பொதுவாகவே பிள்ளைகள் பதின்ம வயதை நெருங்கும் போது அவர்களது பெற்றோர்களுக்கு ஒரு வித அச்சம் உண்டாக கூடும். பிள்ளைகள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு உண்டாகும் ஆபத்துக்களை பற்றி எப்போதும் பெற்றோர்கள் கவலை கொள்வது என்பது பொதுவான ஒன்றுதான்.
பின்தொடர்கள் என்பது என்ன?
பின் தொடர்கள் என்பது, ஒரு குறிப்பிட்ட நபரை இன்னொருவர் தனியாகவோ அல்லது குழுவாகவோ எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பதும் அவர் எங்கே சென்றாலும் அவரை கண்காணிக்கும் விதமாக அவர் கூடவே செல்வதும், அவர்களை அசவுகரிமாக உணர வைப்பது ஆகியவை குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.
உங்களது பிள்ளைகளை பின் தொடர்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்
உங்கள் பிள்ளைகளை அவர் வெளியே செல்லும் போது வாலிப வயது ஆண்களோ அல்லது வேறு எவரும் பின் தொடரும் போது கண்டிப்பாக இதை அவர்கள் அறிந்திருப்பார்கள். ஒருவேளை உங்கள் பிள்ளைகளுக்கு தெரியாமல் இருந்தாலும் நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் தலையிட்டு உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக உணர செய்வது அவசியம்.
* உங்கள் மகன் அல்லது மகனை திரும்பத் திரும்ப யாரேனும் தொடர்பு கொள்வது
* உங்களது பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிகாரம் காட்டுவது.
* உங்கள் பிள்ளைகள் செல்லும் அதே இடத்திற்கு அவர்களும் அடிக்கடி வருவது.
* உங்கள் வீட்டுப் பக்கம் அடிக்கடி சுற்றி தெரிவது.
* தூரத்தில் இருந்து கண்காணிப்பது.
* உன் பிள்ளைகளுக்கு சொந்தமான பொருட்களை திருடுவது.
* அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது பயமுறுத்துவது.
* ஒரு பிள்ளைகளின் வாழ்க்கை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பது
இது ஒரு அறிகுறிகள் இருந்தால் உங்கள் பிள்ளைகளை பின் தொடர்கிறார்கள் என்று பொருள்.
சைபர் ஸ்டாக்கிங்
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த நவீன யுகத்தில் பின் தொடர்தல் என்பது நேரடி வாழ்க்கையில் இல்லாமல் இணையதளம் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நிகழ்ந்து வருகிறது.
உதாரணத்திற்கு அடிக்கடி தேவையற்ற குறுஞ்செய்திகள் அனுப்புவது, பயமுறுத்துவது, சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடிப்பது, உங்கள் பிள்ளைகளின் கணினிகள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளை திருடுவது, ஹேக் செய்வது, ஜி பி எஸ் பயன்படுத்திய அவர்களின் இடத்தை அறிவது போன்றவையும் சைபர் ஸ்டாக்கிங் எனப்படும் குற்றத்தில் அடங்கும்.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாகவே இந்த பின் தொடர்தல் என்பது பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு நடப்பது தான் என்றாலும் இதனால் பெரிய ஆபத்துக்கள் நிகழ்வதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் இந்த பின் தொடர்தல் என்பது வன்முறையை பயன்படுத்துவதோ அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்துவதோ என்று நிலைக்கு சென்றால் கண்டிப்பாக பெற்றோர் இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும். முதலில் அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை திரட்டி பிறகு, அதிகாரப்பூர்வமாக போலீஸாரிடம் புகாரளிக்க வேண்டும். ஒருவேளை சைபர் ஸ்டாக்கிங் முறையில் உங்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டால் அதை பற்றியும் விரிவாக எடுத்துரைத்து உரிய பாதுகாப்பை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
Also Read : Parenting | மாதவிடாய் குறித்து குழந்தைகளுக்கு ஏன் சொல்லிக்கொடுக்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்..!
பிள்ளைகள் எப்படி பாதுகாப்பாக வைப்பது?
சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் போதும் இணையதளங்களை பயன்படுத்தும் போதும் பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சொல்லிக் கொடுக்கலாம்.
யாரேனும் பின் தொடர்கிறார்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தலாம்.
எப்போதும் மொபைல் போன் வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். ஒருவேளை ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் மக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்கச் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். இன்றைய நிலையில் நடக்கும் பல்வேறு விதமான குற்றங்களை பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு தள்ளி இருப்பது என்பதை பற்றி அறிவுறுத்தலாம்.
அதே சமயத்தில் உங்களது எல்லைகளையும் வகுத்துக் கொண்டு மிக அதிகமாக உங்களது பிள்ளைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல் இருப்பதும் அவசியமானதாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parenting, Parenting Tips, Teenage parenting