மழைக்காலம் வந்துவிட்டாலே குழந்தைகளை பாதுகாப்பதுதான் பெற்றோர்களின் முதல் பொருப்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் மழைக்கால தொற்றுகளால் எளிதில் தாக்கப்படக் கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில் நோய்க்கு காரணமாக இருக்கும் விஷயங்கள் என்ன..? அவற்றிலிருந்து எப்படி தற்காப்பது என்பதை பற்றி விவரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் கல்பனா பரணி.
நோய் உண்டாக காரணம்..?
பொதுவாக மழைக்காலத்தில் தொற்று நோய் என்பது கொசு , காற்று, தண்ணீர் , கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றின் மூலமாகவே பரவுகிறது. குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவுவதுதான் நோய்க்கான முக்கிய காரணமாக இருக்கும். அப்படி கொசுக்கள் மூலமாக டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கும். இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்கள் தேங்கியிருக்கும் நீர்நிலைகளிலிருந்தே பெரும்பாலும் உருவாகின்றன.
கொசுக்கள் மூலமாக பரவும் நோயால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது..?
அதிகப்படியான காய்ச்சல், சளி, சோர்வு, அசதி போன்ற அறிகுறிகள் தென்படும். நீங்கள் வழக்கமாக கொடுக்கும் மருந்து , மாத்திரைகளுக்கு அந்த காய்ச்சல் குணமாகாமல் நீடிக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.
கொசுக்கள் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்..?
வீட்டை சுற்றிலும் நீர் தேக்கங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
வீட்டில் தேவையில்லாமல் தண்ணீர் நிரப்பி வைப்பதை தவிருங்கள். தேவைப்படும்பட்சத்தில் அவற்றை நன்கு மூடி வையுங்கள்.
வீட்டை சுற்றி சாக்கடைகள் இருந்தால் வீட்டின் ஜன்னல், கதவுகளில் கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.
வீட்டில் குப்பைகளை சேர்க்காமல் அடிக்கடி அப்புறப்படுத்திவிடுங்கள்.
குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..?
குழந்தைகளின் கை , கால் என உடலை முற்றிலும் மூடும் ஆடைகளை அணிந்துவிடுங்கள்.
கைகள் , கால்களில் கிளவுஸ் அணிந்துவிடுங்கள்.
வீட்டு கதவு , ஜன்னல்களை மாலையில் மூடி வையுங்கள்.அடிக்கடி கதவுகளை திறந்து மூடாமல் இருங்கள்.
காலை நேரத்தில் காற்று வந்து செல்லுமாறு காற்றோட்டாமாக திறந்து வையுங்கள்.
குழந்தைகளுக்கு கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.
அவர்களுக்கு கொசு கடிக்காமல் இருக்கும் லோஷன்களை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக மஸ்கிடோ ரிபெலண்ட் பேச்சஸ் என்று ஆடைகளில் ஒட்டக்கூடிய வகையில் பிரத்தியேகமாக கிடைக்கிறது. அவற்றை குழந்தைகள் அணிந்திருக்கும் ஆடையில் ஒட்டிவிடலாம். இதனால் பக்கவிளைவுகளும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baby Care, Kids Health, Monsoon, Monsoon Diseases