில் நடக்கும் மாற்றங்கள் , சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றியும் கேள்வி கேட்பார்கள்.

  • Share this:
கேள்வி : என் 6 வயது மகனும் எங்களோடு அமர்ந்து டிவி பார்க்கிறான். திரைப்படங்களில் நாயகன் நாயகிக்கு முத்தம் கொடுத்ததும் கர்பமாகிறார். எப்படி இது சாத்தியமாகிறது என்று கேள்வி கேட்கிறான். அதோடு மட்டுமன்றி நீங்கள் எனக்கு முத்தம் கொடுப்பதால் நானும் கர்ப்பமடைந்துவிடுவேனா என்று கேள்வி கேட்கிறான். இந்த கேள்வியை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை..என்னசெய்வது..?

பதில் : ஒன்றும் செய்ய வேண்டாம்..எப்படி குழந்தைப் பிறக்கிறது என்பதை மகனுக்குப் புரியும் விதத்தில் சொல்லுங்கள். தற்போது அதைப் பற்றி அவனிடம் பேசுவதில் தவறில்லை. பாதுகாப்பானதே..இதைப் பற்றி பேச இது சரியான வயதுதான். எனவே இதை மறைத்து வைத்து அடிக்கடி பயப்படத் தேவையில்லை. பொதுவாகவே இந்திய பெற்றோர்களிடம் பிள்ளைகள் இந்த கேள்வியைக் கேட்டாலே மனதிற்குள் பேய் படம் பார்த்து பயந்ததுபோல் பதட்டப்படுவார்கள். அந்த மாதிரியான பதட்ட நிலையில்தான் தற்போது நீங்களும் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பயம் தேவையில்லை. உங்கள் மகனிடம் செக்ஸ் குறித்து பேசுவதை அசிங்கமாக நினைக்காதீர்கள். ஆனால் யார் தான் அப்படி நினைக்காமல் இருக்கிறார்கள்...ஆனால் நமக்கும் சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்பது அறுவருக்கத்தக்க விஷயமாகவும் தவறான விஷயமாகவும்தான் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்கள் பத்து வயது மகனுக்கு அதை தவறான விஷயமாக கற்பிக்காமல் நல்ல விதத்தில் எடுத்து புரிய வைப்பது உங்கள் கடமை. அவர்களைப் பொருத்தவரை பாலியல் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வமே அவ்வாறு கேள்வி கேட்க வைக்கிறது. அதோடு அவர்களின் உடலில் நடக்கும் மாற்றங்களைக் குறித்து தெரிந்துகொள்ளவும், தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி புரிந்துகொள்ளவும் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள்.

உங்கள் மகனுக்கு பாலியல் குறித்த கற்பித்தலை அளிக்க உங்களுக்கு இது சரியான வாய்ப்பு. டிவி, ஆன்லைன் போன்ற தளங்களில் காட்டப்படுவதுபோல் குழந்தைப் பெற்றுக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை சொல்லிக்கொடுங்கள். அதேபோல் அதில் காட்டுவது எதுவும் உண்மை அல்ல என்பதையும் சொல்லிக்கொடுங்கள். இந்த சூழ்நிலையில் முத்தம் கொடுப்பதால் குழந்தை பிறந்துவிடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.முத்தத்திற்குப் பின் சில காட்சிகளை அவர்கள் மறைக்கிறார்கள் அல்லது கட் செய்துவிடுவார்கள் என சொல்லுங்கள். அதேபோல் டிவியில் நாம் பார்க்கும் அனைத்தும் உண்மை கிடையாது. அதேசமயம் பொய்யும் கிடையாது என்பதையும் சொல்லுங்கள். ஒரு சிறந்த உதாரணமாக படத்திலோ அல்லது நேரிலோ ஒருவர் பாத்ரூமிற்குள் செல்வதை மட்டும்தான் பார்க்கமுடியும். ஆனால் அவர்கள் சிறுநீர் கழிப்பதையோ அல்லது மலம் கழிப்பதையோ காட்டமாட்டார்கள். அதுபோலத்தான் மற்றவர்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் வெளிப்படையாகக் காட்டிவிட முடியாது. அதேசமயம் அவர்கள் நிஜ ஜோடிகள் இல்லை என்பதால் அவ்வாறு செய்யவும் மாட்டார்கள். அது ரியாலிடி இல்லை என்று கூறுங்கள்.

உடல் எந்த நிறத்தைக் கொண்டிருந்தாலும் அந்தரங்கப் பகுதிகள் மட்டும் கருமையாக இருக்க என்ன காரணம்..?

அடுத்ததாக உங்கள் மகன் கருத்தரித்தல் பற்றி கேட்ட கேள்விக்கு வருவோம்... பெண்களுக்கு மட்டும்தான் கருப்பை மற்றும் கருத்தரித்தல் விஷயத்தை செய்ய முடியும் என உடற்கூறியல் ( anatomy ) கல்வியிலிருந்து தொடங்குங்கள். அவர்கள்தான் முழுமையான இனப்பெருக்கத்தை செய்ய முடியும். அதன் பிறகே குழந்தையை பெற்றெடுத்து மனிதனாக வளர்க்கிறார்கள் என கூறுங்கள். குழந்தையை உருவாக்க ஆண் , பெண் இருவரும் அவசியம் அப்போதுதான் உன்னைப்போன்ற அழகான அம்மாவின் செல்ல மகனை கொண்டு வர முடியும் என கூறுங்கள்.

 

 

 
Published by:Sivaranjani E
First published: