• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • டீன் ஏஜ் பிள்ளைகளின் மன அழுத்தத்தை குறைக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

டீன் ஏஜ் பிள்ளைகளின் மன அழுத்தத்தை குறைக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

மன அழுத்தம்

மன அழுத்தம்

டீன் ஏஜ் வயதினர் சில சூழ்நிலைகளில், மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

  • Share this:
எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்கள். இதனால் சில பெற்றோர்கள் தங்களது விரும்பங்களை தங்களது பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். இது வருந்தத்தக்கது. இதனால் டீன் ஏஜ் வயதினர் சில சூழ்நிலைகளில், மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளின் வாழ்க்கையை சுலபமாக எதிர்கொள்ள பெற்றோராக நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.

சுயமாக பகுப்பாய்வு செய்ய அனுமதியுங்கள் :

தங்கள் நேரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ள வேண்டும். அதிவேகமாக செயல்படும் இளைஞர்கள் தங்கள் லட்சியங்களைப் பின்தொடர்வதற்கும், டீன் ஏஜ்ஜை அனுபவிப்பதற்கும் இடையில் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் சோர்வாக உணரக்கூடும். அவர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். மேலும் அவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து சிந்திக்க அனுமதியுங்கள்.

விவாதங்களைக் குறைக்கவும் :

பள்ளி போட்டிகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பது மிக முக்கியமானது என்றாலும், நீங்கள் விவாதங்களை குறைவாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் அதிகப்படியான விவாதங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அவர்களின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்வது அவசியம், ஆனால் இது தினசரி அடிப்படையில் செய்ய கூடாது. தினமும் இதுகுறித்து பேசி கொண்டே இருந்தால் டீன் ஏஜ் வயதினருக்கு விரும்பம் இருக்காது.



குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுங்கள் :

உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு ஓய்வு நேரத்தை திட்டமிடுவதை நீங்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளி அல்லது பாடத்திட்டங்களைப் பற்றி பேசாமல் உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துங்கள். தற்போது அனைத்து வயதினரும் ஸ்மார்ட்போனை கையில் வைத்து கொண்டே சுற்றுகின்றனர். எனவே சமூக ஊடகங்களால் திசைதிருப்பப்படாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வழிவகை செய்யுங்கள்.

உங்கள் கணவர் கடுமையான கோபக்காரரா..? அவரை சமாளிக்க சூப்பரான சில டிப்ஸ்..!

மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்

சில பெற்றோர்கள் முதல் ரேங்க் ஒரு கிரேடு வாங்க வேண்டும் என நினைப்பார்கள். குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்த்துவது நல்லது அதே நேரத்தில் மதிப்பெண்கள் மட்டும் தான் படிப்பை தீர்மானிக்கிறது என கூறிவிட முடியாது. இதன் பொருள் நீங்கள் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் அவர்களை திட்டிக்கொண்டே இருப்பது தவறானது. இது அவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.



மனதை அமைதிப்படுத்துங்கள் :

மனதை அமைதிப்படுத்துவது என்பது அமைதியான எண்ணங்களை சிந்திப்பது, ஆழ்ந்த சுவாசம், தியானம் மற்றும் தசைகளை தளர்த்துவது ஆகியவை அடக்கும். இது மன அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். இதற்கு யோகா அல்லது தியானத்துடன் உங்கள் நாளை தொடங்கலாம்.

ஆரோக்கியமான வீட்டுச் சூழலை பேணுங்கள் :

ஆரோக்கியமான வீட்டுச் சூழலை வைத்திருப்பது டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவும். வீட்டில் உள்ள அனைவரும் தங்களது நேரத்தை பிற குடும்ப உறுப்பினர்களுடன் செலவழிகின்றனரா? என்பதை கவனிக்க வேண்டும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவினால் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பதட்டத்தைத் தணிப்பதற்கும் உதவுகின்றன.



உங்கள் அன்பை வெளிப்படுங்கள் :

நீங்கள் என்ன தான் கண்டிப்பான பெற்றோராக இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் மீது அளவுகடந்த பாசம் மனதில் இருக்கும். அதனை உங்கள் பிள்ளைகளிடம் வெளிப்படுத்துங்கள். நீங்கள் அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்தாலும் கூட அதில் அவர்கள் மீது அக்கறை உள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள். உங்கள் அன்பு ஒருபோதும் குறையாது என்பதை அவர்களிடம் அடிக்கடி சொல்லுங்கள். இது உங்களிடையேயான உறவை பலப்படுத்தும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: