Home /News /lifestyle /

குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள் என்னென்ன வசதிகளை செய்துகொடுக்கலாம்..?

குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள் என்னென்ன வசதிகளை செய்துகொடுக்கலாம்..?

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்றல் ஒரு பாதுகாப்பான வழி என்றாலும், வீட்டிலிருந்து படிக்கும் கலாச்சாரம் என்பது மிக பொதுவான அம்சங்களில் ஒன்றானதாக இல்லை.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
COVID-19 மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல நிறுவனங்களுக்கும் இயல்பு நிலையை கடினமாக்கியது. சில்லறை விற்பனை நிலையங்களாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியான அல்லது கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தொற்றுநோய் பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நேரத்தில் வீட்டிலிருந்தே படிப்பு என்ற நடைமுறைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். ஒரு வருடத்திற்கும் மேலாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் முன் வீட்டில் உட்கார்ந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், இன்னும் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் படிக்க வலியுறுத்தி வருகிறது.

வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்றல் ஒரு பாதுகாப்பான வழி என்றாலும், வீட்டிலிருந்து படிக்கும் கலாச்சாரம் என்பது மிக பொதுவான அம்சங்களில் ஒன்றானதாக இல்லை. ஆன்லைன் கல்வி, மிகவும் அணுகக்கூடியதாக இருந்தாலும், பள்ளிக்கூடத்தில் கிடைக்கக்கூடிய அனுபவத்தைப் பிரதிபலிக்க முடியாது.

அதிலும் குழந்தைகள் முழு ஈடுபாட்டுடன் ஆன்லைன் மூலம் கல்வி கற்கிறார்களா? என்பதும் கேள்விக்குறிதான். இருப்பினும் கொரோனா வைரஸ் இன்னும் நிரந்தரமாக அழியவில்லை என்பதால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதும் பெற்றோருக்கு பயம்தான்.இந்த நிலையில் ஒமிக்ரான் போன்ற தீங்கு விளைவிக்கும் புதிய மாறுபாடுகள் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. அப்படியானால் குழந்தைகளின் படிப்பு மீண்டும் வீட்டிலிருந்து தான் என்ற நிலை உருவாகும். ஆனால் உங்கள் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே மிகத்திறமையாக பாடம் கற்றுக்கொள்ள வைக்க சில விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் போதும்.

படிப்புக்கு என வீட்டில் தனி இடத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்:

பொதுவாக, குழந்தைகளின் கவனம் மிக எளிதில் திசை திரும்பி விடும். அதிலும் அவர்கள் வீட்டில் இருக்கும் போது அவர்களால் தங்கள் ஆன்லைன் வகுப்பில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடியாது. ஆனால் இதற்கு ஒரு தீர்வு உண்டு. நீங்கள் உங்கள் குழந்தைகளின் படிப்புக்கு என ஒரு தனி இடத்தை தயார் படுத்திக்கொடுக்கலாம். படிப்பதற்காக அவர்களுக்கு ஒதுக்கும் பகுதியில் போதுமான வெளிச்சம், வசதியான இருக்கை மற்றும் வேகமான இன்டர்நெட் வசதி ஆகியவை இருக்கிறது என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.உரைக்குப் பதிலாக காட்சிகளைப் பயன்படுத்தவும் :

ஆன்லைன் கல்வி ஒரு மேலாதிக்க முன்னுதாரணமாக மாறியுள்ள நேரத்தில், புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளைப் படிப்பதை விட வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக்கொடுப்பது மற்றும் தெளிவுபடுத்துவது எல்லா வகையிலும் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புத்தகத்தில் இருக்கும் வரிகளை படித்து புரிந்துகொள்வதை விட அவர்கள், விளக்க வீடியோக்கள் மூலம் தெளிவாக ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடியும்.

இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? ஒரு ஆண்டுக்குள் எதிர்கொள்ளப்போகும் சவால்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

உங்கள் வீட்டை நிறுவனமயமாக்குவதற்கான நடைமுறைகளைச் செய்யுங்கள் :

நிறுவனங்கள் கடினத்தன்மையைக் குறிக்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்தை தவிர ஒழுக்கம், பண்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கற்றுத்தரப்படும். அந்நாள் வீட்டில் இருந்து படிக்கும் போது அது அவ்வளவு சாத்தியமானதாக இருக்காது. எனவே உங்கள் குழந்தைகளின் படிப்பை ஒழுங்கமைக்க வீட்டிலேயே ஒரு வழக்கத்தை உருவாக்க முயற்சிக்கவும். அதிலிருந்து சிறந்த பலனைப் பெற வீட்டில் உள்ள அனைவரும் அதைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.கற்றலுடன் பரிசோதனை செய்யுங்கள் :

ஒவ்வொரு குழந்தைக்கும் விஷயங்களை உணருவதிலும், பாடங்களை உள்வாங்குவதிலும் தனித்துவமான பாணி உள்ளது. அதன்படி மனதிற்குப் பொருந்தக்கூடிய சரியானதைத் தேர்ந்தெடுக்கும் வரை வெவ்வேறு கற்றல் முறைகளை முயற்சிப்பது குழந்தைகளின் கற்றலைச் செம்மைப்படுத்துவதற்கான சரியான வழியாகும். பள்ளி அல்லது கல்லூரியில் இந்த சோதனை முறைகளை செய்து பார்ப்பது கடினம். ஆனால், வீட்டில், இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம். எனவே, சரியான செய்முறையை நீங்கள் அடையும் வரை, உங்கள் குழந்தைகளின் கற்றல் முறைகளை நீங்கள் பரிசோதித்து பார்க்கலாம்.

பாடத்தை ரிவைஸ் செய்வது அவசியம் :

உங்கள் படிப்பை முடித்த பிறகு, உங்கள் ஆசிரியர் ஆன்லைன் சேஷனை மூடிய பிறகு, நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுப்பது இயல்பானது மற்றும் ஆரோக்கியமானதும் கூட. ஆனால், அன்றைய நாள் முடிவதற்குள், அந்த நாளில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பாடங்களையும் ரிவைஸ் செய்வது மிகவும் முக்கியம். ஓய்வெடுக்க போதுமான நேரத்தை செலவிட்ட பிறகு, உங்கள் நாளை மறுபரிசீலனை செய்ய இன்னும் சிறிது நேரம் இருக்கும். அன்றைய கற்றலை மீண்டும் தொடர அந்த நேரத்தை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Online class, Parenting Tips

அடுத்த செய்தி