பெண் ஒருவர் தாயாக இருப்பதுதான் சவால் மிகுந்த காரியம் ஆகும். ஏனென்றால், தன்னுடைய அன்றாட பணிச்சுமைகளையும் அவர் கவனித்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், தன்னுடைய குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். இந்த இரண்டில் எது ஒன்றையும் விட்டுவிடாமல் சமாளிப்பது என்பது சிக்கலுக்கு உரிய காரியம் ஆகும்.
அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த சுமைகள் என்பது அப்படியே இரட்டிப்பாக இருக்கும். மற்ற அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அதே வேளையில், தன் நலன் குறித்து சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விடுகிறது.
இதனால், வேலை செய்யும் பெண்களுக்கு நேர மேலாண்மை என்ற சாதுர்யமான குணம் அவசியமாகிறது. அனைத்து விஷயத்தையும் நேரா, நேரத்திற்கு முடித்து விடுகின்ற அதே சமயம், கொஞ்சம் தனக்கென்று நேரம் ஒதுக்கி ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் வேண்டும்.
ஆகவே, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கைக்கு இடையே ஒரு பெண் எப்படி தனக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம் என்பதற்கு இங்கே சில டிப்ஸ்களை பட்டியலிடுகிறோம்.
அன்றைய நாளை திட்டமிடுங்கள்
வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தன்னுடைய கடமைகளை அனைத்தையும் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும். எந்தெந்த பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும், எந்த நேரத்திற்கு எதை செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
தினசரி இரவு தூங்கச் செல்லும் முன்பாக அடுத்த நாள் என்னென்ன பணிகள் இருக்கின்றது என்பதை மனதில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும் மற்றும் நேர மேலாண்மை செய்ய முடியும்.
பலமுனை வேலைகள்
ஒரே சமயத்தில் பல தரப்பு வேலைகளை சேர்த்து செய்வது மூலமாக நேரத்தை சேமிக்க முடியும். உதாரணத்திற்கு நீங்கள் வீட்டிலேயே அலுவலக வேலையை செய்பவர் என்றால், அதே சமயத்தில் வீட்டு வேலைகளையும் செய்து முடித்துவிட வேண்டும்.
மறுப்பு தெரிவிக்கவும்
பல சமயங்களில் அலுவலகப் பணி சார்ந்து அதிக நெருக்கடி கொடுப்பார்கள். அலுவலக வேலைகளை செய்யும்போது பிற வேலைகளுக்கு நேரம் இருக்காது. ஆகவே, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பொறுப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். சில சமயம் அதிக பொறுப்புகளுக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலமாக தேவையற்ற மனச்சுமையை குறைக்கலாம்.
ஷார்ட் கட்ஸ் பின்பற்றவும்
எந்தவொரு வேலையையும் திட்டமிட்டு, வேகமாக முடிப்பதற்கான சில குறுக்கு வழிகளை பின்பற்றி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு வீட்டில் சமையல் செய்வதும் உங்கல் பொறுப்பு என்றால் காலை உணவுக்கு சமைக்க வேண்டிய காய்கறிகளை இரவே வெட்டி வைத்து விடலாம். ஒரு பக்கம் சமையல் செய்யும்போதே, அதற்கு பயன்படுத்திய மற்ற பாத்திரங்களை அப்போதே கழுவி வைத்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lifestyle, Time management