கொரோனா வைரஸின் 3வது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ்

கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் உபாதைகளை அவர்கள் எதிர்கொள்ள முடியுமா?என்று பல சந்தேகத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.

  • Share this:
கொரோனா 3வது அலை இன்னும் சில மாதங்களில் வீரியமாகும் என கூறப்படுகிறது. இந்த தகவல் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலை முதியவர்களை பாதித்த நிலையில், 2வது அலையில் நடுத்தர வயதினர் அதிகளவு பாதிக்கப்பட்டனர். பச்சிளம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டாலும், குறிப்பிடும் அளவுக்கான சேதம் அல்லது உபாதைகளை சந்திக்கவில்லை. 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்களோ? என்ற அச்சம் பரவலாக காணப்படுகிறது.

ஆனால், இந்த சந்தேகம் தேவையற்றது என பல ஆய்வுகள் கூறுகின்றனர். பெற்றோருக்கு இருக்கும் கவலை என்னவென்றால், ஒருவேளை பாதிப்பு அதிகமானால், அவர்களுக்கு சிகிச்சை எப்படி கொடுப்பது? கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் உபாதைகளை அவர்கள் எதிர்கொள்ள முடியுமா? என கவலையில் உள்ளனர். பதின்பருவத்தினருக்கான தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருக்கும் சூழலில், தடுப்பூசிகள் இல்லாத குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது மீண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது தான் பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது.

இந்தக் கேள்விகளுக்கு பதில் கொடுப்பது கடினம் என்றாலும், வரும்முன் காப்பது என்பது சிறந்த வழி என்பதை மறந்துவிடக்கூடாது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். வைரஸ் பரவல் இல்லை என்ற மெத்தனப்போக்கு, 3வது அலை பரவலுக்கான பிறப்பிடம் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.காய்ச்சல், இருமல், தொடர் சலி, சோர்வு, தொண்டை கரகரப்பு, வயிற்றுப்போக்கு, வாசனை இழப்பு, செரிமானப் பிரச்சனைகள், வாந்தி, தலைவலி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி ஆகிய ஏதேனும் ஒன்று உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் கூட, அதனை அலட்சியமாக கருதாமல் உடனடியாக மருத்துவரை சென்று சந்திக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளின்படி குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீண்ட நாள் கொரோன அறிகுறிகள் குழந்தைகளிடமும் இருக்கிறது. தொற்றில் இருந்து மீண்டு வரும் குழந்தைகள் கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர்.

Also Read : இந்த 5 பழக்கங்களை நீங்கள் பின்பற்றி வந்தால் உடனடியாக மாற்றுங்கள்..அதனால், 3வது அலை வேகமாக பரவுவதற்கு முன்பிருந்து கவனமாக இருப்பது நல்லது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த குழந்தைகள் ஒரு மாதம் வரையில் கொரோனாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் வலி, வாந்தி உள்ளிட்ட உபாதைகளை எதிர்கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றனர். அதனால் பெற்றோர் செய்ய வேண்டியது என்னவென்றால், 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் மாஸ்க் அணிவிக்க வேண்டும். பொது இடங்கள் அல்லது மக்கள் கூடும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல நேர்ந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.மேலும், குழந்தைகளுக்கு முறையாக மாஸ்க் அணிய அல்லது அணிந்த மாஸ்கை கழற்ற தெரியாது. தொடர்ச்சியான இருமல் வரும்போது மாஸ்க் கழற்ற முடியாமல் சிரமப்படுவார்கள், பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பின் கீழ் எப்போதும் அவர்களை வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் சௌகரியத்துக்காக, கொரோனா ரூல்ஸூகளை பின்பற்றுவதில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது.

வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சமைக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகளவு சேர்த்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொண்டு, தூங்கி எழுவதை கடைபிடியுங்கள். இந்த விஷயங்களை முறையாக கடைபிடித்தால், ஒருவேளை 3வது அலை குழந்தைகளின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்துபவையாக இருந்தால் கூட, நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: