முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளதா..? தாய் , சேய் இருவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்..!

இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளதா..? தாய் , சேய் இருவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்..!

புதிய தாய்மார்கள் COVID-19 நோயால் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படக்கூடாது . இது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும். தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

புதிய தாய்மார்கள் COVID-19 நோயால் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படக்கூடாது . இது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும். தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

புதிய தாய்மார்கள் COVID-19 நோயால் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படக்கூடாது . இது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும். தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பேரழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது என்பது மக்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் புதிதான். பாரபட்சமின்றி தாக்கும் கொரோனா பிறந்த குழந்தையைக் கூட விட்டு வைப்பதில்லை. அப்படி புதிதாக பிறந்த குழந்தையையும் , அம்மாவையும் இந்த கொரோனா வைரஸிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.

இந்த நெருக்கடி காலம் புதிய அம்மாக்களுக்கு சற்று கடினம்தான். பொதுவாகவே குழந்தை பிறந்தபின் ஹார்மோன் மாற்றங்களால் புதிய அம்மாக்கள் மன அழுத்தம், தனிமை , பதற்றம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதுண்டு. தற்போது அதோடு இந்த கொரோனா பயமும் தொற்றிக்கொண்டிருப்பது அவர்களை மேலும் பாதிக்கும். எனவே வீட்டில் இருப்பவர்கள்தான் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருப்பது அவசியம்.

கைக்குழந்தையை பாதுகாக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை :

குழந்தை இருக்கப்போகும் அறையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து வையுங்கள். அடிக்கடி சுத்தம் செய்யவும் மறவாதீர்கள்.

குழந்தை மற்றும் அம்மா இருவரும் அந்த அறையிலேயே இருப்பது நல்லது. புதிதாகக வரும் நபர்கள் அல்லது அடிக்கடி வெளியே சென்று வரும் குடும்ப நபர்களையோ அந்த அறையில் நுழைவதை தவிருங்கள்.

குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசி கட்டாயம் - ஏன் தெரியுமா?

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் முகமூடி அணிய வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அம்மாக்கள் முகமூடியை அணியலாம். அம்மாக்கள் சரியான முறையில் சுகாதாரத்தை பின்பற்றுவது அவசியம் மற்றும் குழந்தைக்கு பால் கொடுக்கும் முன்பு சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை தவறாமல் கழுவ வேண்டும்.

புதிய தாய்மார்கள் COVID-19 நோயால் பாதிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படக்கூடாது . இது மனப்பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் குழந்தைக்கு உங்கள் கவனிப்பு கிடைக்காமல் போகலாம். எனவே எப்போதும் பாசிடிவான எண்ணங்கள்-உடன் உங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழியுங்கள்.

குழந்தையை ஈன்ற அம்மாக்கள் பின்பற்ற வேண்டியவை :

7-8 மணி நேர தூக்கத்தை பின்பற்றுங்கள்.

30 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி, நடைபயிற்சி , தியானம் போன்றவற்றை பின்பற்றுங்கள்.

நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் மார்பக ஆரோக்கியத்தை பாதிக்கிறது..!

குறைவான கொழுப்பு , குறைவான உப்பு, அதிக நார்ச்சத்து இந்த மூன்று ரூல்ஸை உணவில் பின்பற்றுங்கள்.

அதிகமாக தண்ணீர் குடியுங்கள். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுங்கள். வீடியோ கால் மூலம் மெடிக்கல் செக்-அப் செய்துகொள்ளுங்கள்.

First published:

Tags: Covid-19, New born baby, New Mom