ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பல மாதங்களுக்கு பின் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய அட்வைஸ்...

பல மாதங்களுக்கு பின் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய அட்வைஸ்...

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

குழந்தைகள் மன அழுத்தத்தை வெளிப்படுத்தா விட்டாலும் கூட, பெற்றோர்கள் அவர்களின் பயம் மற்றும் கவலைகளை கண்டறிந்து மீண்டும் தைரியமாக பள்ளிக்குச் செல்ல உதவ வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா தோற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பல மாணவர்கள் தங்களது பள்ளிகளின் நேரடி வகுப்புகளுக்கு திரும்பி இருக்கின்றனர். 2 நாள் லீவ் எடுத்த பிறகு பள்ளிக்கு செல்லும் போதே பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் தான் பள்ளி செல்கிறோம் என்ற பதற்றம் மற்றும் கவலை தொற்றி கொள்ளும். இன்னும் சில குழந்தைகள் இனம் புரியாத பயத்துடனே பள்ளிகளுக்கு செல்ல தயாராவார்கள். இந்த சூழலில் கொரோனாவின் கொடுமையான 2 அலைகளுக்கு பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து பள்ளிகளுக்கு செல்வது என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களுது பெற்றோர்களுக்கும் சவாலாகவே இருக்கும்.

அதுவும் இதுவரை இல்லாத பழக்கமாக பள்ளிகளுக்கு மாஸ்க் அணிந்து செல்வது, சானிடைசர் பயன்படுத்துவது சக குழந்தைகளுடன் முன்பு போல் விளையாட முடியாமல் சமூக இடைவெளியை பராமரிப்பது உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவது மனரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். இந்த நேரத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கும் மீண்டும் செல்ல வேண்டும் என்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க குழந்தைகளுக்கு எப்படி உதவுவது என்பதை பற்றி பார்க்கலாம்.

இரண்டாவது அலை ஓய்ந்துள்ள காரணத்தால் பள்ளிகள் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டடுள்ளன. மாஸ்க் மற்றும் ஒருவருக்கொருவர் போதிய இடைவெளியுடன் மாணவர்கள் புதியதொரு இயல்பு நிலையுடன் கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு செல்ல துவங்கி இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தினருடன் ஒன்றாக இருந்து விட்டு திடீரென்று அவர்களை விட்டு பள்ளிக்கு செல்ல துவங்குவது அல்லது கோவிட் தொற்றுக்கு பயப்படுவது உள்ளிட்டவை குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். இதை அவர்கள் சில நேரங்களில் வெளிப்படுத்தா விட்டாலும் கூட, பெற்றோர்கள் அவர்களின் பயம் மற்றும் கவலைகளை கண்டறிந்து மீண்டும் தைரியமாக பள்ளிக்குச் செல்ல உதவ வேண்டும்.

பிறந்த குழந்தையை சிறப்பாக வளர்க்க அம்மாக்களுக்கு ‘நச்’ டிப்ஸ்!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் முதலில் நேர்மறையாக இருக்க வேண்டும். கோவிட் அபாயம் இன்னும் நீடிக்கும் நிலையில், அவர்கள் முன் உங்கள் கோவிட் தொடர்பான பயத்தை வெளிக்காட்டாமல், தற்காப்புக்காக குழந்தைகள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை அவர்களை பயமுறுத்தாத வகையில் எடுத்து கூறி பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

பல மாதங்கள் வீட்டிலேயே இருந்ததால் பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் அவர்களுக்கு தற்போதைய புதிய ஷெட்யூல் சற்று சிரமமாகவே இருக்கும். பள்ளி செல்ல துவங்கி சில நாட்களுக்கு நேரத்திற்கு பள்ளி கிளம்பி செல்வதே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி அது அவர்களின் மனஅழுத்தத்திற்கு காரணமாக அமையும். இதை தவிர்க்க பள்ளி சுற்றுப்புறங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அவர்கள் பழக பெற்றோர்கள் உதவ வேண்டும்.

பள்ளிக்கு செல்வதை குழந்தைகள் எப்படி உணருகிறார்கள் என்பதை பெற்றோர் கவனிப்பது முக்கியம். சட்டென்று பள்ளி வாழ்க்கைக்கு செல்லும் மாற்றத்தை தனியாக அவர்கள் அனுபவிப்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைகளிடம் அவர்கள் பள்ளியில் எதிர்கொள்ளும் சூழல் பற்றி பேசி அவர்களுக்கு ஏதாவது தேவை அல்லது அசௌகரியம் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

அதே போல குழந்தைகளை மாற்றத்திற்கு முன்பே தயார் செய்வதும் அவர்களுக்கு மீண்டும் பள்ளி செல்வதில் ஏற்படும் மனரீதியான கவலைகளை குறைக்க உதவும். தற்போது நம் மாநிலத்தில் 9 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துள்ள நிலையில், விரைவில் 1 - 8 வகுப்பு குழந்தைகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீண்டும் பள்ளிக்கு செல்வது பற்றி குழந்தைகளிடம் பேசி மீண்டும் பள்ளி செல்வதற்கும், அங்கே என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது பற்றியும் விளக்கி மேலும் அது தொடர்பாக குழந்தைகளுக்கு எழும் கேள்விகள் மற்றும் கவலைகளுக்கு பதிலளித்து அவர்களை தயார்படுத்தலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Corona safety, Kids Care, School Reopen