நவீன கால வாழ்க்கை முறையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் முறையாக கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளின் உடல் வளர்ச்சியை துரிதப்படுத்த மற்றும் மூளை வளர்ச்சியை அதிகரிக்க மார்க்கெட்டில் விற்கப்படும் பல்வேறு உணவுப்பொருட்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ்களை பெற்றோர்கள் வாங்கி தருகின்றனர்.
உலகளாவிய வழிகாட்டுதல்களின் படி, ரத்த சோகையைத் தடுக்க உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. எனவே குழந்தைகளில் காணப்படும் ரத்த சோகை பிரச்சனையை போக்க இரும்பு சத்து நிறைந்த சப்ளிமெண்ட்ஸ்களை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி தருகின்றனர். மேலும் அவை குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று நம்புகின்றனர்.
இதனிடையே பங்களாதேஷின் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இரும்புச் சத்தானது சிறு குழந்தைகளிடம் காணப்படும் ரத்த சோகை பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் சிறு குழந்தைகளின் உடல் வளர்ச்சி, அறிவாற்றல் செயல்பாடு, நடத்தை அல்லது வளர்ச்சி உள்ளிட்டவற்றில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பது கண்டறியப்பட்டு உள்ளதாக டைனிக் ஜாக்ரான் (Dainik Jagran) இதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஆய்வுக்கு ஆஸ்திரேலியாவின் வால்டர் மற்றும் எலிசா ஹால் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் ரிசர்ச் (WEHI), இணை பேராசிரியர் சான்ட்-ரெய்ன் பாஸ்ரிச்சா, டொஹெர்டி இன்ஸ்டிடியூட்டின் சர்வதேச வயிற்றுப்போக்கு நோய் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் ஜெனா ஹமதானி மற்றும் டோஹெர்டி இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் பெவர்லி-ஆன் பிக்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆய்வு கடந்த செப்டம்பர் 9 அன்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் ( New England Journal of Medicine ) வெளியிடப்பட்டது. இந்த ஆய்வானது சிறு குழந்தைகளின் வளர்ச்சியில் இரும்பு சத்துக்களின் பங்களிப்பு மற்றும் விளைவுகள் பற்றி மதிப்பீடு செய்தது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்களாதேஷின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சுமார் 3,300 சிறு குழந்தைகளுக்கு (8 மாத குழந்தைகளுக்கு) இருப்பு சத்து சொட்டு மருந்தையும்,பெற்றோர்கள் வீட்டிலேயே அன்றாடம் கொடுக்கும் வகையில் இரும்பு சத்து அடங்கிய உணவு வலுவூட்டல் பாக்கெட்டுகளையும் வழங்கினர்.
உங்கள் குழந்தைக்கு வீட்டிலேயே இருப்பதால் போர் அடிக்குதா ? பிசியாக வைத்துக்கொள்ள டிப்ஸ் இதோ..
சில வாரங்களுக்கு பிறகு 3,300 குழந்தைகளின் அறிவாற்றல், நரம்பியல் வளர்ச்சி மற்றும் அவர்களின் உடல் வளர்ச்சி (உயரம் மற்றும் எடை) ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் சொட்டு மருந்து, சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை குழந்தைகளிடம் காணப்பட்ட ரத்த சோகையை மேம்படுத்திய அதே நேரத்தில், அவர்களின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் எவ்வித முன்னேற்றத்தையும், சாதகமான விளைவுகளையும் காட்டவில்லை என்பதை கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின் மூலம் இரும்புச் சத்துக்கள் குழந்தைகளில் காணப்படும் ரத்த சோகையை மேம்படுத்தினாலும் வளர்ச்சி, அறிவாற்றல் செயல்பாடு, நடத்தை அல்லது வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தங்களது இந்த ஆராய்ச்சி முடிவு உலக ஊட்டச்சத்து கொள்கையில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று WEHI இணை பேராசிரியர் சாண்ட்-ரெய்ன் பாஸ்ரிச்சா கூறி இருக்கிறார்.
இந்த ஆய்வின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தி உள்ள டாக்டர் ஜெனா ஹமதானி, இந்த ஆய்வு சில குழந்தைகளில் பாதகமான பக்க விளைவுகளை வெளிப்படுத்தியதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒருசில குழந்தைகளுக்கு இரும்பு சத்துக்கள் நன்மையை விட அதிக தீங்கு விளைவிப்பது கண்டறியப்பட்டது. ரத்த சோகை இல்லாத சில குழந்தைகள் இரும்பு சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொண்டதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட சில கோளாறுகளை சந்திக்க நேரிட்டது. இது ரத்த சோகையற்ற குழந்தைகளில் இரும்பு சப்ளிமெண்ட்ஸ் நன்மையை விட அதிக தீங்கு விளைவிப்பதை சுட்டிக்காட்டியிருக்கலாம் என்றார் டாக்டர் ஜெனா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Iron Rich Foods, Kids Care, Kids diet, Kids Health