ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

3 வயதைக் கடந்த குழந்தைகளை இரவு தூங்க வைக்க சவாலாக உள்ளதா..? இப்படி செஞ்சு பாருங்க..!

3 வயதைக் கடந்த குழந்தைகளை இரவு தூங்க வைக்க சவாலாக உள்ளதா..? இப்படி செஞ்சு பாருங்க..!

தூங்குவதில் சிரமம் : இரவு தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பார்கள். தூங்காமல் உங்களையும் தூங்க விடாமல் தொந்தரவு செய்வார்கள். சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக பகலில் நன்கு தூங்குவார்கள்.

தூங்குவதில் சிரமம் : இரவு தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பார்கள். தூங்காமல் உங்களையும் தூங்க விடாமல் தொந்தரவு செய்வார்கள். சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக பகலில் நன்கு தூங்குவார்கள்.

பிடித்த கதாபாத்திரங்கள், விரும்பும் கதைகளை சொல்லுங்கள். இது அவர்கள் தூங்குவதற்கு மட்டுமல்ல கவனிக்கும் திறனும் அதிகரிக்கும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கைக்குழந்தைகளை இரவு தூங்க வைப்பது ஒரு சவால் என்றால் வளர்ந்த 3 வயது குழந்தைகளை தூங்க வைப்பது அதைவிட சவால். விளையாட்டு ஆர்வம், அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இந்த வயதில்தான் உதிக்கிறது என்பதால் அவர்களுக்கு தூக்கம் மீது வெறுப்பு உண்டாகிறது. இருப்பினும் அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை சமாளித்து அவர்களை தூங்க வைக்க என்ன செய்யலாம்..?

  சூடான குளியல் : அவர்களுக்கு தூக்கத்தை வர வைக்க தூங்கும் முன் வெதுப்பான நீரில் குளிக்க வைத்தால் படுத்தவுடன் தூக்கம் வரும். குளிக்க வைப்பது மட்டுமன்றி இரவு பல் துலக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.

  தூங்குவதற்கு தயார்படுத்துதல் : தூங்குவதற்கு அவர்களை தயார்படுத்த இரவு உடையான பைஜாமா போன்ற உடைகளை அணியுங்கள். தூங்க வேண்டும் என அரைமணி நேரத்திற்கு முன்பே சொல்லிக்கொண்டே இருங்கள். இதனால் அவர்களின் மனநிலை அதற்கு தயாராகும்.

  தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே படுக்கை அறையை தூங்குவதற்கு ஏற்ப குளுமையாகவும், இரவு விளக்கை போட்டு தயார் நிலையில் வையுங்கள்.

  விளையாட்டு : உள்ளே சென்றதும் தூங்க வைக்காமல் அவர்களுடன் சிறிது நேரம் விளையாடுங்கள். இதனால் உங்களுக்கும் குழந்தைக்குமான உறவு சிறப்பாக இருக்கும். இதனால் அவர்களின் மன மகிழ்ச்சி நிம்மதியான தூக்கத்தை தரும்.

  கதை நேரம் : அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரங்கள், விரும்பும் கதைகளை சொல்லுங்கள். இது அவர்கள் தூங்குவதற்கு மட்டுமல்ல கவனிக்கும் திறனும் அதிகரிக்கும்.

  உங்கள் பிள்ளைகளின் செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளதா..? இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க சொல்லுங்கள்..!

  பாட்டு பாடலாம் : கதை கேட்கவில்லை. பாட்டு பிடிக்கும் எனில் பாட்டு பாடுங்கள்.

  குட்நைட் : மேலே குறிப்பிட்ட விஷயங்களை தினசரி செய்தாலே அவர்களுக்கு தூக்கம் தானாக வந்துவிடும்.பின்பு அவர்களுக்கு அந்த தூக்க நேரம் பழக்கமாகிவிடும்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: