ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசியால் உண்டாகும் பக்கவிளைவுகளை எதிர்கொள்வது எப்படி..?

சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசியால் உண்டாகும் பக்கவிளைவுகளை எதிர்கொள்வது எப்படி..?

தடுப்பூசி

தடுப்பூசி

பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் போது என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதே போல குழந்தைகளுக்கும் வெளிப்படலாம். இதைக் கண்டு பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதிலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடும் திட்டம் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்படும் போது, தடுப்பூசியில் இருக்கும் மருந்து வேலை செய்கிறது என்பதற்குச் சான்றாக உடலில் சில பக்க விளைவுகள் ஏற்படும்.

பக்கவிளைவுகள் ஏற்படுவது, உடலுக்குள் ஆன்டிபாடிகள் உருவாகுவதை குறிக்கிறது. பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் போது என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதே போல குழந்தைகளுக்கும் வெளிப்படலாம். இதைக் கண்டு பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம்.

தடுப்பூசி போடப்பட்ட பின்பு ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன

சிறுவர்களுக்கு கோவிட் போடப்பட்ட பின்பு ஏற்படக்கூடிய மிக இரண்டு பொதுவான பக்க விளைவுகள் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகும். இரண்டு பக்க விளைவுகளுமே இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் குறைந்துவிடும் அல்லது முழுவதுமாகவே நீங்கிவிடும்.

சிலருக்கு சோர்வு தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை கோவிட் தடுப்பூசி போட்டபின் ஏற்படலாம். இதுவும் தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் இயல்பான அறிகுறிகள்தான் எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

தடுப்பூசி ஏற்படும் விளைவுகளால் பாதிப்பு ஏற்படும்போது எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பெரும்பாலானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் அறிகுறிகளின் தாக்கம் குறைந்துவிடும் அல்லது முழுமையாக நீங்கிவிடும். இரண்டு நாட்களுக்கும் மேல் வலி அல்லது வீக்கம் அல்லது காய்ச்சல் குறையவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பெரிய அளவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

தடுப்பூசி செலுத்திய பின் பிள்ளைகளை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும்

தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் கண்டிப்பாக ஓரிரு நாட்களுக்கு வலி இருக்கும். தடுப்புசி அந்த இடத்தை சுத்தமான துணியால் துடைத்து, கோல்ட் பேக் எனப்படும் அல்லது சில்லென்ற துணியை வைத்து வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்பு வலி நிவாரணியை கொடுக்கக்கூடாது என்ற அறிவிப்பு வெளியாகி சமீபத்தில் உள்ளது. கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி நிறுவனம் பாரத் பயோடெக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்பு வலியை அல்லது காய்ச்சலை குறைப்பதற்காக பாராசெட்டமால் மாத்திரையைக் கொடுக்க கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள் நீர் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் எனவே திரவ உணவுகள் அல்லது ஆரோக்கியமான பானங்களுடன், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

வாக்சின் போட்டுக்கொண்ட பின்பு ஓய்வு அவசியம் தேவை. இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பொருந்தும். எனவே தடுப்பூசி செலுத்தப்பட்ட பிள்ளைகள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதையும், நன்றாக ஓய்வெடுக்கப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Vaccine, Kids Care, Parenting Tips