வீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

திடீரென வந்த இந்த நெருக்கடியால் பலரும் என்ன செய்வது , இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றனர்.

வீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?
திடீரென வந்த இந்த நெருக்கடியால் பலரும் என்ன செய்வது , இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றனர்.
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே பலரும் அலுவலகப் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள பெண்கள் அலுவலகப் பணிகளையும் செய்துகொண்டு அதேசமயம் குழந்தைகளையும், வீட்டையும் சமாளித்து வருகின்றனர்.

திடீரென வந்த இந்த நெருக்கடியால் பலருக்கும் என்ன செய்வது , இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றனர். அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்..!

திட்டமிடுங்கள் : காலை எழுந்ததும் முன்யோசனையின்றி எழுந்து வேலைகள் செய்வதை விட, முதல் நாளே என்ன செய்வது என பட்டியலிடுங்கள். என்ன சமையல், என்னென்ன அலுவலக வேலைகள் உள்ளன என்பனவற்றை பட்டியலிட்டு , திட்டமிட்டு அதற்கென நேரத்தையும் வகுத்துக்கொள்ளுங்கள். இதனால் டென்ஷன் ஃப்ரீயாக வேலை செய்யலாம்.


உதவி : அனைத்து வேலைகளையும் நீங்களே தலையில் போட்டுக்கொள்ளாமல் உங்கள் கணவருக்கும் வேலைகளைப் பிரித்துக்கொடுங்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள, சமையல் செய்ய என அனைத்திலும் பங்கு போட்டு செய்தால் பிரச்னை இருக்காது. இருவரும் வீட்டில் இருந்தும் அலுவலகப் பணியால் பிஸியாக இருப்பீர்கள். இப்படி பகிர்ந்து செய்யும்போது கணவருக்கும் உங்களுக்குமான நெருக்கமும் அதிகரிக்கும்.

தொடர்பு : கணவன் மனைவி இருவரும் வீட்டில் அலுவலகப் பணி காரணமாக குழந்தையிடம் பேசுவதைத் தவிர்த்துவிடாதீர்கள். அதேபோல் தொல்லை செய்கிறார்கள் என்பதால் செல்ஃபோனை கையில் கொடுக்காதீர்கள். மூளை வேலைசெய்யும் வகையில் சில ஆக்டிவிட்டீசை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். அவ்வப்போது 15 நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி இருவரும் குழந்தைகளோடு விளையாடுங்கள், உரையாற்றுங்கள்.

மூளைக்கு வேலை : ஆர்ட் கிராஃப்ட் செய்வது, ஓவியங்கள் வரைவது என்பன போன்ற விஷயங்களை அவர்களுக்கு வேலையாகக் கொடுங்கள். செல்ஃபோன், வீடியோ கேம்ஸ் கொடுத்து அடிமையாக்கிவிடாதீர்கள்.

பகிர்தல் : வளர்ந்த பிள்ளை, சொன்னால் புரிந்துகொள்ளும் பிள்ளைகள் எனில் வீட்டு வேலைகளை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள். அவற்றை சிறப்பாக செய்தால் பாராட்டு தெரிவித்தல், பரிசு தருதல் என ஊக்குவியுங்கள்.

விளையாட்டு : ஓய்வாக இருக்கும் நேரத்தில், மாலை நேரத்தில் குடும்பமாக இணைந்து இண்டோர் கேம்ஸ் விளையாடுங்கள்.

தனி அறை : குழந்தைகளிடமிருந்து விலகியிருக்கும் வண்ணம் தனி அறையில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளுங்கள். திடீர் கான்கால் மீட்டிங், வீடியோ கால்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

நேரம் ஒதுக்குங்கள் : இதற்கிடையில் உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதும் அவசியம். அப்போதுதான் உங்கள் மனநிலையும் ரிலாக்ஸாக இருக்கும். அந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.

குறிப்பு : அனைத்து நேரங்களிலும் அனைவராலும் சிறப்பாக எதையும் செய்துவிட முடியாது. தவறுகள் வருவது சகஜம். நெருக்கடிகள் வருவதும் எதிர்பாராதவை. எனவே அவற்றை நினைத்து வருத்தப்படாமல் சமாளிக்கும் துணிச்சலை வளர்த்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நிரந்தரமாக்குங்கள்.

பார்க்க :

 

 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்